ads

3/15/2018

தென்னையில் குரும்பை உதிர காரணங்கள்-(Thennaiul kurumbai uthira karanangal)

தென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.
  1. அதிக கார அல்லது அமில நிலை
  2. வடிகால் வசதி இல்லாமை
  3. கடும் வறட்சி
  4. மரபியல் காரணங்கள்
  5. ஊட்டச்சத்து குறைபாடு
  6. மகரந்தச் சேர்க்கை இல்லாமை
  7. உறார்மேன் குறைபாடு
  8. பூச்சிகள்
  9. நோய்கள்
அ) மண்ணின் கார அமிலத்தன்மையை சரிசெய்தல்
மண்ணின் அதிகப்படியான கார அல்லது அமிலத்தன்மை குரும்பை உதிர்வதற்கான காரணமாக இருக்கலாம். மண்ணின் கார அமில நிலை 5.5க்கும் குறைவாக இருப்பது அதிக அமில நிலைக்கான அறிகுறியாகும். இதனை சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம். கார அமில நிலை 8.0க்கும் அதிகமாக இருப்பது மண்ணில் அதிகமான காரத்தன்மையைக் குறிக்கும். இதனை ஜிப்சம் சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம்.
ஆ) போதுமான வடிகால் வசதி அமைத்தல்
தென்னை மரங்களில் நீர் வடிகால் வசதி இல்லாவிட்டால், அதன் வேர்கள் காற்றில்லாமல் மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் குரும்பைகள் உதிரும். உரிய இடங்களில் வடிகால் வாய்க்கால்களை அமைத்து மழைக்காலத்தில் எஞ்சிய நீலை வெளியேற்றவேண்டும்.
இ) நீர் தேங்கி நிற்கும் இளந்தென்னந்தோப்புகளில் மேலாண்மை
  1. இளந்தென்னங்கன்றுகள் நடப்பட்ட இரு வரிசைகளுக்கிடையே பருவமழை தொடங்கும் பருவத்தில் ஒரு நீண்ட குழி அமைக்கவேண்டும். குழியின் அளவு மூன்று மீட்டர் அகலமும், 30-45 செ.மீ ஆழமும் உள்ளபடி வயலின் முழு நீளத்திற்கு அமைக்கவேண்டும். இதிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை கன்றுகள் நட்பபட்ட வரிசைகளிலே ஒரு மேடான பாத்தி உருவாகும்படி போடவேண்டும்.
  2. இளங்கன்றுகளை சுற்றிலும் 1.2 மீட்டர் அகலமும் 30-45 லிட்டர் உயரமும் கொண்ட மணற்குன்றுகளை அமைக்கவேண்டும்.
ஈ) மரபியல் காரணங்கள்
சில மரங்களில் போதுமான உர, நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தபோதிலும் குரும்பை உதிர்வது தொடர்ந்து கொண்டிருக்கும்.இது விதைத் தேங்காய் எடுக்கப்பட்ட விதை மரத்தின் வழியே வந்த குறைபாட்டின் அறிகுறியாகும். ஒன்று போல நல்ல மகசூலை தரும் மரங்கள் கிடைக்க விதைக்காய்களுக்கு தரமான விதை மரத்தை தெரிவு செய்யவேண்டும் என்ற தேவையை இது உணர்த்தும்.
உ) ஊட்டசத்து குறைபாடு
முற்றிலுமாகவோ அல்லது போதுமான அளவிலோ உரமிடாலிருப்பதால் குரும்பைகள் உதிரும்.
பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை குறித்த காலத்தில் இடுவது குரும்பைகள் உதிர்வதைக் குறைப்பதற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.
ஊ) மகரந்த சேர்க்கை இல்லாமை
மகரந்து சேர்க்கை இல்லாததாலும் குரும்பைகள் மற்றும் தோப்பில் எக்டருக்கு பதினைந்து என்ற கணக்கில் தேனீ கூடுகளை ஏற்படுத்துவதால் கலப்பின சேர்க்கை அதிகரிக்கும்.
மேலும் தேனினால் கிடைக்கப்பெறும் கூடுதல் வருவாயினால் குறிப்பிட்ட பரப்பளவிற்குரிய நிகர லாபமும் அதிகரிக்கும்.
எ) உறார்மேன் பற்றாக்குறை
இனச்சேர்க்கை முடிந்த நிலையில் உள்ள பெண்பூக்கள், அதாவது குரும்பைகள், சில சமயங்களில் உதிரும். பாளை வெடித்த ஒரு மாதத்தில் மலர் கொத்தின் மீது 30 (அ) 20 (ஒரு லிட்டர் நீரில் 30 அல்லது 20) தெளிப்பதன் மூலம் காய்க்கும் சதவீதத்தை அதிகரிக்கலாம்.
ஏ) பூச்சிகள்
நாவாய்ப்பூச்சி தாக்குவதால் குரும்பைகள் உதிரலாம்.

0 comments:

Post a Comment