ads

4/02/2018

தென்னையை தாக்கும் பூச்சிகளும், கட்டுப்படுத்தும் முறைகளும்-(Thennai marathai thaakum poochi matrum athanai kattupaduthum murai)


தென்னையை தாக்கும்  பூச்சிகளும், கட்டுப்படுத்தும் முறைகளும்

அதிக மகசூல் தரும் மரத்தில் தென்னை மரமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அந்த மரத்தை பல பூச்சிகளும், நோய்களும் தாக்குகின்றன. அதைப்பற்றி இங்கு காண்போம்.

தாக்கும் பூச்சிகள் :

தென்னையை பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்கள் சேதப்படுத்துகிறது.

தென்னை ஓலைகளை சுரண்டி உண்ணும் கருத்தலைப்புழு, தென்னைங்குருத்தை கடித்து உண்ணும் காண்டாமிருக வண்டு போன்றவை மரத்தினை அதிக சேதபடுத்திவிடும்.

சிவப்புக்கூன் வண்டு தென்னைங்குருத்தை தன் வாய் உறுப்பினால் குத்தி உறிஞ்சி காய்களின் தரத்தை கெடுக்கும்.

இலை உண்ணும் புழுக்கள் அவ்வப்போது தோன்றி அதிகமாக சேதத்தை உண்டாக்குகிறது.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலின் அறிகுறிகள் :

தற்போது புதிய ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சி தோன்றி அதிக சேதத்தை உண்டாக்குகிறது.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தென்னை மரங்களின் ஓலைகளை சேதப்படுத்துகிறது. இந்த பூச்சி பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தென்னை மட்டை இலைகளின் கீழ்பரப்பில் சுருள் சுருளாக வெண்மை நிறத்தில் முட்டைகளை இடும். முட்டைகள் அடர்ந்த வெண்மை நிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும்.

இவற்றின் உடலில் இருந்து சுரக்கும் தேன் போன்ற இனிப்பு திரவத்தால் இலைகளின் மேற்பரப்பு முழுவதும் கரும்புூசணம் பெருமளவில் வளர்ந்து இலை பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும்.

இதனால் ஒளிச்சேர்க்கை முற்றிலும் தடைபட்டு பயிர் வளர்ச்சி குன்றிவிடும்.

இப்பூச்சிகளால் இலைகளின் சாறு உறிஞ்சப்பட்டு மஞ்சள் நிறமடைந்து நாளடைவில் சருகுபோல் காய்ந்துவிடும்.

இப்புூச்சிகளின் தென்னை மட்டுமின்றி மா, வாழை, கொய்யா, சப்போட்டா, சீத்தா, எலுமிச்சை மற்றும் செம்பருத்தி செடிகளை தாக்கி சேதம் உண்டாக்குகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள் :

இந்த பூச்சிகள் தாக்கிய தோப்புகளில் ரசாயன பூச்சிகொல்லிகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்துவிடும்.

பூச்சி தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஏக்கருக்கு 7 முதல் 10 வரை தோப்புகளில் வைத்து  பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

தாய் பூச்சிகளின் நடமாட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகளவில் இருக்கும் என்பதால் ஏக்கருக்கு 2 விளக்கு பொறிகளை அமைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

இலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படும் முட்டைகள் இளம்பருவ மற்றும் முதிர்ந்தபூச்சிகளை ரேயர் மற்றும் பவர் ஸ்பிரேயர் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும், பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

பூச்சி தாக்குதலால் தோன்றிய கரும்பு+சணத்தை அகற்ற லிட்டருக்கு 25 கிராம் மைதா மாவு பசையை தண்ணீரில் கலந்து, அவற்றை இலைகளின் மேற்பகுதியில் நன்கு நனையுமாறு தௌpக்க வேண்டும்.

இப்புச்சிகளுக்கு இயற்கையிலேயே பிரதிபலிப்பதாக பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகள், பொறி வண்டுகள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றை பேணிகாக்க வேண்டும். இபூச்சியினை கட்டுப்படுத்த பச்சை கண்ணாடி இறக்கைப்புூச்சிகளின் முட்டைகள், இளம்பருவபூச்சிகள் அடங்கிய ஒட்டுண்ணி அட்டைகளை தென்னை ஓலைகளில் ஆங்காங்கே கட்டி வைக்க வேண்டும்.

தாவர புூச்சிக்கொல்லிகள் :

வேப்பங்கொட்டைச்சாறு கரைசல், வேப்ப இலைக்கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல், மீன் அமிலம், சோப்புக்கரைசல், மூலிகை பூச்சி விரட்டி இவற்றில் ஏதேனும் ஒன்றை தௌpத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.






0 comments:

Post a Comment