ads

5/01/2018

மிளகாய் - கூடுதல் விலை கிடைக்க -(Milagai kooduthal vilai kidaikka)

மிளகாய் - கூடுதல் விலை கிடைக்க மேற்கொள்ள வேண்டிய செய்நேர்த்தி :

மிளகாயில் பூஞ்சாணக்கொல்லிகள் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்புநிறமாக மாறியவுடன் பறிக்கலாம். பழங்களைப் பறித்த அன்றே காயப்போட வேண்டும்.

மணல் பரப்பிய களங்கள் இதற்கு ஏற்றது. மிதமான வெப்பநிலையில் காலையிலும், மாலையிலும் நான்கு நாட்கள் காயப்போட வேண்டும்.

இரவில் மிளகா பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது இலேசான படுதாவைப்போட்டு மூடி வைக்கலாம்.

மிளகாய்வற்றல் சிவப்புநிறமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தவறான சேமிப்புமுறையில் வற்றல் கருப்பு நிறமாக மாறினால் நல்லவிலைக்கு விற்கமுடியாது.

மிளகாய் வற்றலை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சாக்கு அமுக்கக்கூடாது. இதனால் வத்தல் உடைந்து எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போகலாம் என்று வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

பருத்தி, மிளகாய்க்கு கூடுதல் விலை கிடைக்க மேற்கொள்ள வேண்டிய செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.


0 comments:

Post a Comment