அசோலா பெரணி என்ற தாவர இனத்தை சேர்ந்தது. அசோலா நெல்வயலில் தண்ணீரில் மிதந்து காற்று மண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நெற்பயிருக்கு அளிக்கிறது. அசோலாவானது மிகச்சிறந்த உயிர் உரமாகும்.
சத்துக்கள்
அசோலாவில் அதிக புரதசத்தும், கொழுப்புச் சத்தும் உள்ளன.இதில் நார்ப்பொருட்கள் குறைவாக உள்ளது. கால்நடைகளின் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன.
அசோலா உற்பத்தி
1 சென்ட் பாத்தியில் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 1 கிலோ சாணம் இட்டு சுமார் அரையடி அளவிற்கு தண்ணீர் கட்டிக்கொள்ள வேண்டும்.
இதற்குள் 8 கிலோ அசோலா பரப்பிவிட வேண்டும்.
இதிலிருந்து ஒரு வாரத்தில் 50 கிலோ வரை அசோலா கிடைக்கும்
பயன்கள்
இது ஒரு ஏக்கருக்கு 10-20 கிலோ தழைச்சத்தைத் தரக்கூடியது.
மற்ற எல்லா பசுந்தாள் உரப்பயிர்களையும் விட அதிகமான அளவு (~ 4 சதம்) தழைச்சத்தைப் பெற்றுள்ளது.
3-6 சதம் சாம்பல் சத்தையும் அளிக்கின்றது.
மற்ற பயன்கள்
அசோலாவை மாட்டுத் தீவனமாக பயன்டுத்தலாம்.
இது பால் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோடைகாலங்களில் மாடுகளுக்கு குளிர்ச்சியை தரும் நல்ல உணவாகிறது.
உற்பத்தி செலவை குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன்படுத்தலாம்.
அசோலாவை பன்றிகளுக்கு அளிப்பதால் அதிக எடையுடன் வளர்ச்சி பெறுகின்றது.
அசோலாவை கோழிகளுக்கும் வாரத்திற்கும் தீவனமாக பயன்படுத்தலாம். சராசரியாக 100-300 கிராம் வரை அசோலா தினமும் கொடுக்கலாம். இதனால் கோழிகள் அதிகவளர்ச்சி அடைந்துள்ளது.
மீன்கள் மற்ற நீர்த்தாவரங்களை விட அசோலாவை விரும்பி உண்கின்றன. மீன்கள் வளரும் குட்டைகளின் ஒரு ஓரத்தில் மிதக்கும் மூங்கில் கழிகளைப் போட்டு அசோலாவை வளர்க்க முடியும். மீன்கள் தேவைப்படும் சமயத்தில் வந்து அசோலாவை உண்டு விட்டு சென்றுவிடும்.
0 comments:
Post a Comment