குடற்புழு நீக்கம்
கருவுற்ற ஆடுகளுக்கு ஐந்தாம் மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் போடலாம்.
கடைசி ஐந்தாம் மாதங்களில் குடற்புழு நீக்கம் செய்வதை தவிர்த்தல் நலம்.
ஐந்தாம் மாத சினையில் உள்ள ஆடுகள் குடற்புழுவினால் மிகவும் மெலிந்து, இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே குடற்புழுநீக்கம் செய்யலாம்.
குடற்புழு நீக்க மருந்தாக FENBENDASOL பயன்படுத்துவது கருச்சிதைவிலிருந்து கருவுற்ற ஆட்டை பாதுகாக்கும்.
இயற்கை முறையில் குடற்புழு நீக்கம் செய்ய :
சோற்றுக்கற்றாழை - 1மடல்
பிரண்டை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 5 கிராம்
கல்உப்பு - 5 கிராம்
விளக்கெண்ணெய் - 10 மில்லி.
சோற்றுக்கற்றாழையின் முட்களை சீவி, துண்டுகளாக வெட்டி, அதனுடன் பிரண்டை, கல்உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் தரவும்.
இக்கலவையை தந்த பின்னர், இரண்டு மணிநேரத்திற்கு தண்ணீர், தீவனம் தரக்கூடாது.
இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் அடர்தீவனம், அடுத்ததாக பசுந்தீவனம் என அன்றாட தீவனத்தை தரலாம்.
# கருவுற்ற ஆடுகளுக்கு கொள்ளை நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் போடும்போது கருச்சிதைவு உண்டாகும் என்பது தவறான நம்பிக்கை.
#கருவுற்ற ஆடுகளுக்கு அனைத்து தடுப்பூசிகளையும் போடலாம்.
#ஐந்தாம் மாத சினையில் இருக்கும் ஆடுகளை மட்டும் தவிர்க்கலாம்.
கருவுற்ற ஆடுகளுக்கு TT ( டெட்டனஸ் டாக்ஸாய்டு) தடுப்பூசி சினை பருவத்தின் 3 ம் மாதம் மற்றும் குட்டி ஈன்ற இரண்டு மணிநேரத்தில் ஒரு தடவையும் போடுவது நோய் தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்கும்.
சினை பருவ காலங்களில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு சில ஆடுகள், வலுவிழந்து உட்கார்ந்து விடும்.
இதை தவிர்க்க, சினையுற்ற முதல் மாதத்திலிருந்து, நான்கரை மாதம் வரை, அடர்தீவனத்தில் *OSTROVET* டானிக்கை ஒரு ஆட்டிற்கு 10 மில்லி வீதம் தர வேண்டும்.
சினை ஆட்டிற்கான அடர்தீவன கலவை ( ஒரு ஆட்டிற்க்கான அளவு)
கோதுமை தவிடு - 100 கிரம்
அரிசி தவிடு - 100 கி
மக்காச்சோளம் - 250 கி
துவரம்பொட்டு -100 கி
கடலை அல்லது சோயா புண்ணாக்கு -.100 கி
தாது உப்பு கலவை -.10 கி
கல்உப்பு - 5 கி
இந்த அளவு அடர்தீவனத்தை பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளில் தரவும்.
தரமான பசுந்தீவனம் மற்றும் சரிவிகிதத்தில் அடர்தீவனம் என சிறப்பு கவனம் மேற்கொண்டு சினை ஆடுகளை பராமரிக்கும் போது, சரியான உடல் எடையில், ஆரோக்கியமான குட்டிகளை பெறலாம்.
இது போன்ற பராமரிப்பில் பிறக்கும் குட்டிகள் அவற்றின் வாழ்நாளில் நோய் தாக்கங்கள் இல்லாமல் திடகாத்திரமாக வளரும்.
0 comments:
Post a Comment