ads

4/30/2018

செவந்தி பூ சாகுபடி_(iyarkai muraiul Sevanthipoo sagupadi)


செவந்தி பூ சாகுபடியில் ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரித்து போட்டதால் பூ நல்ல கலருடனும் சைஸ் பெரியதாகவும் உள்ளது

ஒவ்வொரு தண்ணீர் பாய்ச்சும் பொழுதும் ஊட்டமேற்றிய தொழுவுரத்தைப் போட்டு வருகிறார்கள்  மிகவும் நன்றாக இருக்கிறது.

நல்ல மகசூல் கொடுக்கிறது ஊட்டமேற்றிய தொழுவுரத்தில் உயிர் உரங்களை கலந்து
15 நாட்கள் வரை  நிழலில் மூடி வைத்திருந்து 
பிறகு எடுத்து தண்ணீர் பாயும் சமையத்தில்
அல்லது வயலில் ஈரம் இருக்கும் சமையத்தில் போட்டால் அவற்றில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை  வயலில் அதிகளவில் பெருகும்.

பயிரினுடைய வேர் வளர்ச்சி அதிகரிக்கும் பயிரின் அனைத்து பாகத்திற்கும் சமமாக சத்துக்கள் கிடைக்கும்  பூச்சி , நோயின் தாக்குதல் குறையும்.

ரசாயன உரத்தை விட இயற்கை உயிர் உரத்தின் விலை மிக குறைவு எனவே செலவை குறைத்து
அதிக மகசூல் கிடைக்க இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்துவோம்

உயிர் உரங்கள் தேவைக்கு
தொடர்பு கொள்ள
8870392422

4/28/2018

எலுமிச்சை பயிரின் நோய்கள்



எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்நோய் ஒருவித பாக்டீரியாவினால் ஏற்படுகின்றது.
நோயின் அறிகுறிகள் :
  • இலை, கிளை, சிறு கிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும்.
  • காய்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளைச் சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். பழங்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளில் வெடிப்புகள் தோன்றும். நோயினால் பழங்களின் தோல்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகின்றன. பழங்களில் சாறின் அளவும் குறைகின்றது.
  • சொறி நோயுற்ற பழங்களின் சந்தை மதிப்பு வெகுவாகக் குறைகின்றது. பழத்திலுள்ள சொறிப்புள்ளிகள் மற்றும் வெடிப்புகள் மற்ற அழுகல் நுண்ணுயிர்கள் உட்புக வழி உண்டாக்குகின்றன.
  • சொறி நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியா, இலைத்துளைகள் மூலமாகவோ அல்லது பூச்சி அல்லது முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ, உட்புகுந்து தாக்குதலை துவங்குகின்றது. நோய் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழைத்துளிகள், காற்று மற்றும் இலைதுளைக்கும் பூச்சிகள் மூலம் பரவுகின்றது.
  • நோயுற்று கீழே உதிர்ந்து விழுந்து கிடக்கும் இலைகளையும், சிறு குச்சிகளையும் சேகரித்து எரித்துவிட வேண்டும்.
  • மரங்கள் சிறப்பாக வளர நன்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு உரமிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • பழத் தோட்டங்களில் நோயுற்ற மரங்களிலிருந்து நோயுற்ற சிறு குச்சிகளை வெட்டி தீயிட்டு அழிக்கவும்.
  • பின் கவாத்து செய்த உடன் 0.30 சதம் தாமிர ஆக்ஸிகுளோரைடு மருந்து தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து மூன்று முறை ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 100 பிபிஎம் (100 மிலி கிராம் / 1 லிட்டர் தண்ணீர்) மற்றும் 0.30 சதம் தாமிர ஆக்ஸி குளோரைடு கலந்து ஒருமாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • மரம் துளிர்விடும் ஒவ்வொரு சமயமும், மரத்தின் அனைத்து பகுதிகளும் நன்றாக நனையுமாறு சூடோமோனஸ் புளுரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம் / 1 லிட்டர் தண்ணீர்) தெளித்தல் அவசியம். இவ்வகை பாக்டீரியா நோயைக் கட்டுப்படுத்த சூடோமோனஸ் புளுரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம் / 1 லிட்டர் தண்ணீர்) தெளிக்கவும். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.
  • எலுமிச்சையில் தோன்றும் இலைத்துளைப்பான்கள் இந்நோயைப் பரப்புவதால் அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து கட்டுப்படுத்துவது அவசியம். வேப்பம் பிண்ணாக்கு (5 விழுக்காடு) கரைசலைத் தெளித்தும் இந்நோயினை பரப்பும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.


  • கட்டுப்படுத்தும் நுட்பங்கள் :
இவ்வாறு திருவில்லிபுத்தூர், பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ம.குணசேகர் கேட்டுக் கொள்கிறார்.

எலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை விரட்ட வழி


வேலூர்மாவட்டத்தில் எலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த பார்த்தீனிய செடிகளை அகற்ற வேண்டும் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இவை மாவட்டம் முழுவதுமாக பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இச்செடிகளில் மாவுப் பூச்சி மற்றும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளின் கொழுந்துகள் முளைப்புத் தன்மையை இழந்துவிடுகின்றன.
மேலும் காய்கள் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி புள்ளிகள் விழுந்து பழங்களாக மாற தகுதியற்றதாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எலுமிச்சை மட்டுமின்றி சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட மற்ற காய்களும் இதே பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

செடிகளில் மாவுப்பூச்சி மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் ஆரம்ப கட்ட நிலையில் இருந்தால் வேம்பு எண்ணெயை கலந்து அடித்தால் போதுமானது.

அதுவே முற்றிய நிலையில் 1 லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி புரபனோ பாஸ் கலந்து அடிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருடன் 6 மில்லி இமியோகுளோபிரிட் கலந்து அடிக்கலாம். அல்லது 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் நீட்டோ மைல் கலந்து கைப்பம்பு மூலம் அடிக்கலாம்.

பார்த்தீனிய செடிகளின் மூலமே இப்பூச்சி பரவுவதால் விவசாயிகள் இச்செடிகளை உடன் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


4/27/2018

இயற்கை முறை கத்திரி -(Iyarkkai murai birinjal saagupadi)

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடிநீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழுஉரம் இடவேண்டும்.

இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும்.

காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்மந்தப்பட்ட பூசணக் கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங் காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.

நாற்றங்காலைத் தொடர்ந்து நடவு வயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும்.

நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை து 2 அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமான 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி).

நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போபேக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாசனம் செய்ய வேண்டும்.

செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா, பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும்.இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்துவிடுகின்றது.

இதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தைத் தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும்.

இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றன.

வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகø சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம்.

விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன.

மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும்.

ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22 ஆயிரம் ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68 ஆயிரம் கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லாபம் ரூ.46 ஆயிரம் கிடைக்கும்.

ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக்கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது

இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்டகால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது.j

பீர்க்கங்காய் மாடித் தோட்டம் -(Peerkangai in maadithottam)


தேவையான பொருட்கள்

1. Grow Bags அல்லது Thotti.

2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.

3. விதைகள்

4. நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்

5. பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்

தொட்டிகள்

தொட்டிகளில் மண் போடும்போது அதனுடன் சம அளவு இயற்கையாக மட்கும் குப்பைகள் சேர்க்க வேண்டும்.

தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டும் தொட்டியை நிரப்பலாம். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.

இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

ஆரோக்கியமான மற்றும் நோய் தாக்காத விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது கொடி வகை என்பதால் 5 விதைகள் வரை ஊன்றலாம். வளர்ந்த செடிகளில் ஏதாவது வளர்ச்சி குறைந்து காணப்பட்டால் அந்தச் செடியை மட்டும் நீக்கி விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.

பந்தல் முறை 

மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.

உரங்கள்

வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம். இவ்வகையான உரங்களை பயன்படுத்தினால் அதற்கு மேல் வேறு உரங்கள் தேவைப்படாது.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

பாதுகாப்பு முறைகள்

வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.

அறுவடை

இது 2 முதல் 3 மாதம் வரை பயன் தரும். காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்.






இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி-(Iyarkkai muraiul pappali sagupadi)


இப்படித்தான் செய்யணும் பப்பாளி சாகுபடி!

ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி செய்யும் விதம் குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக....

பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள் நிலத்தை காயவிட வேண்டும். பிறகு, டிரில்லரால் (சாதாரண கலப்பை) ஒரு சால் உழவு செய்துவிட்டு.. அடுத்த நாள் அரை அடி ஆழத்தில், செடிக்குச் செடி 10 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி இடைவெளி விட்டு அரையடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 436 குழிகள் வரை எடுக்கலாம். (நிலத்தின் அமைப்பைப் பொறுத்து, இவர், 400 குழிகள் மட்டுமே எடுத்துள்ளார்). குழி எடுத்த மறுநாள் ஒரு குழிக்கு அரை கிலோ தொழுவுரம் போட்டு, நடுவிரல் அளவு குழி எடுத்து, பப்பாளி கன்றை வைத்து, மேல் மண் கொண்டு குழியை மூடிவிட வேண்டும். நடவு செய்த உடனே பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

ஏக்கருக்கு அரை கிலோ விதை!

பப்பாளியை கன்றாக வாங்காமல், விதையை வாங்கி நாமே நாற்று உற்பத்தி செய்து நடவு செய்வதுதான் சிறந்தது. 20 அடி நீளம், 20 அடி அகலத்தில் நாற்றங்கால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான அரை கிலோ விதையை எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் பஞ்சகவ்யா ஊற்றி அதில் விதையைப் போட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு,  ஓலைப்பாய் விரித்து, அதில் விதையை கொட்டி, அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதையை நாற்றாங்காலில் தூவிவிட்டு 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைத் தூவிவிட்டு ஒரு முறை கிளறிவிட்டால் விதையும், தொழுவுரமும் கலந்துவிடும். தண்ணீர் பாய்வதற்கு வசதியாக 4 அடிக்கு ஒரு பாத்தி வீதம் 5 பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். விதைத்ததில் இருந்து, 8 முதல் 10 நாட்களில் முளைப்பு தெரியும். 30 நாளில் அரை அடி உயரமும், 60 நாளில் ஓர் அடி உயரமும் வரும். 30-ம் நாளிலேயே எடுத்து நடவு செய்யலாம். ஆனால், ஓர் அடி உயரம் வந்தால் நடவு செய்ய வசதியாக இருக்கும். 

15 நாள் இடைவெளியில் பஞ்சகவ்யா!

பப்பாளியை நடவு செய்ததில் இருந்து, 20-ம் நாள் மட்டும் ஒரு களை எடுத்துவிட்டு, 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 40 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 

பூ பூக்கும் நேரத்தில் பிண்ணாக்குக் கரைசல்!

6-ம் மாதம் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் 5 கிலோ பாசிப்பயறு, 5 கிலோ தட்டைப்பயறு, 5 கிலோ கொள்ளுப்பயறு, 5 கிலோ கொண்டைக்கடலை, ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அந்தக் கரைசலை ஒவ்வொரு தூரிலும் 500 மில்லி ஊற்றி, மண் அணைக்க வேண்டும். இதனால் பூக்கும் பூக்கள் உதிராமல், காய் பிடித்து நன்கு வளரும். 

பூ பூக்கும் நேரத்தில்தான், பப்பாளியில் ஆண் பெண் அடையாளம் காணமுடியும். கிளைகளுக்கும் தண்டுக்கும் இடையே ஒரே பூ மட்டும் பூத்தால் அது பெண் பப்பாளி எனவும், கொத்தாக பூ காணப்பட்டால் அது ஆண் பப்பாளி எனவும் அடையாளம் தெரிந்து கொள்ளலாம். 

400 பப்பாளி மரங்களில் குறைந்தது 20 ஆண் பப்பாளியாவது இருந்தால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். சில விவசாயிகள் ஆண் பப்பாளி மரங்களை மொத்தமாக பிடுங்கிவிடுவார்கள். இதனால் அயல்மகரந்தச்சேர்க்கை நடைபெறாமல் காய்ப்புத்திறன் குறைய வாய்ப்புள்ளது. 

7-ம் மாதம் காய் காய்க்கத் தொடங்கும். 8-ம் மாதம் காய் பறிக்கலாம். 9-ம் மாதத்தில் இருந்து மகசூல் அதிகரிக்கும். 12-ம் மாதம் வரை நல்ல மகசூல் கிடைக்கும். 13-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பிறகு, மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் தரமில்லாமல் இருக்கும்.

 மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்!
பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.

எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்-(elumichai saagupadiul paathukaapu muraigal)

தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன.

இலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் காணப்படுவதோடு, இலைகள் காய்ந்து, சிறுத்து, செடியின் நுனி வளர்ச்சி குன்றுவதுடன், பூக்கள் சரிவரப் பூப்பதில்லை.

சில்லிட் ஒட்டுப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு இளம் கிளைகள், துளிர் இலைகள், மொட்டுகள், பூக்கள் உள்ளிட்ட பாகங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி அதிக சேதம் விளைவிக்கின்றன. ஒட்டிப்பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட குருத்துப் பகுதிகள் காய்ந்துவிடும். மேலும் இலைகள் சுருண்டும், நெலிந்தும் காணப்படும்.

இந்தப் பூச்சிகளைத் தொடர்ந்து, அசுவிணி மற்றும் கறுப்பு ஈ அதிகமாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சிகள், தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், இலைகள் பிசுபிசுப்புடன் காணப்படும்.

இதனால், இலைகள் கருமையாகமாறி, கரும்படல நோயைத் தோற்றுவிப்பதோடு, ஒளிச்சேர்க்கையும் தடைபட்டு, மகசூல் குறைந்து வருகிறது. மேலும் இந்தப் பூச்சிகள் டிரிடிசா என்ற வைரஸ் நோயையும் பரப்புகின்றன.

அடுத்ததாக தாவர நூல் புழுக்கள் எலும்ச்சையின் வேர்களில் இருந்து கொண்டு திசுக்களை உள்கொள்வதால் மரத்தின் நுனி வாடி மேலிருந்து கீழாகக் காய்ந்து காணப்படும். இந்தத் தாக்குதலில் விவசாயிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது குறைந்தபட்சம் ஒர் எலும்ச்சை பழம் ரூ-2க்கு விற்கும் நிலையில் எலுமிச்சையில் சரியான பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கையாளுவதால் அதிக லாபம் பெறலாம்.

  • எலுமிச்சை செடிகளைப் பாதுகாக்க நல்ல காற்றோட்டம் அவசியம்.
  • தழைச்சத்து அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • களைகள் இல்லாமல் நன்கு பராமரிக்க வேண்டும்.
  • சரியான பதத்திhல் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
  • வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
  • மரத்துக்கு மரம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
  • மேலும் ஒட்டுப் பொறிகளை ஒர் ஏக்கருக்கு 5 வீதம் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • நன்மைசெய்யும் எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அதிகமாப் பெருகவிட வேண்டும்.
  • நெருக்கமாக இருக்கும் செடிகளைச் சரியான இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
  • பூச்சிகளின் பாதிப்பு பொருளாதாரச் சேத நிலையை தாண்டும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லியான அசிபேட் மானோகுரோட்டாபாஸ், டைமீத்தையோட், மாலத்தியான், இம்மிடாகுளோ பிரிட் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து செடிகளைச் சுற்றி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தாவர நூல் புழுக்களின் சேதம் இருக்கும்போது குருணை மருந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலும்ச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.
  • மேலும் இதுதொடர்பான தொழில் நுட்பங்கள் தேவையெனில் தொழில்நுட்ப வல்லுநர் சி.சங்கர், தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்

4/26/2018

பூச்சிகளை கட்டுப்படுத்தும் வேம்பு_(Poochikalai kattupaduthum veembu)

இயற்கை வழியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையின் கொடையான வேம்பின் பயன்பாடு குறித்து நெல் ஆராய்ச்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.

விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். 

பூச்சிக் கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகளான தட்டான், ஊசித் தட்டான், பொறி வண்டு, தரை வண்டு, சிலந்திகள், குளவிகள், தேனீக்கள் போன்றவை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழ்நிலைகளையும் பாதிக்கிறது.

பூச்சிக் கொல்லி மருந்துகளை திரும்பத் திரும்ப தெளிப்பதனால் பூச்சிகளானது பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையை உருவாக்கி கொள்கின்றன.

இது மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவு தானியங்களிலும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் எஞ்சிய நஞ்சானது தேங்கி விடுகிறது. இதனால் மனிதர்களுக்கும், அவர்களைச் சார்ந்த விலங்கினங்களும், பறவைகளும் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. 

எனவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

உலகில் மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரங்களில் வேம்பு முதன்மையானது. 

இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங் கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது*

வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர். 

வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 

அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

இவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய்

பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன.

மேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயப் பயிர்கள்

  1. நெற்பயிரில் வேப்பஎண்ணெய் 1 சதம் (10மிலி-லிட்டர்)அல்லதுவேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது.
  2. வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவமானது பாதிக்கப்படுகிறது. 
  3. மேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
  4. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதல் இருந்து பாதுகாக்கிறது.
  5. கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. 
  6. அசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலாவது 90 சதவீதம் வரை வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
  7. வேப்பங் கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது.
  8. நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 
  9. வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.


நன்மைகள்

  1. வேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. வேம்பானது பூச்சிகளை கொல்வதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன. 
  2. இவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை. 
  3. வேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொல்வதில்லை. இதனை செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கலந்தும் தெளிக்கலாம.
  4. வேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியது மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளின் விலையும் மிகவும் குறைவு.
  5. எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம்.

மாடித்தோட்டம் என்றால் என்ன ? -(Maadi thottam)

மாடித்தோட்டம் என்றால் என்ன ? 
நம் வீட்டின் மாடியில் செடிகொடிபூ
காய்கனிகளை வளர்ப்பதுஅது மாடியாகவோ,பால்கனியாகவோ இருக்கலாம்முன்பு வீட்டைச்சுற்றியிருந்த தோட்டத்திற்கு இடம்இல்லாமல் போனதால் அதை 
மாடிக்குமாற்றம் செய்துவிட்டோம்நிலம் வாங்கிபயிர் செய்யும் பிரச்சனைகள் 
இதில்இல்லாததுஇதை வரவேற்கத்தக்கதாகமாற்றியுள்ளது.

மாடித்தோட்டம் எங்கு அமைக்கலாம்?

அடுக்குமாடி குடியிருப்புகள்தனி
மாடிவீடுகள்அலுவலக வளாகங்கள் 
ஆகியஇடங்களில் இடங்களில் 
அமைக்கலாம்.மாடித்தோட்டம் 
அமைப்பதற்கு முன் செய்யவேண்டியது என்னமொட்டைமாடியில்உள்ள தண்ணீர் வீட்டிற்குள் கசிந்துவிடாதபடி 
வாட்டர் ப்ரூப் பூச்சு கொண்டு பூசிதயார் செய்து கொள்ள வேண்டும்.

செடிகளின் வேர்களால் தரைக்கோ அல்லதுகட்டிடத்திற்கோ என்ன பாதிப்புகள்வரும்?

ஆணி வேர் கொண்ட செடிகள் (மரங்கள்)ஆபத்தானவைஇவ்வகை செடிகள்தரையை துளைத்து கட்டிடத்தைசேதமடையச் செய்துவிடும்ஜல்லிவேர்கள்கொண்ட செடிகளே நாம் மாடித்தோட்டத்தில்
வளர்ப்பதற்கு சிறந்தவைநாம்மாடித்தோட்டத்தில் பயிரிடும் பெரும்பாலனகாய்கறிகள்பழங்கள் ஆகியவை ஜல்லிவேர் கொண்டவைகளாகும்.

மாடித்தோட்டம் வளர்ப்பதினால் நமக்குஎன்ன பயன்?

நாம் அனைவரும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உடலாலும்
மனதாலும்மிகவும் சோர்வடைகின்றோம்முக்கியமாகமனச்சோர்வடையும் போது நமக்குமாடித்தோட்டம் அருமையான
நண்பனாகவும்நமக்கு பெரும் 
மனஅமைதியையும் மற்றும்புத்துணர்ச்சியையும் தருகின்றதுநாம்பார்த்து
பார்த்து வளர்க்கும் ஒவ்வொருசெடியும்அதன் வளர்ச்சியை காணும்போதுமனதுக்கு கிடைக்கும் தன்னிறைவும்,
சந்தோசமும் அளிக்கின்றதுமேலும்இதுவே நமக்கு வரும் பெரும்பாலான
நோய்களை விரட்டுகிறது.


நமது வீட்டை வெயிலின்
வெட்கையிலிருந்து ஐந்து முதல் பத்து 
டிகிரிவரை குறைத்து இயற்கையான ஏசியாகசெயல்படுகிறதுஅதிக வெயில்
குளிர்மற்றும் இரைச்சலிலிருந்து வீட்டைபாதுகாக்கிறது
நாமே வளர்த்த சத்தான காய்கறிகள்,
கீரைகள் பிரஷ்ஷாக கிடைக்கிறது
நம்குழந்தைகளுக்கும் இதில் ஆர்வம்
ஏற்படுகிறதுஅவர்களும் நம்மிடமிருந்துநல்ல விசயங்களை கற்றுக்கொள்கிறார்கள்.விவசாயிகளின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் புரிந்து கொள்வதோடு இயற்கையோடு வாழ பழகிக் கொள்கிறார்கள். மேலும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதைவிட அதிகப்படியான உடற்பயிற்சி, சுத்தமான காற்றும் நம் வீட்டிலேயே கிடைக்கிறது.