* 20 சென்ட் நிலத்திற்கு 2000 விதைகள் தேவைப்படும். விதைகளை 30 நாட்களுக்கு நாற்று வருவதற்காக தனியாக பாத்தியில் விடவும். அல்லது நாற்றாகக் கூட நாற்றுப்பண்ணையிலிருந்து அட்டையில் வாங்கிக் கொள்ளலாம்.
* ஒரு அட்டையில் நூறு நாற்றுகள் இருக்கும். ஒரு அட்டையின் விலை 50 ரூபாய்.
* 1 அடி நீளம் 2 அடி அகலத்திற்கு 1 நாற்று வீதம் நடவும்.
பச்சை மிளகாய்
* 2 நாட்களுக்கு ஒரு முறை 10 நிமிடம் சொட்டு நீர் பாசனம் வழியாக தண்ணீர் விடவும். கால்வாய் பாசனம் என்றால் 8 நாட்களுக்கு ஒரு முறை விடலாம்.
* விதை போட்டதிலிருந்து 60 நாள் கழித்து மண்புழு உரம் ஒரு முறை போடுதல் நல்லது. நோய் தாக்கினால் 15 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்தடிக்கலாம்.
* 120 நாட்கள் கழித்து நல்ல பலனுடன் காய் பிடிக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து 45 நாட்களுக்கு விடாமல் நல்ல விளைச்சலுடன் மிளகாயை பெறலாம்.
பழுத்த மிளகாய்
* மொத்தமாக 165 நாட்களில் மிளகாய் அறுவடையை முடித்து விடலாம். மூட்டையின் மூலமாக சந்தைக்கு எடுத்து செல்வார்கள். 1 மூட்டை சுமார் 50 கிலோ பிடிக்கும். ஒரு கிலோ 20 ரூபாய் (பச்சை மிளகாய்) 1 கிலோ 100 ரூபாய் (பழுத்த மிளகாய்) விலைக்கு சென்றால் இலாபகரமானது.
( குறிப்பு: சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். மண் புழு உரத்தின் மூலம் இயற்கை மண்ணை பாதுகாப்போடு, பாதிப்பில்லாத மிளகாய் பெறலாம்)
Where is the cultivation process
ReplyDelete