ads

5/11/2018

எலுமிச்சையில் ஊடுபயிராகக் கொய்யா-(ELUMICHAIUL UDU PAIUR KOYYA)



பத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல்.
”சவுக்காட் ரகத்துல ஆரஞ்சு, பச்சை இரண்டு ரக இளநீர் மரங்களையும் நடவு செஞ்சிருக்கேன். இதுக்கும் 25 அடி இடைவெளிதான். சொட்டுநீர் பாசனம்தான் போட்டிருக்கேன். ஆறு வயசாச்சு, வழக்கமாக தென்னையைப் பராமரிக்கிறது மாதிரிதான் இதையும் பராமரிக்கிறேன். ஏக்கருக்கு 80 மரங்கள் வீதம் 160 மரங்கள் இருக்கு. அதில் 150 மரங்கள் நல்ல மகசூல் கொடுத்திட்டு இருக்கு. மரத்துக்குச் சராசரியா வருஷத்துக்கு 120 இளநீர் கிடைக்கிறது. ஒரு இளநீருக்கு 12 ரூபாய் வரை விலை கொடுத்து உள்ளூர் வியாபாரிகளே வெட்டிக்கொள்கிறார்கள்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னால் நாட்டு ரக எலுமிச்சையை 2 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல 15 அடி இடைவெளியில் நடவு செய்தோம். மொத்தம் 500 எலுமிச்சை மரங்கள் இருக்கு. நாலு எலுமிச்சை மரத்துக்கு இடையில் ஒரு கொய்யாங்கிற கணக்கில் பனாரஸ் ரகக் கொய்யாவை ஒன்றரை வருடத்திற்கு முன்னால் நடவு செய்திருக்கிறோம். அதிலும் 500 கன்றுகள் இருக்கிறது இன்னும் இரண்டு வருடத்தில் எலுமிச்சை, கொய்யா இரண்டுமே மகசூலுக்கு வந்துவிடும். இப்ப வரும் பூக்களை உருவி விட்டுவிடுகிறோம். ஒண்ணு, ரெண்டு தப்பிப் போன பூக்கள் காய்த்திருக்கு. நான்காவது வருடத்தில் இருந்து கொய்யாவில் நல்ல மகசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இன்னும் இரண்டு வருடத்தில் எலுமிச்சையும் மகசூலுக்கு வந்துவிடும்.” என்றார்.

0 comments:

Post a Comment