ads

4/25/2018

களர் நிலத்தை சரி செய்ய டிப்ஸ்_(Color nilathai sari seiya tips)

களர் நிலத்தை சரி செய்ய டிப்ஸ்


களர் நிலத்தை சரி செய்ய சணப்புப் பயிரை விதைத்து அதை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் போதும்.

களர் நிலத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டை பயிரிட்டு, அது பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்யவேண்டும்.

களர் நிலத்தை சரிசெய்ய பிரண்டையை இடலாம்.

களர்நிலத்தில் வேப்பந்தழை இட்டால் சரியாகும்.

உப்புநிலத்தை சரிசெய்ய வேப்பங்கொட்டை மேல் தோலை இடலாம்.

வேப்பம் புண்ணாக்கு இட்டால் உவர் தன்மை சரியாகும்.

பனை மரத்தின் ஓலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அதிகளவு நிலத்தில் இட்டால் களர் தன்மை சரியாகிவிடும்.

புங்கம் இலையையோ, புளியம்பழத்தின் மேற்தோலையோ இட்டால் களர் நிலம் நல்ல நிலமாக மாறும்.

மட்கு உரத்துடன் தென்னை நார்க்கழிவை கலந்து இட்டால் களர் தன்மை மாறும்.

கரும்பாலை கழிவு, நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவு ஆகியவற்றை நிலத்தில் போட்டால் களர் தன்மை மாறும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

0 comments:

Post a Comment