தீவன மக்காச்சோளம்
- தீவன மக்காச்சோளம் பல்வேறு விதமான மண் ரகங்களில் வளரும் தன்மையுடையது. ஆனால் நல்ல வடிகால் கொண்ட சத்துகள் நிறைந்த வளமான மண்ணில் தீவன மக்காச்சோளம் நன்றாக வளரும்
- மக்காச்சோளம் கரிஃப் பருவத்தில் வளரும் பயிரமாகும். அதாவது ஜூன் மற்றும் ஜூலையில் விதைப்பு செய்யப்படும். தென்னிந்தியாவில், ராபி மற்றும் வெயில் காலங்களில் இது பயிர் செய்யப்படுகிறது
- தண்ணீர் பாசன வசதி கொண்ட நிலங்களில் மக்காச்சோளத்தினை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்
- ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 மற்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும்
- ஒவ்வொரு விதையையும் 30 செமீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள பார்களில் 15 செமீ இடைவெளியில் ஊன்றுவதற்கு ஒரு ஹெக்டேருக்கு 40 கிலோ விதை தேவைப்பபடும்
- ஒரு ஹெக்டேரில் விதைப்பு செய்த மக்காச்சோளத்தலிருந்து கிடைக்கும் தீவனத்தின் அளவு 40-50 டன்களாகும். ஆனால் இதன் டிரை மேட்டர் எனப்படும் தண்ணீரற்ற சத்தின் அளவு ஒரு ஹெக்டேருக்கு 10-15 டன்களாகும்
- நீண்ட நாட்களுக்கு பசுந்தீவனத்தினைப் பெற நேரடியாக விதைப்பு செய்யலாம்
- மக்காச்சோளக் கருது பால் கருதாக இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும்.
தீவன சோளம்/சோளம்/ஜோவர்
- சோளம் தானிய உற்பத்திக்கும், தீவன உற்பத்திக்கும் பயிரிடப்படுகிறது
- சோளம் வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்
- வெப்ப மண்டலப் பகுதிகளில் 25-35o செல்சியஸ் வெப்பநிலையில் சோளம் நன்றாக வளரும்
- மலைப்பகுதிகளில் அதாவது 1200 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள இடங்கள் இப்பயிர் வளர்வதற்கு ஏற்றதல்ல
- வருட மழையளவு 300-350மிமீ இருக்கும் இடங்களில் சோளம் பயிரிடப்படுகிறது
- மணல் பாங்கான மண்ணைத் தவிர மற்ற எல்லா வித மண்ணிலும் சோளம் வளரும்
- நீர்ப்பாசனம் அளிக்கப்படும் இடங்களில் பயிரிட ஏற்ற சோள இரகங்கள் (ஜனவரி முதல் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் முதல் மே) கோ-11, கோ-27, கோ-எஃப் எஸ் 29
- மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் சோள ரகங்கள் (செப்டம்பர்-அக்டோபர்) கே 7, கோ-27, கோ எஃப் எஸ் 29, கே 10
- கோ எஃப் எஸ் – 29 எனும் சோள ரகத்தினை ஒரு முறை பயிரிட்ட பிறகு திரும்பத் திரும்ப அறுத்து மாடுகளுக்குப் தீவனமாக போடலாம். இந்த ரகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. டி என் எஃப் எஸ் 9602 மற்றும் சூடான் புல் ரகங்களின் கலப்பினம் மூலமே கோ எஃப் எஸ் 29 சோள ரகம் உருவாக்கப்பட்டது
- ஒரு ஹெக்டேர் நிலத்தில் சோளம் பயிரிடத் தேவையான விதையளவு 40 கிலோக்களாகும். (கோ எஃப் எஸ் 29 ரகத்திற்கு மட்டும் 12.5 கிலோ)
- பசுந் தீவனமாக சோளத்தினை பூ விட்ட பிறகு உபயோகிக்கலாம்
- ஒரு முறை மற்றும் அறுவடை செய்யப்படும் சோளப் பயிரை அதன் 60-65ம் நாள் அறுவடை செய்யலாம். ஆனால் பல முறை அறுத்து உபயோகிக்கப்படும் சோளப்பயிரை விதை விதைத்து 60 நாளும், பிறகு 40 நாள் கழித்தும் அறுவடை செய்யலாம்.
- ஆனால் கோ. எஃப். எஸ் 29 ரக சோள ரகத்திற்கு மட்டும் 65 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்
(வருடத்திற்கு 5 அறுவடைகள்)
0 comments:
Post a Comment