ads

4/02/2018

பசுந்தாள் உரம் தேவையான பொருட்கள்-(Pasunthhal uram thayarika thevaiyana porutkal)


பசுந்தாள் உரம்

தேவையான பொருட்கள்

🍯 அகத்தி

🍯 சணப்பு

🍯 தட்டைப்பயிறு

🍯 பில்லிப்பயிறு

🍯 கொத்தவரை

தயாரிக்கும் முறை

🍯 பசுந்தாள் உரம் என்பது பசுமையான, சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துவதாகும். இதனை 2 வழிகளில் பெறலாம்.

🍯 பசுந்தாள் பயிர்களை வளர்ப்பதன் மூலமோ அல்லது தரிசுநிலம், வயல் வரப்பு, காடுகளில் வளரும் மரங்களிலிருந்தோ எடுக்கப்படும். பசுந்தழைகளின் மூலமும் பெறலாம். பசுந்தாள் உரம் என்பது பயிறு வகைகளை பயிரிட்டு, பின் போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் உழவேண்டும். பசுந்தாள் உரத்திற்காக வளர்க்கப்படும் பயிர்கள் பசுந்தாள் உரப்பயிர்களாகும்.

🍯 முக்கியமான பசுந்தாள் உரப்பயிர்கள்: சணப்பு, தக்கைப் பூண்டு, பில்லி பயிறு, கொத்தவரை, அகத்தி

பசுந்தழை உரம்

🍯 பசுந்தழை உரம் என்பது வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இலைகள், மரங்களின் கொம்புகள், புதர்செடி, சிறு செடிகளை உபயோகித்தல் ஆகும். காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனம் ஆகும்.

🍯 பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம் ஆகும்.

🍯 பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் - வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி, சிலோன் வாகை, புங்கம், எருக்கு, அகத்தி, சுபாபுல் மற்றும் மற்ற புதர் செடிகள்.

நன்மைகள்

🍯 பசுந்தாள் உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகின்றன.

🍯 நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தாள் உரத்திற்கு உள்ளது.

🍯 பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.

🍯 காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது. வேர் முடிச்சு நூற்புழுக்களை, பசுந்தழை உரம் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.






0 comments:

Post a Comment