ads

5/31/2018

குறைந்த எடையில் பிறக்கும் குட்டிகளை பராமரிக்கும் வழிமுறைகள்-(Instructions for maintaining low birth weight)

structions for main
குட்டி பிறந்து, நன்றாக எழுந்து நடக்கும்வரை உடலின் வெப்பநிலையை சிறிது அதிகபடுத்த வேண்டும்.
குட்டியை சுத்தமான பருத்தி துணியால் சுற்றி, உயரம் குறைந்த பிளாஸ்டிக் டப்பில் வைக்கோலால் மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் குட்டியை படுக்க வைக்கலாம்.
இதன் விளைவாக குட்டிக்கு உடல் கதகதப்பு கூடி, உடலின் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

# தாயிடம் சுரக்கும் ஜெல் போன்ற சீம்பாலை சிறிது கூட வீணாக்காமல் குட்டிக்கு தரவேண்டும்.இதனால் குட்டிகளின் வாழ்நாளில் உடலின் எதிர்ப்புதிறன் மிக சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமில்லாமல் ஜீரண உறுப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் நன்கு தூண்டப்படும்.

# தாயிடம் பால் சுரப்பு குறைவாக இருந்தாலும், அதற்காக குட்டிகளை தாயிடம் பால் குடிப்பதை நிறுத்த வேண்டாம்.
    குட்டிகளை பால் குடிக்க அனுமதியுங்கள். இது போன்ற செயல்பாடுகள் குட்டி ஈன்ற ஆட்டின் தாய்மை உணர்வை தூண்டி நல்ல பால் சுரப்புக்கு வழிவகை செய்யும்.

# குட்டிகளின் பால் தேவையை பூர்த்தி செய்ய, மாட்டு பாலை தரலாம்.
மாட்டு பாலில் சம பங்கு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின் பால் புட்டிகளின் மூலம் புகட்டலாம்.
Lactogen போன்ற பெளடர் பாலையும் தரலாம்.

குட்டியின் முதல் நாள் ஒரு ஸ்பூன் குளுக்கோஸ் கலந்து 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் நான்கு முறை தரவும்.

இரண்டாவது நாள் குளுக்கோஸ் உடன் 2-3 சொட்டுகள் Cod liver oil கலந்து 75 மில்லியாக 4 வேளை தரலாம்.

மூன்றாவது நாள், குளுக்கோஸ், Cod liver oil உடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து  110 மில்லியாக நான்கு வேளை தரவும்.

இதுபோல் படிப்படியாக பாலின் அளவை முதல் வார இறுதியில் ஒரு வேளைக்கு 150 மில்லி வரை கூட்டலாம்.
# இரண்டாவது வாரத்தில் பாலின் அளவு வேளைக்கு 200 மில்லியாக உயர்த்த வேண்டும்.
# மூன்றாவது வாரத்தில் 250
மில்லியாகவும், நான்காவது வாரத்தில் இதே அளவு பாலுடன் சிறிது வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களும், அடர்தீவனம் 50 கிராம் அளவில் தரலாம்.
# ஐந்தாவது வாரத்திலிருந்து பாலின் அளவை 200 மில்லியாக குறைத்து அடர்தீவனத்தை 100 கிராமாக கூட்டி தரமான பசுந்தீவனங்களையும் அளிக்க வேண்டும்.
# ஆறாவது வாரத்தில் பாலை 150 மில்லியாக குறைத்து, அடர்தீவனம் மற்றும் புரதம் நிறைந்த பசுந்தீவனங்களின் அளவை சேர்த்து த
தரவும்.
ஏழாவது வாரத்திலிருந்து பாலை முழுவதுமாக நிறுத்தி விடலாம்.

குட்டிக்கு டானிக்
Brotone -2ml
Vimeral -1ml
ஓமம் தண்ணீர் - 2ml
தினமும் ஒரு மாதம் வரை தரவும்.
மாலை வேளையில் தினமும் விளக்கெண்ணெய்யில் ஊறிய வசம்பை நல்லெண்ணெய் விளக்கின் தீயில் சுட்டு சிறிது ஆட்டுபால் விட்டு இழைத்து, அதை குட்டிகளின் வாயினுள் தடவி விடவும்.
இதனால் வயிற்றுவலி, மற்றும் கழிச்சல் ஆகிய பிரச்சனைகள் இல்லாமல் குட்டிகளின் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படும்.

0 comments:

Post a Comment