வேம் - வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா
- தாவரங்களின் வேர்ப் பகுதியில் உண்டு உறங்கி உருப்படியான காரியங்களை ஆற்றுகிறது.
- வேம்(VAM) என்பது இதன் சுருக்கமான பெயர்.
- வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா (VESICULAR ARBUSCULAR MYCORHIZA)
- தாவரங்களின் வேர்களுக்கும் மண்ணிற்குமிடையே பாலமாக பணி செய்கிறது.
- பயிர்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
- மணிச்சத்து தரக்கூடிய – பாஸ்பரஸ் என்னும்; கந்தக சத்தை எடுத்துக் கொள்ள உதவுகிறது.
- பாஸ்பரஸ் சத்து குறைவாக உள்ள நிலங்களில் பசுமைப் பொருட்களை ( BIOMASS ) மேம்படுத்த உதவுகிறது.
- மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்த “ வேம் “ உதவுகிறது.
- வேர்களைத் தாக்கும் பூசண நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
- நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கிறது.
- வேர்த் தூவிகளின் எண்ணிக்கையைக் கூட்டுகிறதுஇ
- வேர்ப் பரப்பினை அதிகரிக்கிறது.
- வறட்சியைத் தாங்கும் சக்தியை அளிக்கிறது.
- இவை அடுத்தடுத்த பயிர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும்.
- நெல் போன்றஇ தேங்கி நிற்கும் தண்ணீரில் வளரும் பயிர்களுக்கு இது உதவாது.
- இரும்பு மற்றும் துத்தநாக சத்துக்களையும் இது பயிர்களுக்கு எடுத்துத் தருகிறது.
0 comments:
Post a Comment