ads

5/31/2018

ஆடுகளுக்கு வயிறு உப்பிசத்திற்கான சிகிச்சை-(TREATMENT FOR STOMACH EMBRYOS FOR GOATS)


ஆடு வயிறு உப்பசம் உள்ளது 4 மணி நேரம் பிறகு பேதி ஆகி 4-6 நேரம் கழித்து இறந்துவிடுகிறன என்ன என்னது  தெரியவில்லை


ஆடுகள் ஒரே நேரத்தில் அதிகபடியான அடர்தீவனம் மற்றும் இளம் பயிர்களை உண்பதால் வயிறு உப்பிசம் ஏற்படும்.

 வயிறு உப்பிசத்தை கண்டறிதல்:

ஆட்டின் இடது பக்க வயிறு வழக்கத்தை விட அதிகமாக உப்பியிருக்கும்.
அப்பகுதியில் அதிகபடியான வாயு உற்பத்தியாகி வீங்கியிருக்கும்.
அப்பகுதியை தட்டும் போது மத்தளத்தை தட்டுவதை போன்று இருக்கும்.

ஆடுகள் அசையாமல் ஓர் இடத்தில் நின்றுவிடும்.

உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்பு நேரிடும்.

 தடுப்பு முறைகள்

ஆடுகளில் வயிறு உப்பிசத்தை தடுக்க குட்டி பிறந்த 21 நாட்கள் மற்றும் அதற்கு அடுத்த 21 நாட்கள் என இரு முறையாக ETதடுப்பூசி போட வேண்டும்.

பண்ணையில் உள்ள வளர்ந்த ஆடுகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை E Tபோடுவது இது போன்ற பிரச்சனைகள் வராமல் நம் ஆடுகளை பேணி காக்கலாம்.

 வயிறு உப்பிசத்திற்கான சிகிச்சை:

# சமையல் சோடா ( Sodium bi carbonate) 15 லிருந்து 30 கிராம் வரை.

சமையல் சோடா மாவை 50 மில்லி தண்ணீரில் கலக்கி வாயில் புரையேறாமல் ஊற்றி விடவும்.

# விளக்கெண்ணெய் 50 லிருந்து 100 மில்லி கொடுக்கலாம்.

# SPASMOVET inj
     TYREL oral solution

# RUMIBUY bolus
இம்மாத்திரையுடன் வெல்லம் -.50 கிராம்
சோடா மாவு - 10 கிராம்.
கல் உப்பு - 10 கிராம்.
இவற்றை நன்கு கலந்து சிறிது, சிறிதாக உள்ளுக்கு கொடுக்கவும்.

# ஓமம் தண்ணீர் 50 லிருந்து100 மில்லி தரலாம்.

சிகிச்சை தந்த பின்னர் ஆடுகள் மேற்கொண்டு தீவனம் உண்ணாத வன்னம் தனியாக கட்டிபோட்டு வைக்க வேண்டும்.

சிகிச்சை அளித்த சில மணிநேரங்களில் வாயு வெளியேறி அசை போட ஆரம்பிக்கும்.

மறுநாள் கழிச்சல் இருப்பது வழக்கமானதே.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஓமம் தண்ணீர் காலை, மாலை என 10 மில்லி தரவும் .

4 comments:

  1. ஆடு எண்ணை குடித்து விட்டது ஒரு மாதம் ஆயிற்று உணவு உண்ணவில்லை என்ன செய்வது

    ReplyDelete
  2. ஆடு எண்ணை குடித்து விட்டது ஒரு மாதம் ஆயிற்று உணவு உண்ணவில்லை என்ன செய்வது

    ReplyDelete
  3. ஆடு அரிசியை தின்று விட்டது
    இரண்டு நாட்களாக அசை போடவில்லை
    ஆடு சினையாக உள்ளது கைப்பக்குவம்
    வீட்டு சோடா உப்பு ஓமம் நீர் மற்றும்
    கால்நடை மருந்தும் கொடுக்கப்பட்டது தீர்வு கிடைக்கவில்லை தாங்கள் மேலான யோசனையை வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தவும் எனது கைபேசி நம்பர்
    866 724 62 40 மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete