இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் காரியம் பல தானிய விதைப்பு முறை. இரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் வளமிழந்து போன நிலத்தை, 200 நாட்களில் வளம்மிக்க நிலமாக மாற்றலாம். இதைத்தான் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்தார். 1 ஏக்கர் நிலத்திற்கு பல தானிய விதைப்பு பற்றி காண்போம்.
1. தானிய வகை நான்கு:
சோளம் – 1 கிலோ
கம்பு – 1/2 கிலோ
தினை – 1/4 கிலோ
சாமை – 1/4 கிலோ
2. பயிர் வகை நான்கு:
உளுந்து – 1 கிலோ
பாசிப்பயிர் – 1 கிலோ
தட்டப்பயிர் – 1 கிலோ
கொண்டைகலை -1கிலோ
3. எண்ணெய் வித்துக்கள்:
எள்ளு – 1/2 கிலோ
நிலக்கடலை – 2 கிலோ சூரியகாந்திவிதை – 2கிலோ
ஆமணக்கு – 2 கிலோ.
4. பசுந்தாள் பயிர்கள்:
தக்கப்பூண்டு – 2 கிலோ
சணப்பு – 2 கிலோ
நரிப்பயிர் – 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ.
5. நறுமணப் பயிர்கள் :
கடுகு – 1/2 கிலோ
வெந்தயம் – 1/4 கிலோ
சீரகம் – 1/4 கிலோ
கொத்துமல்லி – 1 கிலோ.
மேற்சொன்ன 20 விதைகளும் வெறும் உதாரணம். இவற்றை அப்படியே கூறியவாறு விதைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவரவர் பகுதியில் கிடைக்கும் விதைகளை, ஒவ்வொறு வகைக்கும் நான்கு தானியம் வீதம் எடுக்கவும். அளவு கூட குறைய இருக்கலாம்.
இந்த 5 வகை தானியங்களை கலந்து ஒரே நேரத்தில் நிலத்தில் விதைக்க வேண்டும். விதைகளில் இருந்து வளர்ந்த பயிர்கள் 45 முதல் 50 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை அப்படியே மடக்கி உழவு போடவும். இவை மக்கி நுண்ணுயிர் பெருகும். இதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து சமச்சீராக இருக்கும். பல தானிய விதைப்பு முறையை 2 அல்லது 3 முறை செய்யலாம்.
0 comments:
Post a Comment