ads

4/11/2018

ஊட்டமேற்றியதொழுஉரம் தயாரித்தல்-(Ootamettriya tholu uram thayarithal)


ஒரு ஏக்கருக்கு தொழுவுரம் 5 டன்  போட்டு பயிர் சாகுபடி செய்யும் இடத்தில் ஊட்டமேற்றிய தொழுஉரம் ஒரு டன் போட்டாலே  போதும் இவ்வாறு பயன்படுத்துவதால்  நமக்கு செலவு குறையும் நிறைந்த மகசூலும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்

தொழுவுரத்தை ஊட்டமேற்றி பயன்படுத்துவதால் செலவு குறையும்

நுண்ணுயிர்கள் அதிகரிக்கும்

பயிருக்கு தேவையான  தழை, மணி, சாம்பல் சத்துக்களும், நுண்ணூட்ட சத்துக்களும் கிடைக்கும்

 பயிரின் வளர்ச்சி ஓரே சீராக இருக்கும்

பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும்

சுற்றுபுற சூழல் பாதுகாப்பானது

மகசூல் 20- 30 சதம் கூடும்

மண்வளம் கூடும்

காய்கறிகள் விரைவில் கெடாது, பளபளப்புடனும், சுவை மிகுந்தும் காணப்படும்

ஒரு ஏக்கருக்கு ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 200 கிலோ
அசோஸ்பைரில்லம் 3கிலோ
பாஸ்போபாக்டீரியா 3 கிலோ
பொட்டாஷ; பாக்டீரியா 3 கிலோ
வேம்( மைக்கோரைசா ) 3 கிலோ
பிவேரியா 1கிலோ
பெசிலியொமைசிஸ் 1 கிலோ
டிரைக்கோடெர்மா விரிடி 1 கிலோ
சூடோமோனஸ் 1 கிலோ
வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ
நுண்ணூட்டச்சத்து 1 கிலோ
நாட்டு சர்க்கரை 1 கிலோ
சாம்பல் 2 கிலோ

தயாரிக்கும் முறை

முதலில் மக்கிய தொழுவுரத்தை நன்றாக கிளறி தண்ணீர் தெளித்து  3 முதல் 4 நாட்கள் நிழலில் ஆறவிடவும் அவற்றில் கட்டிகள், கல், தூசி முதலியவை இல்லாமல் நன்றாக நொறுக்கி விடவும்

மண்புழு உரமாக இருந்தால்  நொறுக்க தேவையில்லை

மேலே உள்ள அனைத்து உயிர் உரங்கள், நுண்ணூட்டம், வேப்பம் புண்ணாக்கு, சாம்பல்  அனைத்தையும் ஒன்றாக கொட்டி எல்லாவற்றையும் நன்கு கலக்கி விடவேண்டும்.

 பிறகு நாட்டுச் சர்க்கரையை  தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கரைத்து கலக்கி வைத்துள்ள கலவையில் தெளித்து திரும்பவும் மண்வெட்டியால் நன்றாக பிரட்டிவிட வேண்டும்.

கையில் பிடித்து  பார்த்தால் உருண்டையாக உருட்டும் அளவிற்கு இருக்க வேண்டும். பிறகு அவற்றில் தென்னை ஓலை அல்லது கோணிசாக்கு கொண்டு மூடி நிழலில் ஒரு வாரம் வரை வைத்திருந்து பயிருக்கு பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் விதம்

அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்

அடியுரமாக போடலாம்

தொடர்ந்து இதேபோல கலக்கி வைத்திருந்து மாதத்திற்கு ஒருமுறை அல்லது செடியின் வளர்ச்சிப் பருவம், பூ பருவம், காய் பருவம், முதிர்ச்சி பரும் ஆகிய பருவங்களில் போடலாம். போடும் போது வயலில் ஈரம் இருக்க வேண்டும்.


1 comment:

  1. இதனுடன் தலா 5 லிட்டர் பஞ்சகாவியா மீன்அமிலம் இம் கரைசல் சேர்த்து பிசுயன்படுத்தலாமா?

    ReplyDelete