ads

4/02/2018

மா சாகுபடியில் உள்ள பூச்சி தாக்குதல், நோய் கட்டுப்பாடு-(Maa marathil poochi thaakuthal mattrum nooi kattupaadu)


மா சாகுபடியில் உள்ள பூச்சி தாக்குதல், நோய் கட்டுப்பாடு மற்றும் அறுவடை பற்றி பார்ப்போம்.

பூச்சிகள் :

தத்துப்பூச்சி:

பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் பிஞ்சுகள் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வேப்பெண்ணையை கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தௌிப்பான் மூலம் தௌிக்கவேண்டும்.

தௌிக்கும் காலம் - மரம் பூ  பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தௌிக்க வேண்டும்.

அசுவினி செதில் பூச்சி :

இவற்றைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வேப்பெண்ணையை தௌிப்பான் மூலம் தௌிக்க வேண்டும்.

பூங்கொத்துப்புழு :

இவை பூ பூக்கும் தருணத்தில் பூங்கொத்துக்களில் கூடுபோல் கட்டிக்கொண்ட பூ மொட்டுகளைத் தின்று சேதப்படுத்தும்.

கட்டுப்பாடு - இதை கட்டுப்படுத்த வேப்பெண்ணையை தௌிக்கலாம்.

மாங்கொட்டை வண்டு அல்லது மூக்கு வண்டுகளை கட்டுப்படுத்துதல் :

மாந்தோப்புகளில் மரத்தின்கீழ் விழக்கூடிய காய்கள், மாங்கொட்டைகள் மற்றும் சருகுகளை சேகரித்து எரித்துவிடவேண்டும்.

காய்பிடிக்கும் காலத்தில் ஒரு முறையும், பிறகு 15 நாட்களுக்குப் பின்னரும், வேப்பம் புண்ணாக்கை கரைத்து தௌிப்பான் மூலம் தௌிக்கலாம்.

தண்டு துளைப்பான் :

வண்டுகள் மரத்தின் மேல் பட்டைகளில் முட்டையிட்டு, முட்டைகள் புழுவாக மாறி, பட்டையின் உட்பாகத்தை துளைத்துத் தின்னும், இதனால் கிளைகளும், சில நேரம் முழு மரமும் வாடி பின்பு காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை :

தரைமட்டத்திலிருந்து சுமார் 1 மீட்டர் உயரத்தில் மரத்தின் பட்டையை லேசாக செதுக்கி நீக்கிக் கொண்டு, இதன் இடையில் வேப்பெண்னையை தடவ வேண்டும் பின்பு பட்டையை மரத்தோடு பொருத்தி களிமண் பசையினால் மூடிவிடவேண்டும்.

பழ ஈ :

பழ ஈக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஈ தாக்கப்பட்ட பழங்களின் மேல் வெளிரிய மஞ்சள் நிற புள்ளிகள் தெரியும். அதன் நடுப்பகுதியில் கருப்பான புள்ளி தெரியும். பழத்தை அழுத்தும்போது அதிலிருந்து ஒரு திரவம் வெளிவரும்.

கோடை உழவு செய்து மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்களை மண்ணின் மேல் பகுதிக்குக் கொண்டு வருவதால் அவை சூர்ய வெளிச்சத்தில் அழிந்துவிடும். மரத்துக்கு அடியில் விழுந்து கிடக்கும் தாக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து எரித்து வேண்டும்.

விளக்குபொறியை ஒரு ஏக்;கருக்கு 4 என்ற வீதம் வைத்து  பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

நோய்கள் :

சாம்பல் நோய் :

இந்த நோய் தாக்கப்பட்டால் இலைகள் சாம்பல் நிறமாகி காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த அரப்பு மோர் கரைசல் தௌிக்கலாம்.

இலைப்புள்ளி :

இந்த நோய் தாக்கப்பட்டால் இலைகளில் கரும்புள்ளி காணப்படும். இதைக் கட்டுப்படுத்த தேமோர் கரைசலை அறுவடை செய்வதற்குமுன் பதினைந்து நாள் இடைவெளியில் மூன்று முறை தௌிக்கலாம்.

கரும் பூஞ்சாண நோய் :

இலைகளின் மேற்பரப்பில் கருமையான படலம் தோன்றி, இலைகள் கருப்பாகத் தென்படும். இதை கட்டுப்படுத்த வேப்பெண்ணை தௌிக்கலாம்.

அறுவடை :

மா மார்ச் முதல் ஜுன் வரை அறுவடைக்கு வரும். ரகத்திற்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கு ஏற்பவும் மகசூல் மாறுபட்டு கிடைக்கும்.

முதல் பதினைந்து ஆண்டுகள் ஒரு ஹெக்டருக்கு 8 முதல் 10 டன் வரை கிடைக்கும். அதன் பிறகு 15-20 வருடங்களுக்கு ஒரு ஹெக்டருக்கு 15 முதல் 20 டன் வரை கிடைக்கும்.



0 comments:

Post a Comment