சூபா புல் அல்லது சவுண்டல் அல்லது கூபாபுல்
- பருவ நிலைக்கேற்ற பயிர் செய்யப்படும் சூபா புல் ரகங்கள் உள்ளன
- ஜூன்- ஜூலை மாதம் – ஹவாயன் ஜெயண்ட்- (ஐவரி கோஸ்ட்), கோ 1
- மானவாரி ரகம் (செப்டம்பர்- அக்டோபர்), கே 8, ஜெயண்ட் இல்பில்-இல்பில், கோ 1
- சூபா புல்லை நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்யலாம். எனினும் முதல் அறுவடை மரத்தின் அடிப்பகுதி 3 செமீ அளவிற்கு தடிமனாகிய பின்பு அல்லது மரம் ஒரு முறை காய் வைத்து விதைகளை உற்பத்தி செய்த பின்னரே முதல் அறுவடை செய்யவேண்டும்
- முதல் அறுவடைக்குப் பின்பு 40-80 நாட்களுக்கு ஒரு முறை மரத்தின் வளர்ச்சி மற்றும் பருவ நிலையினைப் பொருத்து அறுவடை செய்யலாம்
- வறட்சியான பகுதிகளில், மரத்தினை இரண்டு வருடம் வரை வளர விட்டு, அதன் வேர்ப்பகுதி நன்றாக ஆழமாக ஊன்றிய பின்னரே அறுவடை செய்யவேண்டும்
- மண்ணிலிருந்து 90-100 செமீ உயரம் விட்டு மரத்தை வெட்டவேண்டும்
- நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு ஹெக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினை உற்பத்தி செய்யும்
- மழை பெய்யும் நேரங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 40 டன்கள் வரை பசுந்தீவன உற்பத்தியினை மரத்தின் 2ம் வருட வயதிலிருந்து பெறலாம். மேலும் சூபா புல் மரத்தினை 100 செமீ உயரம் வரை விட்டு கவாத்து செய்யலாம்
கிளைரிசிடியா
- கிளைரிசிடியா வெளிறிய உட்பகுதியுடன் கூடிய சிறிய, இலை உதிரக்கூடிய மர ரகமாகும்
- கிளைரிசிடியா செப்பியம் பல்வேறு பருவ நிலைகளைத் தாங்கி வளரக்கூடியது. வருட மழை அளவு 900 மிமீக்கு அதிகமாக பெய்யும் இடங்களில் இத் தீவன மரம் நன்றாக வளரும். ஆனால் வருட மழையளவு 400 மிமீக்கு குறைவாக உள்ள பகுதிகளிலும் கிளைரிசிடியா வளரும் தன்மை உடையது
- கரிசல் மண் முதல், பாறைகள் அதிகம் கொண்ட மண்ணிலும் இந்த தீவன மரம் வளரும். மேலும் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும், மண்ணின் அதிகப்படியான ஈரப்பதத்தைத் தாங்கி கிளைரிசிடியா வளரும்
- இந்த மரம் விறகுக்கும், கால்நடைத் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும், நிழலுக்கும், நீண்ட தடிகளை உற்பத்தி செய்யவும், உயிர் வேலி அமைக்கவும், மற்ற செடிகள் தாங்கி வளர்வதற்கு பந்தல் அமைக்கவும் பயன்படுகிறது
- கிளைரிசிடியா அழகுக்காகவும், காஃபி பயிருக்கு நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது
- விதைகள் மூலமாகவும், கரணைகள் மூலமாகவும் இம்மரம் உற்பத்தி செய்யப்படுகிறது
- கிளைரிசிடியா செப்பியம் மற்றும் கிளைரிசிடியா மேக்குலேட்டா போன்ற இரண்டு கிளைரிசிடியா ரகங்கள் கிடைக்கின்றன
- கிளைரிசிடியா மேக்குலேட்டா பசுந்தாள் உரமாகப் மிகவும் பயன்படுகிறது. மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் வளத்தினை கிளைரிசிடியா அதிகரிக்கிறது
- ஒவ்வொரு முறை வெட்டிய பின்பும் கிளைரிசிடியா அதிகப்படியான கிளைகளை உருவாக்கி சீக்கிரம் வளரும்
- ஒரு ஹெக்டேர் நிலத்தினை சுற்றி இம்மரத்தினை நடுவதன் மூலம் 2-2.5 ஹெக்டேர் நிலத்திற்கு தேவைப்படும் பசுந்தாள் உரத்தினைப் பெறலா.
- அகத்தி
- அகத்தி மரத்தின் இலைகள் கால்நடைகளால் குறிப்பாக வெள்ளாடுகளால் விரும்பி உண்ணக்கூடியவையாகும்
- இம்மரத்தின் இலைகளில் 25% புரதம் உள்ளது
- நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் அகத்தி வருடம் முழுவதும் வளரும்
- தண்ணீர் வடிகால் உள்ள பகுதிகளில் அகத்தி நன்கு வளரும்
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் 7.5 கிலோ விதை விதைக்கத் தேவைப்படும். விதைகளை விதைப்பதற்கான இடைவெளி 100 செமீ x 100 செமீ (அதாவது பார்களுக்கு இடையில் 100 செமீ , மரங்களுக்கு இடையில் 100 செமீ இடைவெளி இருக்கவேண்டும்)
- விதைப்பு செய்து 8 மாதங்களுக்குப் பிறகு முதல் அறுவடையும் பிறகு ஒவ்வொரு 60-80 நாட்களுக்கு இடைவெளியில் அறுவடை செய்யலாம்
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஒரு வருடத்தில் 100 டன்கள் வரை பசுந்தீவனம் கிடைக்கும்.
0 comments:
Post a Comment