கோழிகள் தேர்வு
நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும்.
காரியங்களில் கவனமுள்ளவையாகவும்
இருக்கும் வேகமான நடை,வேகமான ஓட்டம்,
தேவைக்கேற்பசில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில
நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக
இருக்கவேண்டும்.
பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில்
பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.
கோழிசுகத்தை கொண்டைல் பார் என்பார்கள்.
நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல
சுக தேகத்தைக் குறிக்கும்.கால்கள் மஞ்சள்
கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும்.
நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மா
ரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும்அடங்கிய சரிவிகிதத் தீவனத்தையே எப்பொழுதும்
உபயோகிக்க வேண்டும்.
தீவனத் தொட்டியில்போதுமான இடவசதி, கோழிகளுக்குக் கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத்தொட்டிகளை வைக்க வேண்டும்.
தீவனத் தொட்டியின் மேற்புற விளிம்பு, கோழிகளின்முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்ப தீவனத்தொட்டியின்உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும்.
சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்துவைக்கக்கூடாது.
தீவன மூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச்சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடிதள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்.
தீவன மூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச்சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடிதள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment