ads

5/01/2018

காய்ப்புழு, தண்டுத் துளைப்பான்-(Kaai puzhu thanndu thulaippan)

காய்ப்புழு, தண்டுத் துளைப்பான்போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த, வாழையில் வாடல் நோயை விரட்டவும்,

அரை கிலோ புகையிலை, அரை கிலோ பச்சை மிளகாய், அரை கிலோ பூண்டு, 5 கிலோ வேப்பிலை ஆகியவற்றை அரைத்து

15 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கரைக்க வேண்டும். இதை நான்கு முறை கொதிக்க வைத்து இறக்கி, 48 மணி நேரம் கழித்து சுத்தமானத் துணியால் வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம். பூச்சிகளை விரட்ட 200 லிட்டர் நீரில் 6 லிட்டர் அக்னி அஸ்திரத்தைக் கலந்து தெளிக்க வேண்டும்.

வாடல் நோயைத் தடுக்க, கன்று நடவு செய்தவுடன் மாதம் ஒரு முறை அக்னி அஸ்திரத்தை இலை வழி தெளிப்பாகத் தெளிக்க வேண்டும். இப்படி நான்கு மாதம் தெளித்து வந்தால் வாடல் நோய் அண்டாது.''

0 comments:

Post a Comment