ads

4/25/2018

செடிஅவரையில்பூகொட்டாமல்இருக்க-(Chedi avaraiul poo kottamal iruku)

தயாரிக்க தேவையான பொருட்கள்:


1.வாழை மரத்தின் பக்கக் கன்றுகள் 5

2.வெல்லம் அரைக்கிலோ

3.மூன்று நாட்கள் புளித்த தயிர்  அரைலிட்டர்.

4.பெருங்காய பொடி 100 கிராம் அளவு.

5.இரு கையளவு முருங்கை கீரை.

6.தேவைக்கேற்ப தண்ணீர்

செய்முறை

முதல் படி

வாழை மரத்தின் பக்கக் கன்றுகளை அதிகாலை 5 மணியளவில் சேகரித்து அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்

இரண்டாவது படி

வெல்லத்தை நன்கு பொடிசெய்து  ஒரு லிட்டர் தண்ணீரில் கொட்டி கரைத்துக்கொண்டு அதில் நறுக்கி வைத்துள்ள வாழைமரத்தின் துண்டுகளை கொட்டி  ஊற விடவும்

மூன்றாம் படி

முருங்கை கீரையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் அவற்றை மூன்றுநாள் புளிக்க வைக்க தயிரில் பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கரைத்து  அதன் பிறகு மூன்றையும் வெல்லக்கரைசலில் சேர்த்து கலக்கி மூடி வைக்க வேண்டும் பிறகு அடுத்தநாள் 10 லிட்டர் தண்ணீருக்கு  200 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்து வந்தால் பூக்கள் கொட்டாது

குறிப்பு : வாழை மரத்தின் நுனிப்பகுதியில் பயிரக்கு தேவையான வளர்ச்சி ஊக்கியை இரவில் சேமித்து வைத்திருக்கும் வெயில் தெரிந்தால் அவை மரத்தின் அடிப்பகுதிக்குச் சென்று விடும் அதனால் அதிகாலை 5 மணிக்குள் தேர்வு செய்வது நல்லது

முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து உள்ளது.

புளித்த தயிரில் வளர்ச்சி ஊக்கிகள் உள்ளது.

பெருங்காயத்தில்  - பூக்கள் அதிகம் பிடிக்கும் தன்மை உள்ளது.


0 comments:

Post a Comment