ads

5/31/2018

மண் வகைக்கு ஏற்ற மர வகைகள்-(TYPES OF WOOD FOR THE SOIL TYPE)

கரிசல் மண்:
புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை

வண்டல் மண்:
தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி

களர்மண்:
குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை

உவர் மண் :
சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு

அமில நிலம் :
குமிழ்,சில்வர் ஒக்

சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் :
பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்

வறண்ட மண் :
ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்

களிமண் :
வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்

கோடை காலங்களில் ஆடுகளுக்கு வரும் நோய்கள்-(DISEASES OF GOATS IN THE SUMMER SEASON)

கோடையின் தொடக்கமான மார்ச் முதல் ஜுலை வரையில் கொள்ளை நோய்களின் தாக்கம் மிக தீவிரமாகவே இருக்கும்.

இதில் PPR (Rinder pest) அடைப்பான் நோய் மற்றும் ஆட்டுஅம்மை போன்றவைகளுக்கு தடுப்பூசிகள் கட்டாயம் தந்தாக வேண்டும்.

ஏனெனில் இவற்றின் தாக்கத்திலிருந்து ஆடுகளை மீட்டு கொண்டு வருவது மிகச்சவாலான காரியம் மற்றும்
பண்ணைகளில் பெரும் உயிரிழப்பையும், பண்ணையாளருக்கு பெரும் நட்டத்தையும் ஏற்படுத்தும்.

PPR (அடைப்பான்) அறிகுறிகள் :
# தீவனம் எடுக்காத மந்தநிலை.
# 102F மேல் உடல்வெப்பநிலை.
# சளி, தாரையாக மூக்கிலிருந்து கொட்டுதல்.
# செருமல் மற்றும் தீவிரமான இருமல்.
# தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற அதிதீவிரமான கழிச்சல்.
# வாயின் உட்புறங்களில் சிவந்த புண்கள்.
# வாயிலிருந்து மெல்லிய கம்பி போன்ற உமிழ்நீர் சுரந்து கொண்டு இருத்தல்.
# மூச்சு விடுவதில் சிரமம்.

மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து காய்ச்சல், சளி, கழிச்சல், வாய்ப்புண் என மொத்த உடல்நிலையும் பாதிக்கப்பட்டு சுவாசம் தடைபட்டு மற்றும் தீவிர கழிச்சலினால் உடலின் நீர்சத்து முழுவதுமாய் குறைந்து, வாயின் கொப்புளங்களால் தீனி எடுக்க முடியாத நிலையில் சென்று, ஆடுகள் உயிரிழந்து விடும்.
நோய்தாக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்தில் உயிரிழப்பு ஏற்படும்.

பண்ணைகளில் முதலில் நோய் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆடுகளில் இந்நோய் படிப்படியாக தீவிரமாகி, மற்ற ஆடுகளுக்கு பரவும் போது, அதி வேகமாகவும், தீவிரமாகவும் நோயின் காரணிகளை உண்டுபண்ணி, அடுத்தடுத்து உயிரிழப்புகள் வேகமாக இருக்கும்.

ஆட்டு அம்மை :(Goat and sheep pox)

அறிகுறிகள் :
# உடல்வெப்பநிலை அதிகரித்து காணப்படுதல் (காய்ச்சல்)
# கொப்புளங்கள்.

அம்மை கட்டிகள் ஆட்டின் உடலில் வால், ஆசனவாயின் வெளிப்புறம், மடிகாம்புகள், விதைப்பை ஆகிய இடங்களில் செந்நிற சிறு சிறு புள்ளிகளாய் ஆரம்பிக்கும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து உடல் முழுவதும் சிவந்த திட்டுகள் உருவாகும்.  பின் நோயின் தீவிரம் அதிகமாகும் போது கண் இமை, காதுகள், உதடுகள், மடிகாம்புகளில் கொத்து கொத்தாக கொப்புளங்கள் உருவாகும்.

வாயில் கொப்புளங்கள் உருவாகுவதால் தீவனம் எடுக்காத நிலை தொடரும்.

காய்ச்சலை ஆண்டிபயாடிக் மருந்துகளால் குறைத்தாலும், அம்மை கொப்புளங்கள் ஆற மாதங்கள் பிடிக்கும்.

PPR தீவிரமாக இருக்கும் காலங்கள் ஏப்ரல் முதல் மே வரை.
தடுப்பூசி மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் போடுவது நல்லது.

அம்மை நோய் தீவிரமாக ஜுன் முதல் ஆகஸ்டு வரை.
தடுப்பூசியை மே மாத தொடக்கத்தில் போடுதல் நலம்.

ஆடு வளர்ப்போர் இவ்வவிரண்டு நோய்க்கான தடுப்பூசிகளை இரண்டு நாட்களுக்கு முன்னர் குடற்புழு நீக்கம் செய்து விட்டு போட வேண்டும்.

பருவத்தில் தவறாது அந்தந்த தடுப்பூசிகளை அளித்து நம் ஆடுளை உயிரிழப்பிலிருந்து காத்து நம் பொருளாதார இழப்பு, நேரவிரயம், அதிகப்படியான மனஉளைச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ளாமல் ஆடு வளர்ப்பை திறம்பட வழிநடத்தலாம்.

கருவுற்ற ஆடுகளின் ஆரோக்கிய மேலாண்மை-(WELLNESS MANAGEMENT OF FERTILIZED GOATS)



குடற்புழு நீக்கம் 
கருவுற்ற ஆடுகளுக்கு ஐந்தாம் மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் போடலாம்.
  கடைசி ஐந்தாம் மாதங்களில் குடற்புழு நீக்கம் செய்வதை தவிர்த்தல் நலம்.
ஐந்தாம் மாத சினையில் உள்ள ஆடுகள் குடற்புழுவினால் மிகவும் மெலிந்து, இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே குடற்புழுநீக்கம் செய்யலாம்.

குடற்புழு நீக்க மருந்தாக FENBENDASOL பயன்படுத்துவது கருச்சிதைவிலிருந்து கருவுற்ற ஆட்டை பாதுகாக்கும்.

 இயற்கை முறையில் குடற்புழு நீக்கம் செய்ய :
சோற்றுக்கற்றாழை - 1மடல்
பிரண்டை - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 5 கிராம்
கல்உப்பு - 5 கிராம்
விளக்கெண்ணெய் - 10 மில்லி.

சோற்றுக்கற்றாழையின் முட்களை சீவி, துண்டுகளாக வெட்டி, அதனுடன் பிரண்டை, கல்உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து  அரைத்து, விளக்கெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் தரவும்.

இக்கலவையை தந்த பின்னர், இரண்டு மணிநேரத்திற்கு தண்ணீர், தீவனம் தரக்கூடாது.

இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் அடர்தீவனம், அடுத்ததாக பசுந்தீவனம் என அன்றாட தீவனத்தை தரலாம்.

# கருவுற்ற ஆடுகளுக்கு கொள்ளை நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் போடும்போது கருச்சிதைவு உண்டாகும் என்பது தவறான நம்பிக்கை.

#கருவுற்ற ஆடுகளுக்கு அனைத்து தடுப்பூசிகளையும் போடலாம்.

#ஐந்தாம் மாத சினையில் இருக்கும் ஆடுகளை மட்டும் தவிர்க்கலாம்.

கருவுற்ற ஆடுகளுக்கு TT ( டெட்டனஸ் டாக்ஸாய்டு) தடுப்பூசி  சினை பருவத்தின் 3 ம் மாதம் மற்றும் குட்டி ஈன்ற இரண்டு மணிநேரத்தில் ஒரு தடவையும்  போடுவது நோய் தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்கும்.

சினை பருவ காலங்களில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு சில ஆடுகள், வலுவிழந்து உட்கார்ந்து விடும்.

இதை தவிர்க்க, சினையுற்ற முதல் மாதத்திலிருந்து, நான்கரை மாதம் வரை, அடர்தீவனத்தில் *OSTROVET* டானிக்கை ஒரு ஆட்டிற்கு 10 மில்லி வீதம் தர வேண்டும்.

சினை ஆட்டிற்கான அடர்தீவன கலவை ( ஒரு ஆட்டிற்க்கான அளவு) 
கோதுமை தவிடு - 100 கிரம்
அரிசி தவிடு  - 100 கி
மக்காச்சோளம் - 250 கி
துவரம்பொட்டு -100 கி
கடலை அல்லது சோயா புண்ணாக்கு -.100 கி
தாது உப்பு கலவை -.10 கி
கல்உப்பு - 5 கி

இந்த அளவு அடர்தீவனத்தை பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளில் தரவும்.

தரமான பசுந்தீவனம் மற்றும் சரிவிகிதத்தில் அடர்தீவனம் என சிறப்பு கவனம் மேற்கொண்டு சினை ஆடுகளை பராமரிக்கும் போது, சரியான உடல் எடையில், ஆரோக்கியமான குட்டிகளை பெறலாம்.

இது போன்ற பராமரிப்பில் பிறக்கும் குட்டிகள் அவற்றின் வாழ்நாளில் நோய் தாக்கங்கள் இல்லாமல் திடகாத்திரமாக வளரும்.

ஆடுகளுக்கு வயிறு உப்பிசத்திற்கான சிகிச்சை-(TREATMENT FOR STOMACH EMBRYOS FOR GOATS)


ஆடு வயிறு உப்பசம் உள்ளது 4 மணி நேரம் பிறகு பேதி ஆகி 4-6 நேரம் கழித்து இறந்துவிடுகிறன என்ன என்னது  தெரியவில்லை


ஆடுகள் ஒரே நேரத்தில் அதிகபடியான அடர்தீவனம் மற்றும் இளம் பயிர்களை உண்பதால் வயிறு உப்பிசம் ஏற்படும்.

 வயிறு உப்பிசத்தை கண்டறிதல்:

ஆட்டின் இடது பக்க வயிறு வழக்கத்தை விட அதிகமாக உப்பியிருக்கும்.
அப்பகுதியில் அதிகபடியான வாயு உற்பத்தியாகி வீங்கியிருக்கும்.
அப்பகுதியை தட்டும் போது மத்தளத்தை தட்டுவதை போன்று இருக்கும்.

ஆடுகள் அசையாமல் ஓர் இடத்தில் நின்றுவிடும்.

உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்பு நேரிடும்.

 தடுப்பு முறைகள்

ஆடுகளில் வயிறு உப்பிசத்தை தடுக்க குட்டி பிறந்த 21 நாட்கள் மற்றும் அதற்கு அடுத்த 21 நாட்கள் என இரு முறையாக ETதடுப்பூசி போட வேண்டும்.

பண்ணையில் உள்ள வளர்ந்த ஆடுகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை E Tபோடுவது இது போன்ற பிரச்சனைகள் வராமல் நம் ஆடுகளை பேணி காக்கலாம்.

 வயிறு உப்பிசத்திற்கான சிகிச்சை:

# சமையல் சோடா ( Sodium bi carbonate) 15 லிருந்து 30 கிராம் வரை.

சமையல் சோடா மாவை 50 மில்லி தண்ணீரில் கலக்கி வாயில் புரையேறாமல் ஊற்றி விடவும்.

# விளக்கெண்ணெய் 50 லிருந்து 100 மில்லி கொடுக்கலாம்.

# SPASMOVET inj
     TYREL oral solution

# RUMIBUY bolus
இம்மாத்திரையுடன் வெல்லம் -.50 கிராம்
சோடா மாவு - 10 கிராம்.
கல் உப்பு - 10 கிராம்.
இவற்றை நன்கு கலந்து சிறிது, சிறிதாக உள்ளுக்கு கொடுக்கவும்.

# ஓமம் தண்ணீர் 50 லிருந்து100 மில்லி தரலாம்.

சிகிச்சை தந்த பின்னர் ஆடுகள் மேற்கொண்டு தீவனம் உண்ணாத வன்னம் தனியாக கட்டிபோட்டு வைக்க வேண்டும்.

சிகிச்சை அளித்த சில மணிநேரங்களில் வாயு வெளியேறி அசை போட ஆரம்பிக்கும்.

மறுநாள் கழிச்சல் இருப்பது வழக்கமானதே.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஓமம் தண்ணீர் காலை, மாலை என 10 மில்லி தரவும் .

குறைந்த எடையில் பிறக்கும் குட்டிகளை பராமரிக்கும் வழிமுறைகள்-(Instructions for maintaining low birth weight)

structions for main
குட்டி பிறந்து, நன்றாக எழுந்து நடக்கும்வரை உடலின் வெப்பநிலையை சிறிது அதிகபடுத்த வேண்டும்.
குட்டியை சுத்தமான பருத்தி துணியால் சுற்றி, உயரம் குறைந்த பிளாஸ்டிக் டப்பில் வைக்கோலால் மெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் குட்டியை படுக்க வைக்கலாம்.
இதன் விளைவாக குட்டிக்கு உடல் கதகதப்பு கூடி, உடலின் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

# தாயிடம் சுரக்கும் ஜெல் போன்ற சீம்பாலை சிறிது கூட வீணாக்காமல் குட்டிக்கு தரவேண்டும்.இதனால் குட்டிகளின் வாழ்நாளில் உடலின் எதிர்ப்புதிறன் மிக சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமில்லாமல் ஜீரண உறுப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் நன்கு தூண்டப்படும்.

# தாயிடம் பால் சுரப்பு குறைவாக இருந்தாலும், அதற்காக குட்டிகளை தாயிடம் பால் குடிப்பதை நிறுத்த வேண்டாம்.
    குட்டிகளை பால் குடிக்க அனுமதியுங்கள். இது போன்ற செயல்பாடுகள் குட்டி ஈன்ற ஆட்டின் தாய்மை உணர்வை தூண்டி நல்ல பால் சுரப்புக்கு வழிவகை செய்யும்.

# குட்டிகளின் பால் தேவையை பூர்த்தி செய்ய, மாட்டு பாலை தரலாம்.
மாட்டு பாலில் சம பங்கு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின் பால் புட்டிகளின் மூலம் புகட்டலாம்.
Lactogen போன்ற பெளடர் பாலையும் தரலாம்.

குட்டியின் முதல் நாள் ஒரு ஸ்பூன் குளுக்கோஸ் கலந்து 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் நான்கு முறை தரவும்.

இரண்டாவது நாள் குளுக்கோஸ் உடன் 2-3 சொட்டுகள் Cod liver oil கலந்து 75 மில்லியாக 4 வேளை தரலாம்.

மூன்றாவது நாள், குளுக்கோஸ், Cod liver oil உடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து  110 மில்லியாக நான்கு வேளை தரவும்.

இதுபோல் படிப்படியாக பாலின் அளவை முதல் வார இறுதியில் ஒரு வேளைக்கு 150 மில்லி வரை கூட்டலாம்.
# இரண்டாவது வாரத்தில் பாலின் அளவு வேளைக்கு 200 மில்லியாக உயர்த்த வேண்டும்.
# மூன்றாவது வாரத்தில் 250
மில்லியாகவும், நான்காவது வாரத்தில் இதே அளவு பாலுடன் சிறிது வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களும், அடர்தீவனம் 50 கிராம் அளவில் தரலாம்.
# ஐந்தாவது வாரத்திலிருந்து பாலின் அளவை 200 மில்லியாக குறைத்து அடர்தீவனத்தை 100 கிராமாக கூட்டி தரமான பசுந்தீவனங்களையும் அளிக்க வேண்டும்.
# ஆறாவது வாரத்தில் பாலை 150 மில்லியாக குறைத்து, அடர்தீவனம் மற்றும் புரதம் நிறைந்த பசுந்தீவனங்களின் அளவை சேர்த்து த
தரவும்.
ஏழாவது வாரத்திலிருந்து பாலை முழுவதுமாக நிறுத்தி விடலாம்.

குட்டிக்கு டானிக்
Brotone -2ml
Vimeral -1ml
ஓமம் தண்ணீர் - 2ml
தினமும் ஒரு மாதம் வரை தரவும்.
மாலை வேளையில் தினமும் விளக்கெண்ணெய்யில் ஊறிய வசம்பை நல்லெண்ணெய் விளக்கின் தீயில் சுட்டு சிறிது ஆட்டுபால் விட்டு இழைத்து, அதை குட்டிகளின் வாயினுள் தடவி விடவும்.
இதனால் வயிற்றுவலி, மற்றும் கழிச்சல் ஆகிய பிரச்சனைகள் இல்லாமல் குட்டிகளின் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படும்.

5/29/2018

மாமரங்களில் பூங்கொத்து புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி-(HOW TO CONTROL THE BLOSSOMING WORMS IN THE MANGO TREES?)


 புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?
 தற்போது மாமரங்களில் பூப்பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளதால் பூங்கொத்து புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையை விவசாயிகள் பின்பற்றுவது அவசியம் என தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

திருவள்ளூர் மாவட்டத்தில் 10,816 ஹெக்டேரில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில், மா வகைகளான நீலம், பங்கனப்பள்ளி, அல்போன்சா மற்றும் இம்மாவட்டத்தின் சிறப்பு ரகமான சவ்வாரி மா வகைகளையும் விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் மாமரங்
களில் பூப் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது. 

இந்த சமயத்தில் மாமரங்களில் பயிர்ப் பாதுகாப்பு செய்தால் மட்டுமே மகசூலை அதிகரிக்க முடியும். மேலும், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் தத்துப்பூச்சி, பூங்கொத்துப் புழு, இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், இலைப்புள்ளி போன்ற பல்வேறு பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த பூச்சிகளால் நோய் தாக்கினால் மா மகசூல் குறையும். இதை தவிர்க்க விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையைப் பின்பற்ற வேண்டும். 

மா பயிர் பாதுகாப்பு: 
பூப்பிடிக்கும் பருவத்தில் எண்ணைய்ப் பசை போன்று பளபளப்பாக இருந்தால் பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என அறிந்து கொள்ளலாம். இதை நாம் உற்று நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். இப்பூச்சிகள் மாவிலைக் குருத்துகள் மற்றும் பூங்கொத்துகளில் உள்ள சாறை உறிஞ்சிவிடும். இதனால் பூங்கொத்துகள் வலுவிழப்பதோடு பூ மொட்டுகள் மற்றும் பிஞ்சுகள் ஆகியவை உதிரும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கவாத்து செய்து அதை அகற்றி மாமரத்தை பாதுகாக்க வேண்டும். 

பாதிப்பைக் கட்டுப்படுத்த
இந்த நோயைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 இசி 1.5 மில்லி மருந்தை, ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் தெளிப்பான் மூலம் நன்கு படத் தெளிக்க வேண்டும். இதை மாலை நேரங்களில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

அதேபோல், கார்பரில் 50 சதவீதம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்துப் புழு தாக்குதலும் அதிகம் இருக்கும். இதை கட்டுப்படுத்த பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

தண்டு துளைப்பான் தாக்குதல்: 
இதேபோல் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் இருந்தால் தரை மட்டம் முதல் 1 மீட்டர் உயரத்தில் மரப்பட்டையை 'ப' வடிவில் செதுக்கி, இடையில் பஞ்சை வைத்து மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரையில் தெளித்து, பின்பு பட்டையை மரத்தோடு பொருத்துவதோடு ஈரக்களிமண்ணால் மூட வேண்டும்.
அதேபோல், இலைப்புள்ளி தாக்குதல் இருந்தால் மாங்கோசெப் 2 கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பென்டாசிம் 1 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் அல்லது க்ளோராதலேனில் 2 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பிஞ்சுப் பருவத்திலிருந்து அறுவடை செய்வதற்கு முன்பு வரையில் 20 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து வந்தால் அனைத்து மா வகைகளையும் பாதுகாக்கலாம். 

இதுபோன்ற ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி மா சாகுபடி யை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் முத்துதுரை ஆலோசனைகளை வழங்கியுள்ளார். 

5/18/2018

நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள்-(DISEASE PREVENTION METHODS IN GROUNDNUT)



நிலக்கடலையின் மகசூலை குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் நோய்களினால் ஏற்படும் சேதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றில் பூஞ்சாணங்கள், நச்சுக்கிருமிகளால் ஏற்படும் நோய்களே அதிக சேதத்தை விளைவிக்கும்.
இப்பயிரைத் தாக்கும் நோய்களில் சில இலைகளில் தோன்றி சேதம் ஏற்படுத்தக் கூடியவை. சில வகை மண்வழிப் பரவும் தன்மை கொண்டவை. தற்போது இந்த வகையான மண் மூலம் பரவும் நோய்களைப் பற்றியும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் அறிந்து கொள்வது நல்லது.
இலைப்புள்ளி நோய்:
  • இந்தியாவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் எல்லா மாநிலங்களிலும் இந்த நோய் தோன்றுகிறது. மானாவாரி, இறவைப் பயிர்களையும் இந்த நோய் தாக்கக்கூடியது. இவை முன்பருவ இலைப்புள்ளி நோய், பின்பருவ இலைப்புள்ளி நோய் என இருவகைப்படும்.
  • இலைப்புள்ளி நோய்கள் இரண்டு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நோய்க் காரணிகளால் ஏற்படுகின்றன. ஆனாலும் இரு நோய்களும் வேறுபட்ட அறிகுறிகளை ஒரே இலையில், ஒரேசமயத்தில் தோற்றுவிக்கக் கூடியவை.
  • முதலில் தோன்றக் கூடிய முன்பருவ இலைப்புள்ளி நோய் பெரும்பாலும் விதைத்த 30 நாள்களில் தோன்றும். முதலில் இலைகளில் கருமைநிற வட்ட வடிவப் புள்ளிகள் சிறியதாகத் தோன்றும்.
  • நாளடைவில் இவை விரிவடைந்து 3-8 மி.மீட்டர் விட்டம் வரையிலான புள்ளிகளாக மாறும். ஒரே இலையில் சில புள்ளிகளிலிருந்து, பல புள்ளிகள் வரை தோன்றும்.
  • புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒழுங்கற்ற வடிவமாக மாறும். கரும் பழுப்புநிற புள்ளிகளைச் சுற்றி பளிச்சென்ற மஞ்சள் நிறவளையத்தைக் கொண்டும் அடிப்பரப்பு இளம் பழுப்பு நிறமாகவும் தென்படும்.
  • பின்பருவ இலைப்புள்ளி நோயின் அறிகுறி பயிர் விதைத்த சுமார் 40-50 நாள்களில் தோன்றும். இந்த நோய் காரணி தோற்றுவிக்கும் புள்ளிகள் சிறியதாகவும், சுமார் 1-6 மி. மீட்டர் வரை விட்டத்தைக் கொண்டும் காணப்படும். புள்ளிகளின் மேற்பரப்பு கரும்பழுப்பு அல்லது கருமை நிறத்திலும், அடிப்பரப்பு நல்ல கருமை நிறத்திலும் தென்படும். இப்புள்ளிகளைச் சுற்றி மஞ்சள் நிற வளைப்பகுதி காணப்படாது. புள்ளிகள் பெரும்பாலும் இலைகளில் காணப்பட்டாலும், இலைக்காம்பு, தண்டு, பூக்காம்பு போன்ற பாகங்களிலும் தென்படும்.
  • பூக்கும்பருவத்திலிருந்து, அறுவடை வரையில் நோயின் தீவிரம் அதிகமாகக் காணப்படும். நோய் அதிகமாகத் தாக்கிய இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும். பூக்காம்புகள் தாக்கப்படும் போது காய் பிடிப்பதும் பாதிக்கும்.
  •  மேலாண்மை நோயினால் தாக்கப்பட்டு நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் இலைகள், செடியின் பாகங்கள் போன்றவற்றை சேகரித்து எரித்துவிட வேண்டும். அறுவடைக்கு பின்னர் கொடிகளை நிலத்திலிருந்து முழுமையாக அப்புறப்படுத்துதல் அல்லது எரித்து விடுதல் வேண்டும்.
  •  நோய் தாக்காத பயிரிலிருந்து தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
  •  பருவத்தில் விதைப்பு செய்தல் நல்லது. காணிப் பருவத்தில் காலம் தாழ்த்தி விதைப்பு செய்யும் பயிரில் அதிகம் நோய் தாக்குதல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நிலத்தில் தொடர்ந்து நிலக்கடலை பயிரிடுவதைத் தவிர்த்து பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்.
  •  ஒரு கிலோ விதைக்கு, விதை நோத்தியாக டிரைக்கோடொமா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்கலாம்.
  • காற்று மூலம் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நோயின் அறிகுறி தென்பட்டவுடன், ஏக்கருக்கு கார்பன்டாசிம் 200 கிராம் அல்லது குளோரோதலோனில் 400 கிராம் அல்லது மான்கோசெப் 400 கிராம் அல்லது டைபெனாகொனசோல் 200 மில்லி மருந்தை 200 லிட்டா நீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து 15 நாள்கள் கழித்து மறுமுறையும் தெளிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலக்கடலையில் வேரழுகல் நோய் -(MANAGEMENT OF ROOTSTOCK DISEASE IN GROUNDNUT)


வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது நோய் தாக்குதல் அதிகரிக்கும். நிலக்கடலையில் நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன.
இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். நோய் தாக்குண்ட செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் சொட்டை சொட்டையாய் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமடைந்து பழுத்து உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
கோடையில் ஆழமாக உழுதல் வேண்டும். பயிர் சுழற்சி முறையை கடைப்படிக்க வேண்டும். தொழுஉரம் 12.5 டன் / எக்ேடர் இட வேண்டும். முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும். முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும்.
தரமான விதைகளை ‘டிரைக்கோடெர்மா விரிடி’ 4 கிராம் / கிலோ அல்லது ‘சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்’ 10 கிராம் / கிலோ அல்லது ‘கார்பன்டசிம்’ அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி அவசியம் செய்ய வேண்டும்.
விதைத்த 20 – 30 நாட்களுக்குள் ‘சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்’ / ‘டிரைக்கோடேர்மா விரிடி’ 2.5 / கிலோ / எக்டேர் என்ற அளவில் அதனுடன் 50 கிலோ தொழு உரம் கலந்து இட வேண்டும்.
வேரழுகல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் ‘கார்பன்டசிம்’ மருந்தை கலந்து நோய் தாக்கிய செடிக்கும் அதை சுற்றியுள்ள செடிகளுக்கும் வேர்ப்பகுதி நனையும்படி மருந்து கலவையை ஊற்ற வேண்டும்.

5/16/2018

சூரியகாந்தி சாகுபடி - (SUNFLOWER CULTIVATION)


சூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும்.

சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.

நீண்ட கால விதை ரகங்களை 60க்கு 15செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.

விதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

நீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக இருந்தால் சதுர மீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.

ஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழ வேண்டும்.

தொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தையும் கலந்து இடவேண்டும்.10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.

ஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவை கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும்.

கடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.

விதைத்தல்:
விதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம்.விதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பது போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்தி கட்டி பாசனம் செய்து சதுர மீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம்.

இல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக் கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம்.

10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டுவைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.சூரியகாந்தி பயிருக்கு ஒரு முறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச்சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும்.

 இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும்.விதை விதைப்பதற்கு முன் விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும் போதும், 50-60வது நாள் விதை முற்றும் சமயம் மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும்.

நிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.அறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.விதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 

இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.சூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்த பிறகு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்குள் மற்றொரு பூவுடன் உராயும்படி செய்ய வேண்டும்.

பூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக்கிளிகள் பூக்கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்தவேண்டும்.
அறுவடை


சூரியகாந்தி பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும்.

பூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசணம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும்.களத்துமேட்டில் அடிக்கடி பூக்களை கிளறிவிட்டு நன்கு காயப்போட வேண்டும்.

நன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம். நல்ல முறையில் சாகுபடி நுட்பங்களை அனுசரித்தால் கணிசமான லாபத்தை அடையமுடியும்.

சொட்டுநீர்ப்பாசன முறை-(DRIP IRRIGATION SYSTEM)

நாளுக்கு நாள் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. சிக்கனமாக நீரைப்பயன்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். 

அபரிவிதமாக நீரைப் பயன்படுத்துவதை விட, அளவாகப் பயன்படுத்தும் போது நிறைவான மகசூல் பெற முடியும்.

 நீர்ச்சிக்கனம், நிறை மகசூலுக்கு வழிவகுக்கும் சொட்டு நீர்ப்பாசன முறைகளை பயன் படுத்தலாம்.

சொட்டு நீர்ப்பாசனத்தின் பயன்கள்
இதன் மூலம் நீரும், சத்துக்களும் வேரில் கிடைக்கின்றன. நீரை சிக்கனப்படுத்தலாம்.

 பாசனத்திற்கு தனியே ஆள் விடத்தேவையில்லை. சத்துக்கள் நேரடியாக வேருக்குக் கிடைப்பதால் வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன. 

நீர் வேரை நேரடியாகச்சென்றடைவதால், இடையே களைகள் முளைப்பது குறைகிறது. 30 முதல் 60 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும்.

 முன்னதாக பயிர் முதிர்ச்சிக்கு வருவதால், முன்கூட்டியே லாபம் கிடைக்கும். அடுத்த பயிர்ச்சாகுபடியை முன்னதாக மேற்கொள்ளலாம்.

விளைபொருட்களின் தரம், எடை, பொலிவு அதிகரிப்பதால் நல்ல விலை கிடைக்கும்.

சிறு, குறு விவசாயிகள்

சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க தமிழக அரசு 100 சதவீத மானியம் வழங்குகிறது. சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறு, ஆழ்துளைக்கிணறு போதிய நீர் ஆதாரத்துடன் இருக்க வேண்டும்.

 பொதுவான நீர்ஆதாரம் கொண்ட சிறிய விவசாயிகள் 2, 3 பேர் சேர்ந்து இத்திட்டம் மூலம் பயன் பெறலாம். பயனாளிகள் சிறு, குறு விவசாயி சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

 தாசில்தார்/துணை தாசில்தார் மேலொப்பம் செய்த கணிணி சிட்டா, முந்தைய பயிர், சாகுபடி செய்யவுள்ள பயிரை குறிப்பிட்டு வி.ஏ.ஓ., வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகலை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

 குத்தகை சாகுபடியானால் 10 ஆண்டுகளுக்கு நில உரிமையாளருடன் செய்து கொள்ளப்பட்ட, பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதர விவசாயிகள்

இதர விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க அரசு 75 சதவீத மானியம் வழங்குகிறது. 

இவர்கள் விண்ணப்பிக்கும் போது கணிணி சிட்டா, முன்பு சாகுபடி செய்த பயிர், தற்போது சாகுபடி செய்துள்ள பயிர் ஆகிய விபரங்கள் அடங்கிய வி.ஏ.ஓ., வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், 25 சதவீத பங்குத்தொகைக்குரிய வங்கி வரைவோலையை சமர்ப்பிக்க வேண்டும்.

வாழை, காய்கறிகள், மிளகாய், மலர்ப்பயிர்கள், பழ மரப்பயிர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் சிறு, குறு, இதர விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி சொட்டு நீர்ப்பாசனத்திட்டத்தைப் பயன்படுத்தி நிறை மகசூல் பெறலாம்.

கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்-(TECHNIQUES THAT PROMOTE PRODUCTION OF GUAVA)

மரங்களை வளைத்துக்
கட்டுதல் :
ஓரளவு வயதான கொய்யா மரங்களில்
 (சுமார் 10முதல் 15 ஆண்டுகள்கிளைகள்
 ஓங்கிஉயரமாவளர்ந்துஉற்பத்தியைக்
 குறைத்து விடும்.

இதனைச் சரிசெய்ய மேற்படி கிளைகளை
வளைத்து அவற்றின் நுனி பாகத்தை
 மண்ணுக்குள்ஒரு அடி ஆழத்தில் பதித்து
 அதன்மேல் கல் ஒன்றைவைத்து அவை
 மேலே கிளர்ந்து வராமல்செய்யலாம்.

அல்லது முன்பே மண்ணில் கனமான
 குச்சிகளோடு சேர்த்துக் கட்டலாம்.
இதன் மூலம் கிளைகளின் அணுக்களில்
 உள்ளமொட்டுக்கள் தூண்டப்பட்டு பூக்கள்
 அதிக அளவில்தோன்றி அதிக தரமான
 கனிகளை கொடுக்கும்.

மரங்களை மட்டம் தட்டுதல் :
மிக வயதான உற்பத்தி திறன் இழந்த
 மரங்களை,தரை மட்டத்திலிருந்து
 30 செ.மீ உயரத்தில் மட்டமாகவெட்டிவிட
 வேண்டும்.
பின்னர் அவற்றிலிருந்து தழைத்து
 வரும் புதியகிளைகளில் பூக்கள் 
தோன்றி காய்கள் பிடிக்கும்.உற்பத்தியும்
 மேம்படும்.

நுண்ணூட்டச்சத்து குறைபாடு :
துத்தநாகச்சத்து குறைபாட்டினால்
நரம்புகளுக்கிடையே இடைவெளி
 குறைந்தும்,செடிகள் குத்துச் செடிகள்
 போல தோற்றம் தருதல்போன்ற
 அறிகுறிகள் உண்டாகும்.
பெரும்பாலும் வடிகால் வசதியற்ற
 நிலங்களில்இக்குறைபாடு காணப்படும்.
இவற்றைத் தவிர்க்க 500 கிராம் துத்தநாக
 சல்பேட்,350 கிராம் சுண்ணாம்பு
 இரண்டையும் 72 லிட்டர்நீரில் கரைத்து
 மரங்களின் மேல் இரண்டு முறை 
15முதல் 30 நாட்கள் இடைவெளியில்
 தெளித்துநுண்ணூட்ட குறைபாட்டினைத்
 தவிர்க்கலாம்.

துத்தநாகம் தவிர மக்னீசியம்மாங்கனீசு,
 தாமிரம்,இரும்புச்சத்து குறைபாடும்
 சில நேரங்களில்காணப்படும்.
இதன் அறிகுறிகளாக இலைகள் வற்றி 
ஓரங்கள்காய்ந்தும்சிறுத்தும் காணப்படும்.
இதனை நிவர்த்தி செய்ய 25 சதம்
 துத்தநாக சல்பேட்,மக்னீசியம் சல்பேட்,
 மாங்கனீஸ் சல்பேட்,12.5 கிராம்காப்பர்
 சல்பேட்பெர்ரஸ் சல்பேட் ஆகியவற்றை
 5லிட்டர் நீரில் கரைத்து இலைகளின்
 மேல் புதியதளிர்கள் தோன்றும் 
சமயத்தில் ஒரு தடவையும்,அதைத்தொடர்ந்து
 ஒருமாதம் கழித்து ஒருமுறையும் தெளித்து
 கட்டுப்படுத்தலாம்.

போரான் நுண்ணூட்டச்சத்து 
குறைபாட்டினால்வளர்ச்சி குன்றி
 தோன்றுவதோடுபழங்கள்அளவில்
 சிறுத்து விடும்.
மேலும் பழங்களின் வெடிப்பு தோன்றி,
 பழத்தின்தரத்தையே குறைத்து விடும்.
இதனைக்கட்டுப்படுத்த 0.5 சதம்
 போராக்ஸ் (1 லிட்டர்தண்ணீரில் 3 கிராம்
 போராஸ்மருந்தை கரைத்துதெளித்து
 கட்டுப்படுத்தலாம்.