ads

4/09/2018

தென்னைக்கு இயற்கை முறையில் தழைச்சத்து கிடைக்க-(Thennaiku iyarkai muraiul thalaisaththu kidaikka)

தென்னைக்கு  இயற்கை முறையில்
தழைச்சத்து கிடைக்க

தற்பொழுது அனேக மாவட்டத்தில் ஓரளவுக்கு மழை பெய்துள்ளது இந்த மழையை பயன்படுத்தி தென்னந் தோப்பு வைத்துள்ள விவசாயிகள் அதிக களை வருவதை தடுக்கவும்,  தென்னமரத்தின் வேர்கள் நன்கு ஓடவும் மரத்தில் உள்ள குரும்பை உதிராமலும், சொறி காய்கள் வராமலும் இருக்க ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 கிலோ வரை கொள், அல்லது சனப்பு, தக்கப்பூண்டு  இதில் ஏதாவது ஒன்றை விதைக்கவும்.

விதைத்த 40 நாட்களுக்கு மேல்  பூ எடுக்கும் தருணத்தில்  மடக்கி ரொட்டவேட்டர் விட்டு நன்கு வெட்டிவிட்டால் அவை ஒரு வாரத்திற்குள் நன்றாக மக்கிவிடும் மரத்திற்கு தழைச்சத்து கிடைத்து மரம் நன்கு செழிப்புடன் இருப்பது மட்டுமல்லாமல்  புது பாளை எடுத்து பிஞ்சு அதிகம் பிடிக்கும்

 இவை நல்ல தருணமாக இருப்பதாலும்.  பல இடங்களில் தென்னை மரம் தண்ணீர் இல்லாமல் மரமே காய்ந்து போய்விட்டது தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது எனவே அனைத்து விவசாயிகளும் தென்னை மரத்தை பராமரித்து அதிக லாபம் கிடைக்க முன்வருவோம்.

களை அதிகம் இருந்தால் புழு, வண்டுகளின்  தாக்குதல் ஏற்பட வாய்ப்பாக அமையும்

0 comments:

Post a Comment