ads

5/16/2018

சப்போட்டா சாகுபடி குறிப்பு-(SAPPOTTA SAGUPADI KURIPPU)


மழையின்காரணமாக சப்போட்டா மரம் நன்றாக துளிர் விட்டு பூ, பிஞ்சு வைத்துள்ளது.

அவற்றை பராமரிக்க  ஒரு ஏக்கருக்கு 500 கிலோ மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழுஉரம் அல்லது ஆட்டு எருவை  எடுத்துக்கொள்ள வேண்டும்

எருவை கட்டிகள் இல்லாமல் நன்கு மக்க வைத்து ஆறவைத்து எடுத்துக் கொள்ளலாம்

அல்லது

ஆட்டு எருவாக இருந்தால்  துகல்களாக பொடி செய்து கொள்ள வேண்டும்

500 கிலோ எருவுடன்  உயிர் உரங்களாகிய 
அசோஸ்பைரில்லம்  10 கிலோ,
பாஸ்போபாக்டீரியா 10 கிலோ, சூடோமோனஸ் 5  கிலோ,
டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோவை
 கொட்டி நன்றாக கலந்து  கொள்ள வேண்டும்.

பஞ்சகவ்யா 5 லிட்டரை  தேவைக்கேற்ப தண்ணீரில் கலந்து  உயிர்உரக்  கலவையில் ஊற்றி புட்டு பதம் வருமாறு கலக்கி கொள்ள வேண்டும்.

அதன்மேல்  கிடுகு  அல்லது கோணிச் சாக்கு கொண்டு மூடி நிழலில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும்

கலந்த ஒரு வாரத்திற்கு  பிறகு சப்போட்டா மரங்களுக்கு தண்ணிர் பாய்ச்சி  வயல் ஈரமாக இருக்கும் பொழுது மரத்தை சுற்றி எருக்கலவையை தேவைகேற்ப தூவி விட வேண்டும்

இவ்வாறு செய்தால் மரத்தில் உள்ள பூ, பிஞ்சுகள்  கொட்டாது  பூ அதிகம் எடுக்கும்

எடுத்த பூக்கள் அனைத்தும் காய்வைக்கும்.ல்ல தரமான காயாக இருக்கும்.காயில் சொறி ஏற்படாது.
பழம் சுவையாக இருக்கும்.விரைவில் கெட்டு போகாமல் இருக்கும்.நல்ல விலை கிடைக்கும் சந்தையில்
மக்கள் விரும்பி வாங்குவார்கள்.

0 comments:

Post a Comment