ads

5/01/2018

மடிநோய்தாக்குதல்-(Madi nooi thakkuthal)

மடிநோய்தாக்குதல்















video:




மடிநோய்க்கான அறிகுறிகள்

திடீரென மடி வீங்கும்.
பசுவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும்.
பசு  நடுங்கும்.
மடி  சூடாக  இருக்கும்.
 மடியைத்  தொட்டால்  உதைக்கும். கன்றுக்கு
பால் ஊட்டாது.
கால் தாங்கும். நடக்க இயலாது.
 பால் திரிந்து  வரும். சில  மணி  நேரத்தில் நீர்த்து  நிறம் மாறிவிடும்;

மடி நோய் வராமல் இருக்க

மாட்டுத் தொழுவத்தை சுத்தமாக வைத்திருத்தல்
மடி மற்றும் காம்புகளை சுத்தமாக வைத்திருத்தல்.

மடிநோயை கட்டுப்படுத்த நாட்டுவைத்தியம்

250 கிராம் கற்றாழை
50 கிராம் மஞ்சள் பொடி
15 கிராம்  எலுமிச்சை பவுடர்

எலுமிச்சம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளலாம்.

தயார்  செய்யும் முறை
     
கற்றாழையை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .நறுக்கிய கற்றாழையை மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் .

அரைக்கப்பட்ட பசையுடன் மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சை பவுடரை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்

 மடிநோய் பாதிக்கப்பட்ட மாட்டின் மடியை நன்கு சுத்தமான நீரினால் கழுவி  கொள்ள வேண்டும்

 பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்டாத காம்புகளில் உள்ள பால் முழுவதையும் வெளியேற்ற வேண்டும்.

 அரைத்த கற்றாழை பசையுடன் தேவையான தண்ணீர் சேர்த்துக் கொண்டு மடி முழுவதும் தடவ வேண்டும்

 நாள் ஒனறுக்கு 10 முறை தொடர்ந்து 5 தினங்கள் தடவ வேண்டும்

மடி நோய் தாக்கத்தில் இருந்து 50 சதவீதம் பால் மாட்டை காப்பாற்ற இயலும்
.
மேலும் அதிகமான தகவல் தேவையின்  விவரங்கள் அறிய rsga.co.in  என்ற வலைதளத்தை பார்க்கவும்

0 comments:

Post a Comment