ads

4/19/2018

கோமாரிநோய் அல்லது காணை நோய்கான ( வெக்கை நோய்) இயற்கை வைத்தியம்-(Komaari or kaanai noiku iyarkkai vaithiyam)


இந்த நோய் வெயில் காலத்தில் அதிகமாக கால்நடையை தாக்கும் நாம முன் கூட்டியே அதற்கான தடுப்பூசியை போட்டு இருக்கனும் தற்போதுள்ள இளம் ஆட்டுக் குட்டிகளுக்கும் தடுப்பூசி முன் கூட்டியே போட வேண்டும்

காணை  நோய்க்கான அறிகுறி
வாய்ப்பகுதி மற்றும் கால் பகுதியை சுற்றி புண்கள் ஏற்டும் தீவனம் எடுக்காது வாயில் எச்சில் வந்து கொண்டே இருக்கும். நடுக்கம் ஏற்படும். அசை போடாது.  கால்பகுதியில் உள்ள புண்ணில் புழுக்கள் வைத்துவிடும். சரி வர நடக்காது சரியாக பார்க்காமல் விட்டால் இறக்கக் நேரிடும்

தடுப்பு நடவடிக்கை 

புண்களுக்கு மஞ்சள், வேப்பிலையை  அரைத்து பூசி விடலாம்  அல்லது குப்பைமேணி இலையை அரைத்து தடவி விடலாம் தீவனமாக அகத்திக் கீரை கொடுக்கலாம்

சீரகம் 100 கிராம்
வெந்தயம் 100 கிராம்

இவற்றை முதல் நாள் இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

 பிறகு அடுத்த நாள் அவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து நிறிதளவு தண்ணீர் ஊற்றி கால்நடைகளுக்கு புரையேராமல் நாக்கு பகுதியை இழுத்து பிடித்துக் கொண்டு ஆடுகளுக்கு 50 மில்லி அளவும் மாடுகளுக்கு 100 மில்லி அளவும் ஊற்றி விட வேண்டும்

0 comments:

Post a Comment