ads

5/16/2018

கால்நடைகளுக்குநுண்ணூட்ட சத்து தயாரிப்பு-(NUTRIENT PREPARATION FOR LIVESTOCK)


தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

பச்சை நெல் தவிடு 100 கிலோ
உளுந்தம் பொட்டு 10 கிலோ
முட்டை ஓடு 2.5 கிலோ
கடலை புண்ணாக்கு 4 கிலோ
இந்து உப்பு- 2 கிலோ அல்லது  சாதா உப்பு 4 கிலோ
துவரம் பருப்பு  அரைக்கிலோ
மக்காச்சோளம் 2.5 கிலோ
கம்பு 2.5 கிலோ
குச்சிக் கிழங்கு மாவு  5 கிலோ
அரைக்கிலோ நாட்டு வெல்லம்

 செய்முறை
அனைத்தையும் நன்றாக அரைத்து பொடிசெய்து கலந்து  மாடுகளுக்கு அரைக்கிலோ அளவு  எடுத்து தண்ணீர் குடிக்க விடும் பொழுது தீவனத்தொட்டியில் போட்டு  கலந்து கொடுக்கவும்.

ஆடுகளுக்கு 200 கிராம் தண்ணீர் குடிக்கும் பொழுது விடவும்

கோழிக்கு 100 கிராம்  தண்ணீர் ஊற்றி பிசைந்து கொடுக்கலாம்

பயன்கள்
கால்நடைகள்  தீவனம், தண்ணீர் நன்றாக உண்ணும்
கால்நடைகள் சுறுசுறுப்புடன் காணப்படும்
ஜெரிமான சக்தியை கொடுக்கும்
பால் கூடுதலாக கிடைக்கும்
பார்ப்பதற்கு மெருகுடன் காணப்படும்
நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது
செலவு குறை  பலன் அதிகம்
பாதுகாப்பானது எந்த வித தீங்கும் விளைவிக்காதது
நாமலே தாயர்செய்ய முடியும்
 கோழி, ஆடுகள் விரைவில் பெரியதாகும்

0 comments:

Post a Comment