ads

4/04/2018

உப்பு நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது எப்படி- (Uppu Neerai Paasanthuku payanpaduthuvathu yeppadi)


குறிப்பாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வரும் உப்புநீரை பாசனத்திற்கு  
பயன்படுத்துவது எப்படி என்று கேள்வி. 


ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில்

 மழைநீரைச் சேகரிக்க பண்ணைக்குட்டை அல்லது மழைநீர் சேகரிப்பு, தொட்டிகள் அமைக்கலாம் என்கிறார் பேராசிரியர் வேல்முருகன்.


அதாவது ஆழ்துளைக் கிணற்றுக்கு 

அருகில் 3 அடி நீளம் 2 1/2 அடி அகலம், 4 அடி ஆழத்துக்கு குழி எடுத்து அதில் 3 அடி
 உயரத்துக்கு ஜல்லி, ஜல்லிகற்களை நிரப்பி அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு மணல் நிரப்பினார். மழைநீர் சேகரிப்பு தொட்டி
 தயாராகி விடும். இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் உயரும். 


காலப்போக்கில் உப்புத்தன்மையும் குறைய வாய்ப்புகள் உள்ளன.



தவிர தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்வதால் அது 

மண்ணில் உள்ள உப்புத்தன்மைக் 
குறைக்கிறது.


நன்றாக விளைச்சல் கொடுக்கக்கூடிய

 திருச்சி1, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம்.


கூடவே இயற்கை உரங்களை நிறைய பயன்படுத்த வேண்டும். கேழ்வரகு,

 வரகு போன்ற உப்புத்தன்மையைத் 
தாங்கி வளரும்.சிறு தானியங்களையும் 
சாகுபடி செய்யலாம்.


பழமரங்களைப் பொறுத்தவரையில் 

கொய்யா, புளி, நாவல், நெல்லி 
போன்றவற்றை இந்த மாதிரியான 
நிலத்திற்கு ஏற்றதாக இருக்கும். 

0 comments:

Post a Comment