கலப்பின நேப்பியர் – கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அல்லது பாஜ்ரா நேப்பியர்கலப்பினம்
- கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் பசும் தீவனத்தில், நேப்பியர் புல்லை விட அதிக கிளைகளும்,இலைகளும் இருப்பதுடன், வேகமாக வளரும் திறன் படைத்தது. இதனால் தரமான மற்றும் அதிக அளவிலான தீவனத்தினைப் பெற முடியும்
- இந்த பசும் தீவனத்திலுள்ள புரத அளவு 8-11%
- கோ சி என் 4 எனப்படுவது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பின நேப்பயர் புல் ரகமாகும். இப் புல்வகைத் தீவனம் கோ 8 கம்பு ரகத்தையும் நேப்பியர் எஃப் டி 461 ரகத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின புல்வகைத் தீவனமாக்கும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 380-400 டன்கள் கலப்பின நேப்பியர் பசும் தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இத்தீவனப் பயிரில் அதிகப்படியான மென்மையான, ஈரப்பதம் அதிகம் கொண்ட கிளைகள் இருப்பதுடன், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலின்றி இருக்கும். வருடம் முழுவதும் இப்பசுந்தீவனத்தை நீர்ப்பாசன வசதி இருக்கும் இடங்களில் அறுவடை செய்யலாம்
- கேகேஎம்- 1 கம்பு நேப்பியர்- வருடத்திற்கு 288 டன்கள் வரை அறுவடை செய்யப்படும் ஒரு கலப்பின புல் வகை பசுந்தீவனமாகும். இத்தீவன ரகம் தரம் உயர்ந்ததாகவும், அதிக கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து மிகுந்ததாகவும், குறைவான ஆக்சலேட் சத்து உள்ளதாகவும் இருக்கும்
- பூசா ஜெயண்ட், என்பி 21, என்பி 37, ஐ ஜி எஃப் ஆர் ஐ 5, ஐ ஜி எஃப் ஆர் ஐ 7 மற்றும் ஐ ஜி எஃப் ஆர் ஐ 10 ரகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் ரக கலப்பின நேப்பியர் ரகங்களாகும்
- Co1, Co2, Co3, Co4 & KKM1 போன்றவையும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட கலப்பின நேப்பியர் ரகங்களாகும். இந்த ரகங்கள் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும், வருடம் முழுவதற்கும் வளர்வதற்கு ஏற்றவை
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் பயிரிட 40000 கரணைகள் தேவைப்படும்
- முதல் அறுவடை நடவு செய்து 75 – 80 நாட்கள் கழித்தும், பிறகு அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம்
கினியா புல்
- இந்த புல் வகைத் தீவனம் உயரமான, முழங்குகள் அதிகமுள்ள வேகமாக வளரும், கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய பல வருட பசுந்தீவனப் பயிராகும்
- இதன் ரைசோம் சிறியதாக இருக்கும்
- விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ கினியா புல் பயிரிடப்படுகிறது
- இதிலுள்ள புரதத்தின் அளவு 4-14%
- ஹேமில், பிபிஜி 14, மாகுனி, ரிவர்ஸ் டேல் போன்றவை கினியா புல்லின் சில ரகங்களாகும்
- Co1 மற்றும் Co2 ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கினியாப்புல் ரகங்களாகும்
- களிமண் பாங்கான நிலங்களிலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களிலும் கினியா புல் நன்றாக வளராது
- வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும்
- விதையளவு – ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2.5 கிலோ, அல்லது ஒரு ஹெக்டேர் நிலத்தில் நட 66000 கரணைகள்
- இடைவெளி – 50 X 30 செமீ
- முதல் அறுவடை விதை முளைத்து 75-80 நாட்கள் கழித்தோ அல்லது கரணைகள் நட்டு 45 நாட்கள் கழித்தும் செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் 175 டன்கள் கினியா புல் பசுந்தீவனத்தை 5 அறுவடைகளில் பெறலாம்
- ஹெட்ஜ் லூசர்ன் எனப்படும் வேலி மசாலுடன் கினியா புல்லை 3;1 என்ற விகிதத்தில் பயிர் செய்து வேலி மசாலுடன் சேர்த்து தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கலாம்
பாராபுல் – நீர்ப்புல் அல்லது தண்ணீர்ப் புல் அல்லது எருமைப்புல்
- ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் இந்த புல்வகைத் தீவனத்தினைப் பயிரிடலாம்
- பருவ காலங்களின்போது தண்ணீர் தேங்கும் சமவெளிகளிலும், பள்ளமான இடங்களிலும் இப்புல் ரகத்தினை வளர்க்கலாம். அதாவது நிலத்தில் தண்ணீர் தேங்குவதையும், நீண்ட நாள் வெள்ளப்பெருக்கையும் இப்புல் ரகம் தாங்கி வளரும் தன்மையுடையது
- வறண்ட அல்லது மிதமான வறண்ட நிலங்களில் இந்த புல் ரகம் வளராது
- இப்பயிர் குளிரினால் அதிகம் பாதிக்கக்கூடியது. எனவே இந்தியாவில் குளிர் அதிகமிருக்கும் பகுதிகளில் குளிர் காலத்தில் இப்பயிரில் வளர்ச்சி எதுவும் இருக்காது
- தண்ணீர் தேங்கும் மண் வகைகள் இப்பயிர் வளர்வதற்கு ஏற்றவை
- மணல் பாங்கான மண்ணிலும்,, நீர்ப்பாசனம் போதுமானதாக இருந்தால் இந்த தீவனப்புல் ரகம் நன்கு வளரும்
- விதைப்பு செய்வதன் மூலம் இந்த தீவனப்பயிரைப் பயிரிடுவது கடினம். எனவே தண்டுகளை வெட்டி ஊன்றுவதன் மூலம் இந்த தீவனப்புல்லை பயிரிடலாம்
- தென்னிந்தியாவின் எந்த பருவ நிலையிலும் இந்த தீவனப்புல்லைப் பயிரிடலாம். ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப் பொழிவு இருப்பதால் இதனை பயிர் செய்வதற்கு இந்த மாதங்கள் ஏற்றவையாகும்
- உள்நாட்டு பாரா புல் ரகம் மட்டுமே பயிரிடப்படுகிறது.. இந்த தீவனப்புல்லில் கலப்பின ரகங்கள் இல்லை
- மெல்லிய தண்டுகள் விதைக் கரணைகளாகப் பயன்படுகின்றன. 2-3 கணுக்கள் கொண்ட தண்டுகளை 45-60 செமீ அகலமுள்ள பார்களாக 20 செமீ இடைவெளியில் அமைத்து இக்கரணைகளை ஊன்றலாம். ஈர மண்ணில் கரணையின் இரண்டு முனைகளும் ஒட்டிக்கொண்டிருக்குமாறு வைத்து மண்ணில் ஊன்றவேண்டும்
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் நடுவதற்கு 800-1000 கிலோ கரணைகள் தேவைப்படும்
- இக்கரணைகளை ஊன்றி 75-80 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். பின்பு 40-45 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒரு வருடத்தில் 6-9 முறை இப்புல்லை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேரில் ஒரு வருடத்திற்கு 80-100 டன்கள் தீவனப்புல் கிடைக்கும்
- இந்த தீவனப்புல்லை பசுந்தீவனமாக மாடுகளுக்கு அளிக்கலாம்
- இந்த தீவனப்புல்லை பதப்படுத்தி வைக்கோலாகவோ அல்லது சைலேஜ் எனப்படும் ஊறுகாய் புல்லாகவோ தயாரிக்க முடியாது
நீல பஃபல் புல் அல்லது நீலக்கொழுக்கட்டைப்புல் அல்லது கோ 1
- வறண்ட நிலங்களில் நீர்ப்பாசனம் அளிக்கப்படும்போது சென்க்ரஸ் எனும் இந்தப்புல் ரகம் நன்றாக வளரக்கூடிய ஒரு பசுந்தீவனப் பயிராகும்
- சென்க்ரஸ்சீலியாரிஸ் அல்லது அன்ஜன் புல் மற்றும் சென்க்ரஸ்செடிகெரஸ்அல்லது கருப்பு அன்ஜன் புல் போன்றவை பொதுவாக வளர்க்கப்படும் இந்த புல் ரகங்களாகும். ஆனால் இவை குறைந்த மகசூலை மட்டுமே கொடுக்கக்கூடியவை
- சென்க்ரஸ்கிளாகஸ் எனப்படும் மற்றொரு ரகம் வறண்ட நிலங்களில் மற்ற புல் இனங்களை விட நன்றாக வளரும்
- தண்ணீர் நன்றாக வடியும், அதிக கால்சிய சத்து கொண்ட மண் ரகங்கள் இத்தீவனப்புல் வளர ஏற்றதாகும்
- ஒரு ஹெக்டேர் நிலத்தல் பயிரிடத் தேவைப்படும் விதையளவு 6-8 கிலோக்களாகும்
- விதைப்பு செய்து 70-75 நாட்கள் கழித்து முதல் அறுவடையும் பிறகு 4-6 முறையும் இப்பயிரை அறுவடை செய்யலாம்
- ஒரு வருடத்திற்கு, ஒரு ஹெக்டேரில் இப்புல்லை பயிரிடுவதால் வருடத்திற்கு 40 டன்கள் வரை 4-6 அறுவடைகளில் பசுந்தீவனம் பெறலாம்
0 comments:
Post a Comment