ads

4/11/2018

பசுந்தாள் உரம்-(Pasundhal uram)

பசுந்தாள் உரம் எனப்படுவது தக்கை பூண்டு, சணப்பை, மணிலா, அகத்தி, கொளுஞ்சி, நரிப்பயிறு ஆகியவற்றை உரமாக இடுவது ஆகும்.

மரங்களிலிருந்தோ எடுக்கப்படும் பசுந்தழைகளின் மூலமும் பெறலாம். பசுந்தாள் உரம் என்பது பயிறு வகைகளை பயிரிட்டுஇ பின் போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் உழவுண்டும். பசுந்தாள் உரத்திற்காக வளர்க்கப்படும் பயிர்கள் பசுந்தாள் உரப்பயிர்களாகும்.

 முக்கியமான பசுந்தாள் உரப்பயிர்கள்சணப்பு, தக்ககைப்பூண்டு, பில்லி பயறு, கொத்தவைரை, அகத்தி,கொளுஞ்சி, நெட்டி, சணப்பை ஆகும்.

அங்கக உயிர்ப் பொருள் உற்பத்தி மற்றும் பசுந்தாள் உரத்தில் தழைச்சத்தின் அளவு
பயிர் :1.அகத்தி – வயது நாட்கள் 60. உலர் பொருள் டன் எக்டர் 23.2இ தழைச்சத்தின் அளவு 133.

2.சணப்பு – வயது நாட்கள் 60இ உலர் பொருள் டன் எக்டர் 30.6இ தழைச்சத்தின் அளவு 134.

3.தட்டைப்பயிறு – வயது நாட்கள் 60இ உலர் பொருள் டன் எக்டர் 23.2இ தழைச்சத்தின் அளவு 74.

4.பில்லிப்பயிறு – வயது நாட்கள் 60இ உலர் பொருள் டன் எக்டர் 25.0 தழைச்சத்தின் அளவு 102.

5.கொத்தவரை – வயது நாட்கள் 50இ உலர் பொருள் டன் எக்டர் 3.2இ தழைச்சத்தின் அளவு 91.

பசுந்தாள் உரத்தின் ஊட்ட அளவு: 

1. சணப்பு – 2.30 தழைச்சத்துஇ 0.60 மணிச்சத்து இ சாம்பல் சத்து 0.40 உல்ர் நிலையில் ஊட்டஅளவுகள் ஆகும்.

2. தக்கைப்பூண்டு – 3.50 தழைச்சத்துஇ மணிச்சத்து 0.60 இ சாம்பல் சத்து 1.20 உல்ர் நிலையில் ஊட்டஅளவுகள் ஆகும்.

3. அகத்தி – 2.71 தழைச்சத்துஇ மணிச்சத்து 0.53 இ சாம்பல் சத்து 2.21 உல்ர் நிலையில் ஊட்டஅளவுகள் ஆகும்.
தக்கைப்பூண்டு என்பது தண்டுப் புகுதியில் முடிச்சுள்ள பசுந்தாள் உரப் பயிராகும். இதனுடைய தாயகம் மேற்கு ஆப்ரிக்கா. இது ஓரு குறைவான வாழ்நாள் உடைய தாவரம். ஓளிக்கால அளவுக்கு ஏற்றவாறு எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

 தழைப்பருவத்தின் கால அளவு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தி ல் விதைக்கும் பொழுது குறைவாக இருக்கு ம்.மும்பையில் உள்ள பாபா ஆணு ஆராய்ச்சி நிலையம் உருவாக்கிய திடீர் மாதி ஒளிக்கால அளவுக்கு ஏற்றவாறு எளதில் கிரகித்துக் கொள்ளாது. உப்புத்தன்மை மற்றும் நீர்தேங்கிய நிலைகளை தாங்கக் கூடியது. வளர்ச்சி மற்றும் தழைச்சத்து நிலைப்படுத்துததல் டி.எஸ் ஆர்- 1 இரகத்தில் மற்ற இரகங்களைவ விட அதிகமாக இருக்கும்.

பயன்கள்:1. மண் அமைப்பை மேம்படுத்தும்2. நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும்3. மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும்.4. இயற்கை உரம் இயற்றகை உரம் என்பது தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து கிடைக்கும். ஊட்டச்சத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. 

சிதைவுறுதலுகு;கு பிறகு ஊட்டச்சத்துக்கள் வெளிவருகின்ற்ன. பயிரின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக விலங்குகள்இ மனிதன் மற்றும் காய்கறிகளின் கழிவுகளைப் பயன்படுத்துதல் மற்றம் சேகரித்தல் என்பது வேளாண்மையில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கிறது.

 அங்கக படிவங்கிலுள்ள தாவர ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய விலங்குகள்இதாவரமட்இ மற்றும் மனிதக் கழிவுகளிலிருந்து பெறபப்பட்ட அங்ககப் பொருள்ளே இயற்கை உரம் அல்லது எருவாகும் இயற்கையாக இருக்கக் கூடிய அல்லது செயற்கையான வேதிப்பொருள்களை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்களை செயற்கை உரங்கள் என்று அழைக்கிறோம். 
  குறைவான ஊட்டச்தத்துடைய இயற்கை உரம் அதிக அளவு எச்சப்பயனை உள்ளடக்கியது. அதிக ஊட்டச்சத்துக் கொண்ட செயற்கை உரங்களைக் காட்டிலும் இது மண்ணின் இயல் குணங்களை மேம்படுத்துகிறது.

இயற்கை உரத்தின் முக்கியமான ஆதாரங்கள்:1. கால் நடைத் தொழுவத்தின் கழிவுகள்- சாணம்இ சீறுநீர்இசாண எரிவாயயுக் கலத்தில் உள்ள சேற்றுக் குழம்பு.

2. மனிதன் வாழும் இடங்களில் இருந்து வரும் கழிவுகள் மலக்கழிவு, சீறுநீர், நகரக் கழிவுகள், கழிவு நீர், சாக்கடைக் கழிவு, கழிவுப்படிவம்.

3. கோழிப்பண்ணைக் குப்பை, ஆடு, மாடுகளின கழிவுகள்.

4. இறைச்சி வெட்டுமிடத்தில் உள்ள கழிவுகள் எலும்பு எரு, மாமிச எரு, இரத்தக் குருதி எரு, கொம்பு மற்றும் குளம்பு எரு, மீனின் கழிவுகள்.

5. வேளாண் தொழில் துறையினுடைய துணைப் பொருட்கள் எண்ணெய் பின்னாபக்கு, கரும்புச் சக்கை , மற்றம் சர்க்கரை ஆலைக் கழிவு , பழ மற்றும் காய்கறி பதப்படுத்வுததிலிருந்து வரக்கூடிய கழிவுகள் மற்றும் இன்ன பிற பொருட்கள்.

6. பயிர் கழிவுகள் கரும்புச் சருகு , பயிர்த்தூர் மற்றும் இதர பொருட்கள்.

7. வெங்காயத் தாமரை , களைகள் , நீர்த் தொட்டியின் படிவுகள் .

8. பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் பசுந்தழை உரப் பொருட்கள்பருமனனான அங்ககப் பொருட்கள்பருமானனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. மற்றும் அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம்இமட்கிய உரம் , பசுந்தாள் உரங்கள் பருமானன அங்ககப் பொருட்களின் ஆதாரங்கள் ஆகும். 

இதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:1. நுண் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய தாவர ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது.

2. மண் இயல் நிலைக் குணங்களான மண் அமைப்புஇநீர் பிடிப்புக் கொள்ளளவு.

0 comments:

Post a Comment