ads

4/17/2018

பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பு விவசாயிகள் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்-(paiur sagupadi seiya tips)

#பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பு விவசாயிகள் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்

உழவு செய்தல்

சாகுபடி நிலத்தை கோடை காலத்தில் உழவு செய்வது சிறந்த முறையாகும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைக்கப் பட்டிருக்கும் பூச்சியின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் போன்றவைகள் அழிக்கப்படுகின்றன. நிலத்தில் நீர் பிடிப்பு தன்மை காக்கப்படுகின்றது.

விதைத் தேர்வு செய்தல் 

பயிர் சாகுபடிக்காக பயன்படுத்தும் விதைகள், நாற்றுகள், பூச்சி நோய் தாக்குதல் இல்லாததாகவும் நன்கு முற்றிய விதைகளாகவும், பூச்சி நோய் தாக்காத ரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட விதையை பயன்படுத்த வேண்டும் அல்லது அனுபவமுள்ள விதை நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட விதைகளாக இருக்க வேண்டும்

மற்றும் விதை வாங்கும் போது  அட்டையில்  முளைப்புத்திறன், காலாவதி நாள், ரகம் குவியல் எண்; முதலியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் அவ்வாறு உள்ள விதையை வாங்கி பயன் படுத்தலாம்.

பருவத்தில் விதைத்தல் மற்றும் அறுவடை 

பட்டம் தவறினால் நட்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப  பயிர் சாகுபடிக்கு ஏற்ற பட்டத்தில் விவசாயம் செய்வது மிகமிக முக்கியம் காலம் தவறி விவசாயம் செய்தால் மகசூல் குறைவதுடன்   பூச்சி நோய்; அதிகமாக தாக்கி சேதாரத்தை உண்டு பண்ணும். பயிரின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தில் மட்டுமே பூச்சி, நோய்கள் தாக்குதல் அதிகமாகும்.

அதே போல அறுவடையின் போதும் பூச்சி நோய் தாக்கும். சரியான பருவ காலத்தில் விதைத்து அறுவடை செய்ய வேண்டும் அதனால்  பருவத்தில் விதைத்தல் மற்றும் அறுவடை செய்வது  மிகமிக முக்கியம்.  பருவத்தில் போதிய மழை இல்லை அதனால் விதைப்பது கடினம்   மழை பெய்யும்  சமையத்தில்   பட்டம் தவறி விவசாயம் செய்கிறோம் என்று இல்லாமல்  சூழ்நிலைக்கு ஏற்ப  பயிர் சாகுபடியை மாற்றி அமைக்கலாம்.

பயிர் சுழற்சி முறை

சாகுபடி நிலங்களில் தொடர்ந்து ஒரே தாவர குடும்பத்தை சார்ந்த பயிர்களை சாகுபடி செய்வதால் பூச்சி நோய்களை அதிகமாக பெருகவும் நிலத்தின் வளம் குறையவும் வாய்ப்புள்ளது. பயிர் சுழற்சி முறையை கையாண்டு பயிர் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பருவத்திலும் வௌ;வேறு மாற்றுப் பயிர்கள் சாகுபடி செய்வதால் பூச்சிகளும், பூஞ்சாணங்களும் பெருக வாய்ப்பில்லை. எனவே பயிர் சுழற்சி முறையை பின்பற்றுவது மிகவும் அவசியம். இவ்வாறு சாகுபடி செய்வதால்  பூச்சிகள், புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணி நூற்புழு (Prasitic Nematodes), பேக்டீரியாக்கள் (Bacteria) பூஞ்சாளங்கள் (Fungi போன்ற நோய்களும் உண்டாவது தடுக்கப்படும். மேலும் இம்முறை மூலம் ஒட்டுண்ணி களைகளான (Parastic Weed) ஸ்ட்ரைக்கா, ஓரோபென்ஜி தாக்குதல்கள் தடுக்கப்படும்.

பொறிப் பயிர் சாகுபடி

பயிர் சாகுபடியின் பொழுது சில வகைப் பயிர்களை ஊடுபயிர்களாகவும் (Inter Crop) வரப்பு பயிர்களாகவும் (Border  Crop)சாகுபடி செய்வதன்  மூலம் பூச்சிகளின் தாக்குதல்களை குறைக்கலாம்.

உதாரணமாக காய்கறி சாகுபடி செய்யும் நிலங்களில் வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கொத்தமல்லி போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் அந்த ஊடு பயிர்களில் இருந்து வெளிவரும் வாசனை காய்கறி செடிகளைத் தாக்க வரும் பூச்சிகளை விரட்டி விடும்.

துவரை சாகுபடி செய்யும் நிலங்களில் ஊடுபயிராக சோளம், கம்பு, செவ்வந்தி பயிரிடலாம்.  இவ்வாறு  ஊடுபயிர் சாகுபடி செய்வதால் துவரையைத் தாக்கும் காய்துளைப்பானின் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.  ஊடுபயிர்களில் பெண் பூச்சிகள் முட்டைகளை இடும். இந்த முட்டைகளை சேகரித்து அழித்து விடலாம்.

வெண்டைப் பயிரில் ஊடுபயிராக பாகற்கொடி பயிர் செய்து வெண்டையை தாக்கும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

ஆமணக்கு பயிரை வரப்போரப் பயிராக சாகுபடி செய்வதன் மூலமாக சாகுபடி நிலங்களில் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.

செவ்வந்தி (Marigold) ஊடுபயிராகவும், வரப்புப்  பயிராகவும்  சாகுபடி  செய்வதன்  மூலம் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

வரப்புப் பயிர்களாக சோளம், கம்பு மக்காச்சோளம் ஆகியவற்றை மிக நெருக்கமாக விதைப்பதால் அடுத்த வயல்களில் இருந்து வரும் பூச்சிகள் கட்டுப்படுத்தலாம்.

சாகுபடி நிலங்களில் உள்ள களைகள், பயிர்களின் எஞ்சிய பாகங்கள் ஆகியவற்றில்  பூச்சிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சாளங்கள், வைரஸ் போன்றவை தங்கி அவைகளின் இருப்பிடமாகவும், உணவாகவும் கழிவுகளை பயன்படுத்திக் கொண்டு நோய்களையும், பூச்சிகளையும் பரப்பும்.

 எனவே இக்கழிவுப் பொருட்களை அவ்வப்பொழுது நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும். இதனால் பூச்சி நோய்களை தடுக்கலாம்.

சில நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை

உளுந்து, தட்டைபயறு, பாசிப்பயறு சாகுபடி செய்வதால் சாம்பல் நோய் அவற்றில் தாக்கும் அவற்றை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 10 கிலோ யூக்கலிப்டஸ் இலையில்  சாறு எடுத்து அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

 கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மறுபடியும்  அடுத்த  வாரம் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் யூக்கலிப்டஸ் இலைச்சாறு எடுத்து அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த

அடி உழவு போடும் போது ஒரு ஏக்கருக்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோவை 100 கிலோ தொழு எருவில் கலந்து வயலில் தூவி விட வேண்டும். அவற்றுடன் 75 கிலோ வேப்பம் புண்ணாக்கு அடி உழவில் போட்டு வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.

வாடல் நோய் கருகல் நோய், இலைப் புள்ளி நோய் போன்ற நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு சூடோமோனஸ் 2 கிலோவை 100 கிலோ தொழு எருவில் கலந்து வயலில் தூவி விட வேண்டும் அல்லது சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் என்ற அளவில் கலந்து செடிக்கு அருகில் ஊற்றி விடலாம் அல்லது தெளிக்கலாம்.
சாறுறிஞ்சும் பூச்சி மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த

மஞ்சள் அட்டை நிறப்பொறி ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் வைத்து பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். இனக்கவர்ச்சி பொறி  ஒரு ஏக்கருக்கு  ஒன்று வைத்து ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்

0 comments:

Post a Comment