ads

4/06/2018

தரமான விதையை தேர்வு செய்வது எப்படி?-(Tharamana vithaiyai thervu swivathu yepadi)


தரமான விதை என்பது பாரம்பரிய குணங்களில் இருந்து சிறிதும் குறையாமல் இருக்க வேண்டும். அதிகப்படியான முளைப்பு திறன், அளவான ஈரப்பதம், இனத்தூய்மை, புறத்தூய்மை, பூச்சி நோய் தாக்குதல் இல்லாமை ஆகிய குணாதிசயங்களை கொண்டதாக இருக்க வேண்டும்.

தரமான விதை உற்பத்தி

விதை தரத்திற்கு தமிழ்நாடு அரசு விதை சான்றுத்துறை உத்தரவாத சான்று வழங்குகிறது. விதை என்ற அடிப்படை இடுபொருளை தேர்ந்தெடுக்கும் போது சிறிது கவன குறைவு ஏற்பட்டாலும் மொத்த விளைச்சலும் பாதிக்கப்படும். விதை பண்ணைகளை விதை சான்றுத்துறை அலுவலர்கள் பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து உற்பத்தி செய்யப்படும் விதை குவியலுக்கு நீலநிற அட்டையில் சான்று வழங்கப்படுகிறது.

இதில் பயிர் ரகம், உற்பத்தி தேதி, எடை அளவு, முளைப்புத்திறன், காலாவதி தேதி போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். விதை விதைத்தல், பயிர் வளர்ப்பு, பயிர் பாதுகாப்பு, வேளாண்மைத்துறை பரிந்துரைப்படி செய்ய வேண்டும்.

- விதை சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறை துணை இயக்குனர்

0 comments:

Post a Comment