தேவையான பொருட்கள்
1. Grow Bags அல்லது Thotti.
2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், சுடோமோனஸ், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
3. விதைகள்
4. நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
கொத்தவரங்காய் செடி வளர்க்க பைகள் அல்லது தொட்டிகளை பயன்படுத்தலாம். இதற்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.
விதைத்தல்
விதைகளை முற்றிய காய்களில் இருந்து எடுத்தோ அல்லது கடைகளில் வாங்கி வந்தோ விதைக்கலாம். விதைக்கும் விதையானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். விதையின் அளவைவிட இரண்டரை மடங்கு அதிக ஆழத்தில் விதைகளை விதைத்து பிறகு, மண்ணால் மூடிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
உரங்கள்
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
அறுவடை
காய்களை முற்றி விடாமல் இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

0 comments:
Post a Comment