ads

3/16/2018

மீன் அமினோ அமிலம்-(meen amini amilam thayarippathu yeppadi)

video:


மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது
இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
பிற பயன்கள்: மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.
விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.

0 comments:

Post a Comment