ads

5/16/2018

கவாத்து செய்தல்-(KAVAATHTHU SEITHAL)

கவாத்து செய்தல் என்பது மரத்தில் உள்ள அதிகப்படியான கிளைகள், பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்தும் முறையாகும். கவாத்து செய்தல் என்பது மரம் மற்றும் செடிகளுக்கு பொதுவானதாகும். கவாத்து செய்வதன் மூலம் புதிய கிளைகள் மற்றும் பூ மொட்டுகள் அதிக அளவில் உண்டாகும்.

பூவெடுக்கும் தருணங்களில் கவாத்து செய்யவேண்டும். கவாத்து செய்வதன் மூலம் தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்தி முழு ஊட்டச்சத்துகளையும் பயிர்களுக்கு அளிக்கமுடியும். அதோடு மரங்களிடையே நல்ல காற்றோட்ட வசதியும் ஏற்படும். இதனால் மகரந்த சேர்க்கை எளிதாகவும், அதிகமாகவும் நடைபெறும்.

சில மரவகைகளை முழுவதும் கவாத்து செய்யலாம். உதாரணமாக முருங்கை மரம் முழுவதும் கவாத்து செய்யப்பட்டாலும் உடனடியாக நன்றாக வளர்ந்துவிடும். ஆனால் சில வகை மரங்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து செய்யவேண்டும். இல்லையென்றால் மரம் பட்டுபோக வாய்ப்பு உள்ளது. முதலில் தேவை இல்லாத கிளைகளை கவாத்து செய்யவேண்டும். அதன் பிறகு தேவையான அளவு கிளைகளை விட்டுவிட்டு, நன்றாக காற்றோட்ட வசதி ஏற்படுமாறு கவாத்து செய்ய வேண்டும்.

கவாத்து செய்யக்கூடாத நேரங்கள்

நோயினால் மரம் அல்லது செடி தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும் போது கவாத்து செய்யக்கூடாது.

வறட்சியான அல்லது போதுமான அளவு நீர் இல்லாத சமயங்களில் செய்யக்கூடாது.

பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது.

பூ வைப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு செய்யக்கூடாது. அவ்வாறு செய்யும் போது அதிக அளவில் மீண்டும் தேவையற்ற கிளைகள் வளர்ந்துவிடும்.







0 comments:

Post a Comment