ads

5/16/2018

அசோலா உற்பத்தி-(AZOLLA PRODUCTION TIPS)

எளிய முறை அசோலா உற்பத்தி


தேவையான பொருட்கள்:
அசோலா இழைகள், பாலீத்தீன் விரிப்பு, சூப்பர் பாஸ்பேட் மற்றும் மாட்டுச் சானம்.

செய்முறை:
அசோலா நீரில் மிதக்கக்கூடிய ஒரு நீர்ப் பெரணியாகும். அனபீனா அசோலா என்ற நீலப்பச்சை பாசியுடன் இணைந்து தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.
நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலித்தின் காகிதத்தின் மேல் 2 செ.மீ அளவிற்க மண் இட்டு சமன் செய்யவும். இதன் மேல் 2 செ.மீ அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றிற்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து இடவேண்டும். பின்னர் இப்பாத்தியில் 5 கிலோ அசோலா தாய்வித்து இடவேண்டும். தினமும் காலை அல்லது மாலையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாட்களில் ஒரு பாத்தியில் (10X2X1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாட்களுக்கு 1 முறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித் தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகளில் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.
அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது கால்நடைகள் அவற்றை உண்பதற்குத் தயக்கம் (Feed Shyness) காட்டலாம். ஆகையால் ஆரம்ப கட்டத்தில் அசோலாவைத் தவிடு அல்லது புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்துடன் கலந்து தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும்.
கால்நடை ஒன்றிற்குஅசோலாவின் அளவு
(நாள் ஒன்றிற்கு)
பால்மாடு, உழவு மாடு1-1.5 கிலோ
முட்டை  மற்றும்
இறைச்சி கோழி,
வான்கோழி
20-30 கிராம்
ஆடு300-500 கிராம்
வெண்பன்றி1.5-2.0 கிலோ
முயல்100 கிராம்
அசோலா தீவனத்தால் முட்டைக் கோழிகளில் முட்டை விளைச்சல் அதிகமாகின்றது. அசோலா உணவிட்ட பறவைகள் 89 சதவீத முட்டை உற்பத்தியை தருகிறது. இதுவே அடர் தீவனமிட்ட பறவைகளில் 83. 7 சதவீத முட்டை உற்பத்தியே வருகிறது. அசோலா தீவனம் (122.0 கிராம்) தருவதால், அடர்தீவனம் எடுத்துக் கொள்ளும் அளவு (106.0 கிராம்) செலவு குறைகிறது. முக்கியமாக அசோலா தீவனமிடுவதால் அடர்தீவனத்தின் விலை ஒரு கிலோவுக்கு 17 ரூபாய், ஊட்டமளிப்பதில் 13 சதவீதம் சேமிக்கப்படுவதால், ஊட்டச் செலவு ஒரு நாளைக்கு ஒரு பறவைக்கு 10 பைசா என்ற அளவு குறையும். இதனால் 10000 முட்டைக்கோழிக்கான தீவனச் செலவு ஒரு நாளைக்கு 1000 ரூபாய் என்ற அளவு குறையும்.
            அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது. பாலின் கொழுப்புச்சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது. கொழுப்புச்சத்து அல்லாத திடப்பொருளின் (SNF) அளவு 3 விழுக்காடு வரை கூடுகிறது. மேலும் அசோலாவை வான்கோழி, மீன் மற்றும் முயல்களுக்கும் அளிக்கலாம்.
அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாக வழங்குவதன் மூலம் உற்பத்தி மற்றும் உடல் எடையில் முன்னேற்றம் காணலாம். மேலும் கோழி வளர்ப்பில் இடையூறாக விளங்கும் இராணிகெட் நோயினை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.

இதர பலன்கள்
அசோலா இடப்பட்ட கோழியின் முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழியின் முட்டையின் சத்து அளவை விட அதிகமாக உள்ளது.
அசோலாவினால் முட்டையின் சத்துப்பொருட்களில் ஏற்படும் முன்னேற்றம்
சத்துப்பொருள்
அசோலா தீவனம்அசோலா இல்லாத தீவனம்சத்துப்பொருள் அதிகரிப்பு
முட்டையின் எடை61.2057.406.62
ஆல்புமின் (கிராம்/100கி உண்ணும் பகுதி)3.93.414.70
குளோபுலின்
(கிராம்/100கி உண்ணும் பகுதி)
10.19.56.13
புரதம்14.012.98.52
கரோட்டீன் (மைக்ரோகிராம்/100 கி உண்ணும் பகுதி)4404058.64
         
இந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது. அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும் நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, அசோலா ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மிக முக்கியமான இடுபொருள்.

வரையறை:
பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-380 தேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. எனவே மிகவும் வறண்ட பகுதியில் இந்த தொழில்நுட்பத்தை பின்பற்றுவது கடினம்.

0 comments:

Post a Comment