ads

3/30/2018

முருங்கை இலை காய்கறி பயிரிக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி-(kaai kari pairuku valarchi ooki)


முருங்கை இலை காய்கறி பயிரிக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி மற்றும் நல்ல மகசூல் தருகிறது.

1.முருங்கை இலை எடுத்து  அம்மியில் அரைத்து சாறு எடுத்து 5 நாள் ஒரு வளியில் போட்டு மூடி வைத்து விட்டு 6 ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்து செடியின் வேர் பகுதியில் ஊற்றினால் காய்கறி பயிர் நன்றாக காய்க்கிறது.(செய்முறை ஒன்று)

2. பிளாஸ்டிக்  பக்கெட்டில் முருங்கை இலை பறித்து எடுத்து அதன் முழுகும் அளவுக்கு தண்ணி ஊற்ற வேண்டும்.

உப்பு மற்றும் புளி சிறிதளவு (புளி சாறை எடுக்கும் தண்மை கொண்டது ) போட்டு பிளாஸ்டிக் பக்கெட்டில் மூடி வைத்து 5 நாள் பிறகு சாறு எடுத்து 6 ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்து செடியின் வேர் பகுதியில் ஊற்றினால் காய்கறி பயிர் நன்றாக காய்க்கிறது.(செய்முறை இரண்டு)

மேலும் இந்த சாற்றை  1 லிட்டர் தண்ணீரில் 150 மல்லி வாரம் ஒரு முறை காய் கறி செடியின் மீது தெளிக்க காய்கறி செடி நன்றாக காய்க்கிறது மற்றும் எடை கூடுதலாக கிடைகிறது மேலும் ஒரு வாரம் முதல்  காய்கறி கெடாமல்  பசுமையாக இருக்கிறது.


இந்த முயற்சி ஆப்பிரிக்கா நாட்டில் ஒருவர் செய்து பார்த்து வெற்றி கண்டார் அதன்பின் திரு.ராஜா மணி ஐயா இதனை பரப்பி விட்டார் மற்றும் செய்து பார்த்து ஒரு தக்காளி 150 கிராம் எடை பலபலன் தந்தது அவருக்கு.

முருங்கை இலை இல்லை என்றால் அகத்தி இலை அல்லது இயற்கை விளைந்த கீரை வகைகளை பயன் படுத்தலாம்.

இயற்கை பூச்சி கொல்லி பொன்னீம்-(Iyyarkai poochikolli ponneen)



இந்த பொன்னீம் தயாரிப்பு மிகமிக எளிதானதாகவே இருக்கிறது.
வேப்ப எண்ணெய் 45%,
புங்கன் எண்ணெய் 45%,
சோப்புக் கரைசல் (ஒட்டும் திரவம்) 10% ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, நன்கு கலக்கினால் உடனடியாக பொன்னீம் தாயர்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். 10 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாக கலந்துவிடும் மிண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கருக்கு ஒன்றறை லிட்டர் வரை தேவைப்படும்.

பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

அசுவினி:

இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.

காய்த் துளைப்பான்:

தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.

படைப்புமு:

இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப் புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்தது போல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.

3/29/2018

சூப்பர் நேப்பயர்(Pakchong1) நேப்பியர் புல்-(sooper neppiyar pul)



இது யானை புல் மற்றும் கம்பு ஒட்டு சேர்த்து உருவாக்கபட்ட நேப்பியர் புல் ஆகும்.

இத்தீவனப்புல்லின் முக்கிய பலன்களை கீழே பட்டியலிட்டுள்ளேன் :-

1. இத்தீவன புல்லின் புரத சத்து 14-18℅ ஆகும். இது ஆசியாவில் இருக்கும் அனைத்து வகையான நேப்பியர் புற்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

2. ஒரு ஏக்கருக்கு சுமார் 200 டன் பசுந்தீவனம் கிடைப்பதால் இப்புல்லை "நேப்பியர் புல்களின் ராஜா" என தாய்லாந்து நாட்டில் அழைக்கிறார்கள்.

3. ஒரு ஏக்கருக்கு 200 டன் பசுந்தீவனம் கிடைத்தால் சுமார் 15 கறவை மாடுகளின் தீவன தேவையை இப்புல் பூர்த்தி செய்யவல்லது.

4. இதன் மூலமாக பால் பன்னையாளர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

5. நீரில் கரையும் கார்போ ஹைட்ரேட் 18% இருப்பதால் இத்தீவன் புல் சைலேஜுக்கு மிகவும் ஏற்றது.

பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை-(Pasu maadugalukku theevana melanmai)


அடர் தீவனம் தயாரித்தல்:-

பல்வேறு முறைகள் 100 கிலோ(கிலோ) :-

1). கடலை புண்ணாக்கு ( 25),
      பருத்தி கொட்டை(24),
      பருப்பு நொய்(24),
      கோதுமை தவிடு(24),
      தாதுஉப்பு கலவை(1),
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

2). கடலை புண்ணாக்கு ( 30),
      பருத்தி கொட்டை(10),
      மக்காச்சோளம்(15),
      கேழ்வரகு(5),
      கொள்ளு(8), 
      கோதுமை தவிடு(14),
      நெல் தவிடு(15)
      தாதுஉப்பு கலவை(1), 
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

3). கடலை புண்ணாக்கு ( 35),
      பருத்தி கொட்டை(32), 
      கோதுமை தவிடு(30), 
      தாதுஉப்பு கலவை(1),
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

4). கடலை புண்ணாக்கு ( 30),
      பருத்தி கொட்டை(15),
      மக்காச்சோளம்(18),
      கொள்ளு(5),
      கோதுமை தவிடு(29),
      தாதுஉப்பு கலவை(1),
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

5).  கடலை புண்ணாக்கு ( 25),
      பருத்தி கொட்டை(10),               
      மக்காச்சோளம்(10),
      மரவள்ளி மாவு (18),
      கோதுமை தவிடு(34),
      தாதுஉப்பு கலவை(1),
      நாட்டுச் சர்க்கரை (1),
      உப்பு(1).

6). கடலை புண்ணாக்கு (30),
      பருப்பு நொய்(15),
      கோதுமை தவிடு(43),
      வெல்லப்பாகு(10),
      தாதுஉப்பு கலவை(1),
      உப்பு(1).

7). கடலை புண்ணாக்கு (15),
      கருக்காய் தவிடு(30),
      கோதுமை தவிடு(30),
      புளியங்கொட்டை நொய்(10),
      கேழவரகு/கம்பு/மக்காச்சோளம் (15),         
      வெல்லப்பாகு(8),
      தாதுஉப்பு கலவை(1), 
      உப்பு(1).

உலர் தீவனம்:-

உலர்ந்த நெல் தால், கோதுமை தால் , சோளத்தட்டு, கம்புத்தால், கேழ்வரகு தால், வேர்கடலை கொடி, உலுந்து செடி போன்றவைகள் உலர் தீவனம் என்று சொல்வோம்

அன்றாட தீவன அளவீடு( தேரயமாக)
பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 10% (7%பசுந்தீவனம், 2% உலர் தீவனம், 1%அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம்.

நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்.

எ.கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம்.

கறவை மாடுகளுக்கு ஒவ்வொரு 1லிட்டர் பாலுக்கும் 500கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும்.

பால் வற்றிய மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 7 சதம்( 5.5% பசுந்தீவனம்,1%உலர் தீவனம், 0.5%அடர் தீவனம் தினமும் தீவனம் அளித்தல் முக்கியம்).

நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்.

எ.கா தோரயமாக 15 கிலோ பசுந்தீவனம், 2-4 கிலோ உலர் தீவனம், 1.5 கிலோ அடர் தீவனம்.

தீவன ஊறுகாய் புல் தயாரித்தல்(1000 கிலோ)
தேவைபடும் போருள் : 

தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், கோஎப்ஸ் 29-31,
வெலலப்பாகு அல்லது மேலாசஸ் 20 கிலோ, சாதரண உப்பு -8 கிலோ – பாலிதின பை அல்லது தொட்டி அல்லது டிரம்.

தயரிக்கும் முறை:-

பயிர்களை பால் பருவத்தில் அறுவடை செய்து 1-2 மணி நேரம் உளர விட வேண்டும்
பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும் (தீவனம் வெட்டும் இயந்திரம் இருந்தால் நன்று) நறுக்கியவற்றை குழிகளில் அல்லது டிரம்மில் அடுக்காக கொட்டவும். ஒவ்வொரு முறையும் நன்கு அழுத்தி விடவும் ( காற்று வெளியேற்றுவதர்காக)
ஒவ்வொறு அடுக்குக்கும் வெள்ளம் மற்றும் உப்பு தெளித்து நிரப்பவும்.

பிறகு காற்று மற்றும் நீர் புகாமல் பாலிதின் கொண்டு மூடவும் மூன்று மாதம் கழித்து இவற்றை 9-12 மாதம் வரை பயன்படுத்தலாம்.

பசுந்தீவனம் இல்லாத காலங்களில் இவற்றை பயன்படுத்தலாம். பசுமை மாறமல் இருப்பதால் கால்நடை விரும்பி உண்ணும்.

தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் குழு.

3/27/2018

உயிர் உரங்களின் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் -(Yuir urangalain nanmaigal mattrum payanpaduthum muraigal)

சூடோமோனஸ் புளோரோசன்ஸ்:
சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில் இலைக்கருகல் இலைப்புள்ளி , குலைநோய், துருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும்.சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பயிர்களில் நோயை உண்டுபடுத்தம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
நன்மைகள்:
சூடோமோனஸை பயன்படுத்துவதால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி யூக்கிகளை ( ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறதுபயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது
பயன்படுத்தும் முறைகள்:
அடியுரமாக போடலாம். தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றலாம்.ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸைசிறிது நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்2 கிலோ சூபோமோனஸ்சை 200 கிலோ மக்கிய இயற்கை உரத்துடன் கலந்து 4 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் மூடி வைத்தபிறகு; நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது இடவும்.சூபோமோனஸ் ஒருகிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம்.
வேம்:
வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும்.வேம் என்பது ஒரு உயிர் உரமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
நன்மைகள்:
வேர்உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும் வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரை பாதுகாக்கிறது, வேர்களுக்கு மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொடுக்கிறது மகசூல் 10 மதல் 15 சதம் அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் முறைகள்:
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிலேர் வேம் உயிர் உரத்தை விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் கிழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும். வளர்ந்தபயிருக்கு 50 முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும். பாலித்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசனம் போடவும், 1000 கிலோ மண்கலவையில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.
டிரைக்கோடெர்மா விரிடி:
பயிர்களில் மண், நீர் விதையின் மூலம் பறவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சானக்கொல்லியாகும்.
நன்மைகள்:
டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது.மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.
பயன்படுத்தும் முறைகள்:
அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம். ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பிறகு நடவு செய்யலாம்.டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோவை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம( சாணம்; உரம்) 100 கிலோவுடன் கலந்து 10- 15 நாட்கள் நிழலில் வைத்துப் பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம்.டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோவை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்பகுதியில் ஊற்றலாம்.
அசோஸ்பைரில்லம்:
அசோஸ்பைரில்லம் என்பது ஒரு உயிர் உரம் இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிறகித்து பயிருக்கு 20 முதல் 40 கிலோ தழைச்சத்தை கிடைக்க செய்யும். பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது.அசோஸ்பைரில்லத்தை அனைத்துவகை பயிர்வகை பயிர்களை தவிர மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தலாம் குறிப்பாக நெல், கம்பு, சோளம், பருத்தி மற்றும் காய்கறிவகை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
நன்மைகள்:
பயிர்களின் மகசூல் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கிறது.இரசாயண உரத்தின் அளவு 25 சதம் குறைக்கிறது.மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது.விதை முளைப்புதறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவு வறட்சியைத்தாங்கும் தன்மையை அளிக்கிறது.
பாஸ்போ பாக்டீரியா:
பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் இது மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கொடுக்கிறது இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.விதை நேர்த்தி செய்யலாம், நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடலாம், அடியுரமாக போடலாம்.பாஸ்போபாக்டீரியா 20 கிராம் ஒரு கிலோ விதையுடன் நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யவும்.பாஸ்போபாக்டீரியாவை 2 கிலோவை 100 கிலோ மக்கிய உரத்துடன் கலந்து 5 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடிவைத்து பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும்பொழுது தூவிவிடலாம்.பாஸ்போபாக்டீரியா அரைக் கிலோவை 15 முதல் 20 லிட்டர் நீரில் கரைத்து விடவும் பிறகு நாற்று, கிழங்கு வகைகளை நனைத்து நடவு செய்யலாம்.
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி:
காய்ப்புழுவிற்கு டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி என்பது இது ஒரு குளவி இனத்தை சேர்ந்தது தீமை செய்யும் பூச்சியின் முட்டைக் கருவை தின்று இறுதியில் கொன்று விடும். தீமை செய்யும் பூச்சிகளை முட்டை பருவத்திலே அழிப்பதால் பயிர்களில் சேதம் ஏற்படுவதில்லை. டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை நெல், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள் மற்றும் பயிர்வகைகள் மானாவாரி பயிர்களில் பயன்படுத்தலாம் டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி குருத்துப் புழு, இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, தண்டுபுழு மற்றும் காய்துளைப்பான் மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு போன்ற புழுக்களின் முட்டைபருவத்தை கட்டுப்படுத்துகிறது.
நன்மைகள்:
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பானது,எளியமுறைகளில் கையாளலாம், ரசாயணப்பூச்சி கொல்லிகளின் உபயோகம் 35 சதம்வரை குறையும்.
பயன்படுத்தும் முறைகள்:
டிரைக்கோகிரமா முட்டை ஒட்டுண்ணி ஓரு ஏக்கருக்கு 5 மில்லி அட்டை பயன்படுத்தலாம். 1 மில்லி அட்டையிலிருந்து சுமார் 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் குளவிகள் வரை பொரித்து வெளிவரும்.அட்டை துண்டுகளை நூலினால் செடியின் இலையோடு கட்ட வேண்டும்.
பெசிலியோமைசிஸ்:
பெசிலியோமைசிஸ் என்பது பயிர்களில் வேரில் தாக்கும் நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணமாகும்.பெசிலியோமைசிஸை அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.பெசிலியோமைசிஸை விதைநேர்த்தி செய்யலாம், அடியுரமாக போடலாம், நாற்று, கிழுங்கு நேர்த்தி செய்யலாம், வேரிமூலம் ஊற்றலாம்பெசிலியோமைசிஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவுடரை ஆறிய அரிசி வடிகஞ்சி 100 மில்லி;யுடன் கலந்து விதைநேர்த்தி செய்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்.பெசிலியோமைசிஸ் 2 முதல் 3 கிலோ பவுடரை 100 கிலோ இயற்கை உரத்துடன் ( சாண உரம்) கலந்து 10 முதல் 15 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் முடி வைத்து பிறகு அடியுரமாக இடலாம்.

3/26/2018

வேம் இயற்கை உரம் தயாரிப்பது _(VAM iyyarkai uram thayaripathu yepadi)


வேம் - வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா 
  • தாவரங்களின் வேர்ப் பகுதியில் உண்டு உறங்கி உருப்படியான காரியங்களை ஆற்றுகிறது.
  • வேம்(VAM) என்பது இதன் சுருக்கமான பெயர்.
  • வெஸிக்குலர் அர்பஸ்குலர் மைக்கொரைசா (VESICULAR ARBUSCULAR MYCORHIZA)
  • தாவரங்களின் வேர்களுக்கும் மண்ணிற்குமிடையே பாலமாக பணி செய்கிறது.
  • பயிர்சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
  • மணிச்சத்து தரக்கூடிய – பாஸ்பரஸ் என்னும்; கந்தக சத்தை எடுத்துக் கொள்ள உதவுகிறது.
  • பாஸ்பரஸ் சத்து குறைவாக உள்ள நிலங்களில் பசுமைப் பொருட்களை  ( BIOMASS )   மேம்படுத்த உதவுகிறது.
  • மண்ணின் கட்டமைப்பை  மேம்படுத்த  “  வேம் “ உதவுகிறது.
  • வேர்களைத் தாக்கும்  பூசண நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
  • நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கிறது.
  • வேர்த் தூவிகளின் எண்ணிக்கையைக் கூட்டுகிறதுஇ 
  • வேர்ப் பரப்பினை அதிகரிக்கிறது.
  • வறட்சியைத் தாங்கும் சக்தியை அளிக்கிறது.   
  • இவை அடுத்தடுத்த பயிர்களுக்கும் தொடர்ந்து கிடைக்கும்.
  • நெல் போன்றஇ தேங்கி நிற்கும் தண்ணீரில் வளரும் பயிர்களுக்கு இது உதவாது.
  • இரும்பு மற்றும் துத்தநாக சத்துக்களையும் இது பயிர்களுக்கு எடுத்துத் தருகிறது. 

3/23/2018

பயிருக்கு தேவைப்படும்சத்துக்கள்-(Paiyuruku thevaipadum oota saththukal)

,


பயிர்களின் வளர்ச்சிக்கு  16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் .

பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்
பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.

பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள்
நுண்ணூட்டச்சத்துக்கள்  எனப்படும்.

பேரூட்டச்சத்துக்கள்

தழைச்சத்து, மணிச்சத்து,. சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகசத்து, மெக்னீசியம்சத்து முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.

நுண்ணூட்டச்சத்து

இரும்புச்சத்து, துத்தநாக சத்து, மாங்கனீசு சத்து, மாலிப்டின சத்து. தாமிர சத்து, போரான் சத்து,  பயிர்களுக்கு குறைந்த அளவே  தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்து எனப்படும்
.
 குளோரின் சத்து, சோடியம் சத்து, அலுமிசியம் சத்து, சிலிகான்சத்து. பயிர் வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும்

தாவரம் -  தாவரத்தில் உள்ள சத்துக்கள்,  பயன்கள் 

ஆவாரம் இலை
சத்து :  மணிச்சத்து
பயன்  : மணி பிடிக்க உதவும்

முருங்கை இலை,  கருவேப்பிலையில்
 சத்து :  இரும்புச்சத்து உள்ளது
பயன் :   பூக்கள் நிறைய பிடிக்கும்

எருக்கம் இலை  
சத்து  :  போரான் சத்து உள்ளது-
பயன் :  ¬ காய், பூ, அதிகம் பிடிக்கும்
காய்,   கோணலாகமல் இருக்கும்

புளியந்தலை
சத்து  :   துத்தநாக சத்து
பயன் :   செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக  இருக்கும்.
பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும்

செம்பருத்தி, அவரை இலை
சத்து :  தாமிர சத்து,
பயன் : தண்டுப்பகுதி மெலிந்து காணப்படாது

கொளுஞ்சி, தக்கபூண்டு 
 சத்து  : தழைச்சத்து
 பயன் :  பயிர் செழித்து காணப்படும்

துத்தி இலை
சத்து :  சுண்ணாம்புச் சத்து( கால்சியம் கார்பனேட்)
பயன் :   சத்துக்களை  பயிரின் பாகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும்.

எள்ளுசெடி
சத்து :  கந்தகம்( சல்பர்)
பயன் :    செடி வளர்ச்சி அதிகரிக்கும்-
தண்டு மெலிந்து இருக்காது மஞ்சள் கலராக மாறாது

வெண்டை இலை 
சத்து :  அயோடின்(சோடியம்)
பயன் :  மகரந்தம்  அதிகரிக்கும்

மூங்கில் இலை 
சத்து :  சிலிக்கா
பயன் : பயிர் நேராக இருக்கும்

பசலைக்கீலை
சத்து :   மெக்னீசியம்
பயன் :   இலை ஓரம் சிவப்பாக மாறாது

அனைத்து பூக்களிலும்
 சத்து :   மாலிப்டினம்
பயன் :   பூக்கள் உதிராது

நொச்சி :  பூச்சிகளை விரட்டும்

வேம்பு  :  :புழுக்கள் வராமல் பாதுகாக்கும்

வளர்ச்சி ஊக்கியாக தயாரிக்கும் முறை

அனைத்து தழைகள் ஒவ்வொன்றிலும்; அரைக்கிலோ வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அவற்றுடன்  கோமியம் அரை லிட்டர்
நாட்டு சர்க்கரை அரைக்கிலோ
சோற்றுக் கற்றாலை மடல் 1
தயிர் அரை லிட்டர்

செய்முறை

மேலே உள்ள ஒவ்வொரு தழைகளிலும்  அரைக்கிலோ அளவு எடுத்து நன்றாக இடித்து மண்பானையில்  போட்டு மூழ்கும் அளவு தண்ணீர்  ஊற்ற வேண்டும்.

அவற்றுடன் அரைக்கிலோ  நாட்டுச் சர்க்கரையையும், அரைலிட்டர் கோமியத்தையும் சேர்க்கவேண்டும்
.
அதன்பிறகு ஒரு சோற்றுக்கற்றாலை மடலில் உள்ள தோலை நீக்கி விட்டு சதை பகுதியை எடுத்து மிக்சியில் போட்டு அடித்து அவற்றையும் ஒன்றாக கலக்கி ஒரு வாரம் வரை வைத்திருக்க வேண்டும் .

ஒரு வாரம் கழித்து  எடுத்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி  என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்

தெளிக்கும் பொழுது ஒரு டேங்க்குக்கு ஒரு எலும்பிச்சம் பழம் சாறு எடுத்து கலந்து தெளிக்கலாம்.

மாமரத்தில் பழ ஈயின் தாக்குதல்-(Maa marathil pazha eeun thakkuthal)


மா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு
மாமரத்தில் பூக்கள் அதிகம் எடுத்துள்ளது
அவற்றில் பழ ஈயின் தாக்குதல் இருக்கும்.

பழ ஈயை கவர்ந்து கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிபொறி ( டிராப்) உள்ளது
அவற்றில் உள்ள டப்பாவில் பழ ஈயை கவர்ந்து இழுக்கக்கூடிய மாத்திரையை வைத்து விட்டால் பழ ஈ வந்து அந்த டப்பாவில் விழுந்து விடும் இவ்வாறு விழுவும் பழ ஈயை நாம் எடுத்து அழிக்கலாம்
அல்லது டப்பாவின் அடியில் சிறிது விளக்கெண்ணையை ஊற்றி விட்டால் அவை பறக்க முடியாமல் ஒட்டிக் கொள்ளும்.
.
பழ ஈயின் தாக்குதல் காரணம்; நமக்கு மகசூல் குறையும் மா மரம் உள்ள தோப்புகளில் கண்டிப்பாக இந்த இனக்கவர்ச்சி பொறியை வைத்து பழத்தை துளைக்கும் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்

முருங்கையில் இலை தின்னும் புழுவின் தாக்குதலை -( Murungaiul illai thinnum puzhukkal)

முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செடியை வாட விட்டு தண்ணீர் பாய்ச்சவும் நன்றாக காய்ச்சல் இருந்தால்தான் செடி நன்கு காய்க்கும். தற்பொழுது அனேக இடங்களில் முருங்கை சாகுபடி செய்தள்ளனர். அவை நன்றாக பூ வந்துள்ளது அதில் கூட்டுபுழுவின் தாக்குதல் ஏற்பட்டு பூ, இலைகள் அனைத்து பாகத்தையும் தின்று ஒன்றாக சுருட்டி வைத்து விடுகின்றது.

வானம் மேகமூட்டமாக இருந்தாலும் மழைபெய்தாலும் செடியில் உள்ள பூக்கள் அனைத்தும் கொட்டிவிடும் மேலும் முருங்கை இலையில் இலை தின்னும் புழுக்கள் இலையின் அடிப்புறம் இருந்து மெல்லிய நூலாம் படை போன்ற அமைப்பு ஏற்ப்படுத்தி பச்சையத்தை உண்ணுவதால் இலைகள் காகிதம் போன்று காணப்படும்.
இலை தின்னும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த 3 சத வேப்ப எண்ணெயினை ஒரு வார இடைவெளியில் காலை வேளையில் இலைகள் நன்கு நனையுமாறு தெளித்து கட்டுப்படுத்தலாம். வேப்ப எண்ணை கரைசல் தெளிக்கும் போது அதனுடன்
ஒட்டுபசை அல்லது காதி சோப் கலந்து தெளிக்க வேண்டும்

கூட்டுப்புழு தாக்குதல் அறிகுறி
முருங்கை செடியின் கொத்தில் உள்ள பூக்கள் இப்புழுக்களால் பாதிக்கப்பட்டு பூக்கள் அனைத்தும் ஒன்றாக சுருண்டு காணப்படும்.  பார்ப்பதற்கு நூலாம் படையில் பூக்கள் ஒன்றாக பிண்ணியது போல் காணப்படும்.

கட்டுப்படுத்தும்முறை

ஒரு லிட்டர் தண்ணீருக்கு மோனோகுரோட்டோபாஸ்; 2 மில்லி  என்ற அளவில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

குறிப்புகள்

முருங்கை நடவு செய்து செடி 2 ½ அடி வளர்ந்த பின்பு செடியின் நுனியை கிள்ள வேண்டும். 20 வது கிளைகள் வரும் வரை கொழுந்து கிள்ள வேண்டும்.
வயலில் தேனீ பெட்டி வைத்தால் அயல்மகரந்தசேர்க்கை ஏற்பட்டு அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு.

3 நாள் புளித்த தயிரை 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்தால் 20 சதம் வரை மகசூலை அதிகப்படுத்தலாம்.

பயிரை பாதுகாக்க கூடிய வேம்பின் பயன்கள்-(Paiurai pathukaka koodiya vembin payangal)

சுற்று சூழல் பாதிப்படையாது
பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தும்
,நூற்புழுக்களையும் கட்டுப்படுத்தும்
அந்துப்பூச்சிகளை மலடாக்கும், முட்டைகளை பொறிக்க விடாமல் தடைசெய்யும் வேம்பின் வாசனையின் மூலம் பூச்சிகளை வரவிடாமல் செய்யும் தன்மையுடையது கசப்புத் தன்மை இருப்பதால் பூச்சிகளை உண்ணவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது பூச்சிகள் சாப்பிடாலும் அவற்றை சீரணிக்க விடாமல் குமட்டச் செய்யும் ஆற்றல் உள்ளது புழுக்களை தோலுரிக்க விடாமல் தடுக்கும், புழுக்கள் இனவிருத்தி செய்வதை தடுக்கும்  கூட்டுப்புழு மற்றும் புழுவின் வளர்ச்சியை தடுக்கும், நன்மை செய்யும் பூச்சிகளை பாதிக்காது

வேப்பங் கொட்டை கரைசல் தயாரித்தல்

ஒரு ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டை தேவைப்படும் அவற்றை இடித்து நன்கு தூளாக்கி அவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு இரவு முழுதும் ஊறவைக்க வேண்டும். பின்பு அவற்றை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி  என்ற விகிதத்தில் கலந்து  ஒட்டு பசை  சேர்த்து,10 லிட்டர் பசுமாட்டுக் கோமியம்  சேர்த்து கலந்து தெளிக்கவும்.

கட்டுப்படும் நோய் : பாக்டீரியா நோய்கள்

நெல் பாக்டிரியா கருகல் நோய்
இலையுறைக் கருகல் நோய்
நெல் துங்ரோ வைரஸ் நோய் (குட்டைப்புல் நோய்)
தக்காளி இலைக்கருகல் நோய்,சாம்பல் நோய்
மிளகாய் இலை சுருட்டை நோய்

வேப்பம் புண்ணாக்கு சாறு
2 கிலோ வேப்பம் புண்ணாக்கை 10 லிட்டர் நீரில் கலந்து 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கலவையை வடிகட்டி 100 மில்லி சோப்புக் கரைசலுடன் 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கர் பயிரில் தெளிக்கலாம்.

கட்டுப்படும் நோய்கள்
எலுமிச்சை சொறி நோய்
தக்காளி இலைப்புள்ளிநோய்
நெல் தோகை அழுகல் நோய் 
மிளகாய் பழ அழுகல் நோய்

 அனைத்து இடங்களிலும் வேம்பு வளர்க்கலாம் வேம்பிலிருந்து பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க நாம வயல் ஓரங்கள், தரிசு நிலங்களில் மற்ற இடங்களலும் வேம்பு வளர்த்து பயனபடுத்தலாம் இப்பொழுது நடவு செய்தால் தண்ணீர் ஊற்றும் செலவு மிச்சம் எந்தவித பழுதும் வராமல் முளைத்துவிடும் ஆகவே நாம் இப்பவே வேப்பமரம் நடவு செய்வோம் வேப்ப மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 50 கிலோ வேப்பங் கொட்டை கிடைக்கிறது அதில் 50 சதவீதம் வேப்ப எண்ணெய் கிடைக்கும் அனைத்து வகை பூச்சி, நோய்களையும்  கட்டுப்படுத்தும், வேம்பில் கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளின் எண்ணிக்கை  123
மனிதர்களுக்கும் நல்லது எனவே வேப்பமரத்தை இப்பொழுதே நடவு செய்வோம்

3/21/2018

முருங்கையைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்பாடு -(Murungaiyai thaakum poochikal mattrum kattupaadu)

முருங்கையைத் தாக்கும் பூச்சிகளில் மிக முக்கியமானவை : இலை உண்பவை, பூ உண்பவை, சாறு உறிஞ்சும் பூச்சி, வேர் உண்பவை மற்றும் துளைப்பானிகள் ஆகும்.
பூக்களை உண்பவை
மொட்டு புழு
  • புழுக்கள் மொட்டுகளில் ஒற்றை அல்லது கூட்டாக முட்டைகளை இடுகின்றன.
  • பூ மொட்டுகளை புழுக்கள் துளையிட்டு இறுதியில் மொட்டுகள் உதிர்ந்துவிடும்.
  • மொட்டுப்புழு தாக்குதல் அதிகமாக தென் இந்தியாவில் காணப்படுகிறது. இவை 78 சதவீதம் தாக்குதலை ஏற்படுத்துவதாக கணிடறியப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு
  • மரத்தினைச் சுற்றயுள்ள பகுதிகளை நன்கு உழுதல் வேண்டும்.
  • தாக்கப்பட்ட மொட்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • விளக்கு பொறி ஒரு ஹெக்டேருக்கு ஒன்று அமைக்க வேண்டும்.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளான காப்பரில் 150 டபிள்யூ.பி 1 கிராம் / 1 லிட்டர் அல்லது மாலத்தியாண் 50 இ.சி 2 மிலி/லிட்டர்-ஐ தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைகளை உண்பவை
இலைப்புழு
புழுக்கள், இலைகளை சுரண்டி உண்பதால் இலைகள் சல்லடை போன்ற வலை அமைப்புடன் காணப்படும். வெண்மை நிற நீள் வட்ட வடிவ முட்டை குவியல்கள் இலைகள் மீது காணப்படும். கடுமையான தாக்குதலின் போது இலைகள் உதிர்ந்து விடும். ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் இளம் இலைகள் அதிகமான தாக்குலுக்கு உட்படும்.
கட்டுப்பாடு
  • மரத்தைச் சுற்றி உழவு செய்து, மண்ணில் புதைந்து காணப்படும் கூட்டுப்புழுக்களை வெளி கொணர்ந்து அழிக்க வேண்டும்.
  • புழு மற்றும் வலை போன்ற அமைப்பினை இளம்நிலையில் கண்டறிந்து அழித்தல் வேண்டும்.
  • விளக்கு பொறி ஒரு ஹெக்டருக்கு ஒன்று அமைக்க வேண்டும்.
  • காப்பரில் 50 டபிள்யூ.பி 1 கிராம் / லிட்டர் அல்லது மாலத்தியாண் 50 இ.சி 2 மி.லி / லிட்டர் பெண்தயாண் (0.05 சதவீதம்) என்ற அளவில் மருந்தினை தெளிக்க வேண்டும்.
கம்பளிப்புழு
  • மரத்தின் தண்டுப்பகுதியில் புழுக்கள் கூட்டமாகக் காணப்படும்.
  • புழுக்கள் இலைகள் மற்றும் தண்டுப்பகுதியைச் சுரண்டி உண்ணும்.
  • பகல் நேரத்தில் புழுக்கள் தண்டுப்பகுதியைச் சூழ்ந்து காணப்படும். கூட்டுப்புழுக்கள் மண்ணில் அதிகமாக காணப்படும்.
கட்டுப்பாடு
  • முட்டைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • மழை பெய்தவுடன் விளக்கு பொறி ஒரு ஹெக்டருக்கு ஒன்று என்ற விகிதத்தில் பொருத்தி அந்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • தீ பந்தம் கொளுத்தி புழுக்களை அழிக்க வேண்டும்.
  • மீன் எண்ணெய் ரோசின் சோப் 25 கி / லி அல்லது எணர்டோசல்பானி 35 இ.சி 2 மி.லி/ லிட்டர் அல்லது கார்பரில் 50 டபிள்யூ.பி 2 கி/லிட்டர் தெளிக்க வேண்டும்.
சாம்பல் வண்டு
  • வண்டுகள் வேர் மற்றும் இலையினை உண்டு மரத்தினை வாடச் செய்கின்றன.
கட்டுப்பாடு
  • வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • கார்போபியூரான் 3 ஜி 15 கிலோ/ஹெக்டர் அளவினை நடவு செய்த 15-வது நாளில் இட வேண்டும்.
சாறு உறிஞ்சுபவை
காட்டன் அசுவினி
  • அசுவினிப்பூச்சி இளம் தண்டினைத் தாக்குகிறது.
  • முதல் நிலை புழுவான கிரைசோபெர்லா கார்னியாவை 1,00,000/ஹெக்டர் எண்ணிக்கையில் நிலத்தில் விட வேண்டும்.
  • மிதைல் டைமெடான் அல்லது டைமித்தியேட் 2 மி.லி/லிட்டர் தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பதற்கு முன் அனைத்து காய்களையும் நீக்க வேண்டும்.
துளைப்பான்கள்
காய் ஈ
  • காய் ஈ, காயின் உள் சென்று உட்பகுதியினை உண்ணும்.
  • காய்கள் மீது தேன் போன்ற திரவம் வடியும். இதனை தொடர்ந்து காயின் முனைப்பகுதி வறண்டு காணப்படும்.
கட்டுப்பாடு
  • தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • இப்பூச்சியினை ஈர்க்கும் பொருட்களான சிட்ரோனல்லா எண்ணெய், நீலகிரி மர எண்ணெய், வினிகர், டெக்ஸ்ட்ரோஸ் அல்லது லாக்டிக் அமிலம் வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • மரங்களைச் சுற்றியுள்ள நிலத்தை உழவேண்டும்.
  • கூட்டுப்புழுக்களைக் கொன்று தாய் ஈ உருவாவதைத் தடுக்க வேண்டும்.
  • எண்டோசல்பான் பொடி 25 கிலோ/ ஹெக்டர் வீதம் தெளித்து அழிக்க வேண்டும்.
  • நிம்பிசிட் 3 மி.லி/லிட்டர் கலந்து 50 சதவீதம் காய் உருவான பிறகு மற்றும் 35 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும்.
மரப்பட்டை துளைப்பான்
மரச்சக்கைகளும், புழுவின் சிறு சிறு உருண்டையான கழிவுகளும் மரப்பட்டையின் மீது காணப்படும்.
தண்டு துளைப்பான்
மரப்பட்டையின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாக துளைபோட்டு உண்ணும். தண்டு மற்றும் கிளைகளைத் தாக்கும்.
கட்டுப்பாடு
  • கழிவுகள் மற்றும் வளை போன்ற அமைப்புகளைத் தூய்மைபடுத்த வேண்டும்.
  • பஞ்சினை குளோரோபாம், பார்மலின் அல்லது பெட்ரோலில் நனைத்து துளை உள்ள இடத்தில் அடைத்து மண் கலவை கொண்டு பூச வேண்டும்.
வேர் உண்பவை
வெள்ளைப்புழு
இளம் பருவத்தில் வேர்களை உண்டு பிறகு முதிர்ந்த நிலையில் இலைகளை உண்ணுகின்றது. வண்டுகள் ஜூன்-ஜூலையில் வளர்ந்து செடியினைத் தாக்கும்.
கட்டுப்பாடு
  • மார்ச்-ஏப்ரல் மாதத்தில் உழுது மண்ணில் உள்ள முட்டைகளை வெளியே கொண்டு வருவதால் காகம் போன்ற பறவைகள் உணவாக உட்கொள்வதன் மூலம் அழிக்கலாம்.
  • நிலத்தில் நன்கு மக்கிய தொழு உரத்தினைப் பயன்படுத்த வேண்டும். மக்காத தொழு உரம், இளம் புழுக்கள் வளர்வதற்கு ஏற்ற ஊடகமாக அமையும்.
  • விளக்கு பொறிகளை ஒரு ஹெக்டருக்கு ஒன்று அமைக்க வேண்டும் (மழைக்காலத்தில்).

3/19/2018

எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு -(Elumichai sagupadiul paiur paathukappu)



தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன.

இலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் காணப்படுவதோடு, இலைகள் காய்ந்து, சிறுத்து, செடியின் நுனி வளர்ச்சி குன்றுவதுடன், பூக்கள் சரிவரப் பூப்பதில்லை.
சில்லிட் ஒட்டுப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு இளம் கிளைகள், துளிர் இலைகள், மொட்டுகள், பூக்கள் உள்ளிட்ட பாகங்களில் இருந்து சாற்றை உறிஞ்சி அதிக சேதம் விளைவிக்கின்றன. ஒட்டிப்பூச்சிகள் அதிகம் தாக்கப்பட்ட குருத்துப் பகுதிகள் காய்ந்துவிடும். மேலும் இலைகள் சுருண்டும், நெலிந்தும் காணப்படும்.
இந்தப் பூச்சிகளைத் தொடர்ந்து, அசுவிணி மற்றும் கறுப்பு ஈ அதிகமாகத் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பூச்சிகள், தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால், இலைகள் பிசுபிசுப்புடன் காணப்படும்.
இதனால், இலைகள் கருமையாகமாறி, கரும்படல நோயைத் தோற்றுவிப்பதோடு, ஒளிச்சேர்க்கையும் தடைபட்டு, மகசூல் குறைந்து வருகிறது. மேலும் இந்தப் பூச்சிகள் டிரிடிசா என்ற வைரஸ் நோயையும் பரப்புகின்றன.
அடுத்ததாக தாவர நூல் புழுக்கள் எலும்ச்சையின் வேர்களில் இருந்து கொண்டு திசுக்களை உள்கொள்வதால் மரத்தின் நுனி வாடி மேலிருந்து கீழாகக் காய்ந்து காணப்படும். இந்தத் தாக்குதலில் விவசாயிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
இப்போது குறைந்தபட்சம் ஒர் எலும்ச்சை பழம் ரூ-2க்கு விற்கும் நிலையில் எலுமிச்சையில் சரியான பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கையாளுவதால் அதிக லாபம் பெறலாம்.
  • எலுமிச்சை செடிகளைப் பாதுகாக்க நல்ல காற்றோட்டம் அவசியம்.
  • தழைச்சத்து அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • களைகள் இல்லாமல் நன்கு பராமரிக்க வேண்டும்.
  • சரியான பதத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
  • வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை ஒட்டும் திரவம் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
  • மரத்துக்கு மரம் வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும்.
  • மேலும் ஒட்டுப் பொறிகளை ஒர் ஏக்கருக்கு 5 வீதம் வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • நன்மைசெய்யும் எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களை அதிகமாப் பெருகவிட வேண்டும்.
  • நெருக்கமாக இருக்கும் செடிகளைச் சரியான இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
  • பூச்சிகளின் பாதிப்பு பொருளாதாரச் சேத நிலையை தாண்டும் போது ரசாயனப் பூச்சிக் கொல்லியான அசிபேட் மானோகுரோட்டாபாஸ், டைமீத்தையோட், மாலத்தியான், இம்மிடாகுளோ பிரிட் போன்ற மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து செடிகளைச் சுற்றி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தாவர நூல் புழுக்களின் சேதம் இருக்கும்போது குருணை மருந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலும்ச்சை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.

எலுமிச்சையில் சொறி நோய்-(Elumichaiul sori nooi)


எலுமிச்சை மரங்களை தாக்கும் நோய்களில் முக்கியமானது சொறி நோய். இந்நோய், எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் தென்படுகின்றது. இது பாக்டீரியாவினால் ஏற்படுகிறது

நோயின் அறிகுறிகள்
இலை, கிளை, சிறுகிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும்.
  • குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும்.
  • காய்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளை சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். பழங்களில் தோன்றும்
  • சொறிப் புள்ளிகளில் வெடிப்புகள் தோன்றும். நோயினால் பழங்களின் தோல்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
  • பழங்களில் சாறின் அளவும் குறைகின்றது. சொறி நோயுற்ற பழங்களின் சந்தை மதிப்பும் குறையும்.
  • பழத்திலுள்ள சொறிப்புள்ளிகள் மற்றும் வெடிப்புகள் மற்ற அழுகல் நுண்ணுயிர்கள் உட்புக வழி உண்டாக்குகின்றன.
  • சொறி நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியா, இலைத் துளைகள் மூலமாகவோ அல்லது பூச்சி அல்லது முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ, உட்புகுந்து தாக்குதலை துவங்குகின்றது.
  • நோய் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழைத்துளிகள், காற்று மற்றும் இலை துளைக்கும் பூச்சிகள் மூலம் பரவுகின்றது.
கட்டுப்படுத்தும் வழிகள்
  • நோயுற்றுக் கீழே உதிர்ந்து விழுந்து கிடைக்கும் இலைகளையும், சிறு குச்சி களையும் சேகரித்து எரித்து விட வேண்டும்.
  • மரங்கள் சிறப்பாக வளர நன்கு பரிந்துரைக்கப் பட்ட அளவு உரமிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • பழத் தோட்டங்களில் நோயுற்ற மரங்களிலிருந்து நோயுற்ற சிறு குச்சிகளை வெட்டி தீயிட்டு அழிக்கவும். பின் கவாத்து செய்த உடன் 0.30 சதம் தாமிர ஆக்ஸிகுளோரைடு மருந்து தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து மூன்று முறை ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 100 பி.பி.எம். (100 மில்லி கிராம்/ ஒரு லிட்டர் தண்ணீர்) மற்றும் 0.30 சதம் தாமிர ஆக்ஸிகுளோரைடு கலந்து ஒரு மாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • மரம் துளிர் விடும் ஒவ்வொரு சமயமும், மரத்தின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக நனையும்படி சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீர்)
    தெளித்தல் அவசியம்.
  • இவ்வகை பாக்டீரியா நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளுரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம்/ஒரு லிட்டர் தண்ணீர்) 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • எலுமிச்சையில் தோன்றும் இலைத்துளைப்பான்கள் இந்நோயை பரப்புவதால் அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்துவது அவசியம்.
  • வேப்பம் பிண்ணாக்கு (5 சதவிகிதம்) கரைசலை தெளித்தும் இந்நோயை பரப்பும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.

தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்-(Thennai tonic)



தென்னையில் ‘குரும்பைக் கொட்டுதல்’ பாரம்பரிய குணம். தென்னையில் ஒரு குலையில் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்து விடுகின்றன. அதிக குரும்பைகள் கொட்டுவதற்கு வறட்சி, மோசமான தட்பவெப்பநிலை, ஊட்டச்சத்து குறைவு, ஹார்மோன்கள் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள், மண்ணின் களர் உவர் தன்மைகள், மகரந்தச் சேர்க்கைக்குறை, பூச்சிநோய் தாக்குதல் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இவைகளில் நுண்ணுாட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் பற்றாக்குறைகளை வேர் மூலம் தென்னை ஊட்டச்சத்து டானிக் செலுத்துவதால் நிவர்த்தி செய்து விடலாம்.
ஊட்டசத்து டானிக் அவசியம்:
தென்னை ஊட்டச்சத்து என்பது தென்னைக்கு வேர் மூலம் ஊட்டுவதற்கு உகந்ததாகும். இந்த தென்னை ஊட்ட மருந்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, போரான் மற்றும் மாலிப்டினம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இத்துடன் மரத்துக்கு தேவையான ஆக்ஸின், சாலிசிலிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மரத்தின் கார அமில நிலைக்கேற்ப டானிக்கின் கார அமில நிலையும் அமையுமாறு டானிக் தயார் செய்யப்படுகிறது. இதனால் டானிக் மரத்திற்குள் சென்று மரத்தின் உயிர் வேதியியல் செயல்பாடுகளில் சேதம் விளைவிக்காமல், மரத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், வளர்ச்சி ஊக்கிகளையும் சேதாரம் இன்றி தருகிறது. எனவே மரத்திற்கு தேவையான நுண்ணுாட்டச் சத்துக்களை சரியான விகிதத்தில் நேரடியாக மரத்திற்குள் செலுத்த முடிகிறது. மேலும் மரத்தில் நோய், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி ஆகியவற்றிற்கு இயற்கையான எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
வேர் மூலம் ஊட்டச்சத்து


மரத்திலிருந்து இரண்டு முதல் மூன்று அடி தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திற்கு கீழ் உறிஞ்சும் வேர்கள் அமைந்திருக்கும். இந்த பகுதியில் பென்சில் கணமுள்ள மஞ்சள் நிற வேர் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் வேரின் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு உபயோகித்து சாய்வாக சீவி விடவும். பின் டானிக் உள்ள பையின் அடிவரை வேரை நுழைத்து, வேரையும் பையின் மேல் பாகத்தையும் நுாலால் கட்டி விடவும். மண்ணில் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும். ஒரு மரத்திற்கு 200 மில்லி டானிக் தேவைப்படும். ஊட்டச்சத்து டானிக் அளிப்பதன் மூலம் முக்கியமான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன.
இலைகளில் பச்சையம் அதிகரித்து, ஒளிச்சேர்க்கை மேம்படுவதால் மரத்தின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உயிர் வேதியியல் பணிகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களான ஊட்டச்சத்துக்கள் தடையின்றி கிடைப்பதால் மரத்தின் வீரியம் அதிகரிக்கின்றது. போரான் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்களும், ஆக்ஸின் போன்ற வளர்ச்சி ஊக்கியும் டானிக்கில் உள்ளதால் குரும்பைகள் உதிர்வதும், ஒல்லிக்காய்கள் உற்பத்தியாவதும் வெகுவாக குறைகின்றது. பூச்சி, நோய், வறட்சி, தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயற்கையான எதிர்ப்புச்சக்தி மரத்தில் உருவாகிறது.

தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை-(Thennaiul koon vandu thaakuthal melanmai)


வண்டு தாக்குதல் மேலாண்மை
விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. 

இத்தகைய பயிரான தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கூன்வண்டு தாக்குதலால் தென்னை மரம் பட்டுப்போகிறது. 

எனவே, விவசாயிகள் கூன்வண்டு தாக்குதல் மேலாண்மையைக் கையாள்வதன் மூலம் தென்னை சாகுபடியில் மகசூல் குறைவதை தடுத்து, நல்ல வருவாய் ஈட்டலாம்.

அறிகுறிகள்

வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் கீழ் பகுதியில் சிறப்பு நிறச் சாறு வடிந்த நிலையில், சிறு சிறு துளைகள் காணப்படும்.

இந்த துளையினுள் கூன் வண்டு இருப்பதைக் காணலாம்.

தென்னை மரத்தின் உள் ஓலைகள் மஞ்சள் நிறமாகவும், நுனிப்பக்கத்தில் உள்ள நடுகுருத்து வாடிய நிலையிலும் காணப்படும். பின்னர், மரம் முற்றிலும் காய்ந்துவிடும்.

பூச்சி விவரம்

கூன் வண்டின் முட்டையானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.

புழுக்கள் லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும். 

வண்டானது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும், மார்புப் பகுதியில் 6 அடர்ந்த புள்ளிகள் காணப்படும். 

ஆண் வண்டுகள் நீல முகத்துடன் காணப்படும்.

மேலாண்மை முறைகள்


கூன்வண்டு தாக்குதலால் காய்ந்து போன மரம், சேதமடைந்த மரத்தை அகற்றி, கூன்வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம்.

தென்னந்தோப்பை துய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் கூன்வண்டின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

உழவுப் பணியின்போது தென்னை மரம் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய மரத்தை கூன்வண்டுகள் தாக்கும்.

அதனால், மரத்தை காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூன்வண்டுகள் முட்டை இடுவதைத் தடுக்க மணல், வேப்பங்கொட்டை தூளை 2:1 என்ற அளவில் கலந்து, மரத்தின் குருத்து பகுதியிலும், மேல் உள்ள மரத்தின் 3 மட்டைகளின் கீழ்ப் பகுதியிலும் இட வேண்டும்.

கூன்வண்டுகளைக் கவர்ந்து இழுக்கும் பேரொழியுர் எனப்படும் கவர்ச்சி மற்றும் உணவுப் பொறிகளை இரண்டு ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

முருங்கையில் பூக்களை அதிகப்படுத்த மண் மற்றும் நீர் மேலாணமை-(Murungaiul pookalai athigapadutha)



முருங்கை மரம் ஒரு வெப்ப மண்டலத்தை சார்ந்த பயிராதலால் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பண்புகள் உள்ளது. முருங்கை மரத்தின் தண்டுகளில் நீரை சேமிக்கக்கூடிய செல்கள் உள்ளன. மேலும் இவற்றில் இலைவழி நீராவியாதல் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அதிக குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் உதிர்ந்து விடுகின்றது. மேலும் பிஞ்சிலிருந்து உருவாகக் கூடிய காய்களில் பச்சையம் இருப்பதால் ஒளிச்சேர்க்கை நடைபெற்று தனக்கு தேவையான உணவினை தயாரித்துக் கொள்கின்றன. இதனால் வறட்சி காலங்களில் கூட மரத்தில் காய்கள் அதிகம் உதிர்ந்து விடுவதில்லை.

அதிகம் நீர் தேங்காத, வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த களி, செம்புரை மண், மணற்பாங்கான நிலங்களில் முருங்கை நன்கு செழித்து வளர்கிறது. முருங்கையின் வேர்கள் நீர்தேக்கத்தைத் தாங்கிக் கொள்வதில்லை. முருங்கை மரத்திற்கு 10-15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சலாம். மண்ணின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து நீர் பாய்ச்சுதலை அதிகப்படுத்தலாம்.

மண்ணில் ஈரப்பதத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைத்துக் கொண்டால் இலைகள் உற்பத்தி குறைந்து, பூமொட்டுக்கள் உருவாவது அதிகமாகிறது. பூ உற்பத்தியாவதற்கு நீர் பற்றாக்குறை அவசியம். ஆனால் பூக்கள் அதிகம் தோன்றியவுடன் நீர்ப்பாய்ச்சுதலை குறைத்தால் காய்கள் உற்பத்தி பாதிக்கப்படும், மகரந்தக்கருவி மகரந்தச்சேர்க்கை பாதிக்கப்படும். அதனால் மண்ணின் காரணிகளைப் பொறுத்து 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சுவதினால் காய்ப்பிடிக்கும் தன்மையினை அதிகப்படுத்தலாம். காய் முதிரும் பருவத்தில் மிதமான நீர் பாய்ச்சுதல் அவசியம். ஏனெனில் காய்களில் நீர் கோர்த்து அறுவடைக்கு பிந்திய நிலைப்புத் தன்மை பாதிக்கப்படும், காய்கள் முதிரும் பருவத்தில் நீர்ப்பாய்ச்சுதலை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் விதை உற்பத்தி அதிகரிக்கும்.

மிக அதிகமான வறட்சியின்போதும், வெப்பகாலங்களிலும் முருங்கை மரத்திற்கு பச்சை மிராக்கில், கயோலின், பி.எம்.ஏ. போன்ற நீராவியாதலுக்கு எதிரான வேதிப் பொருட்களை தெளிப்பதினால் பூ உதிர்வது தடுக்கப்படுகிறது.

முருங்கை மரத்தின் வேர் பகுதியினை எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருப்பது அவசியம். இதற்கு மண் அனைத்து அடிப்பகுதியை மேடு போன்று ஆக்குவதினால் தண்டு துளைப்பாண் மற்றும் கரையானிலிருந்து பாதுகாக்கலாம். மரத்தின் வேர்கள் மிகவும் மென்மையாக இருப்பதினால் அதிக காற்று அடித்தால் மரம் வேருடன் சாய்ந்து விடுகிறது மேலும் வேர்ப்பகுதியும் பாதிக்கப்படுகிறது. இதற்கு பாத்திகட்டி நீர்ப்பாய்ச்சுவதினாலோ அல்லது வாய்க்கால் வழி நீர் பாய்ச்சுவதினாலோ வேருடன் நீரின் நேரடித் தொடர்பினை தவிர்க்கலாம். இதனால் வேர் பாதிப்படைவது தவிர்க்கப்படுகிறது.

சொட்டு நீர் வழி பாய்ச்சும் பொழுது, சொட்டு நீர் குழாய்களை மரத்திலிருந்து 1 முதல் 1.5 அடி துாரத்தில் வைப்பதினால் வேருக்கு ஏற்படும் பாதிப்பினை குறைக்கலாம். உழவியல் முறைகளான கோடை உழவு, அகலப்படுக்கை அமைத்தல், சொட்டு நீர்ப்பாசனம், நிலப்போர்வை அமைத்தல், இயற்கை உரங்களை அளித்தல், கரிம அமிலங்களை அளிப்பதினால் முருங்கையில் மண், நீர் மேலாண்மையை திறம்படுத்தலாம். இதனால் முருங்கையில் அதிக பூக்கள் உருவாகி உற்பத்தி அதிகரிக்கிறது.

3/16/2018

இயற்கை களைக்கொல்லி -(Iyyarkkai kalaikolli)


மாட்டு கோமியம்+ கடுக்காகொட்டை + எலுமிச்சம்பழம் = இயற்கை களைக்கொல்லி

செய்முறை

3 லிட்டர் கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் உற்றி மழை, வெய்யல்படாமல் ஒரு மாதம் வைத்திருக்கவும். தொட்டியின் மேல் பகுதியை சணல் சாக்கு கொண்டு மூடி வைக்கவும். 3 கிலோ கடுக்காய் கொட்டை( பொடியாக வாங்க கூடாது) வாங்கி( கிலோ 80 ரூபாய்க்கு கிடைக்கிறது) அதை இடித்து வைத்து கொள்ளுங்கள். 1 லிட்டர் கோமியம் (சேகரித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது) எடுத்து அதை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி அத்துடன் இடித்து வைத்த கடுக்காய் கோட்டையை கொட்டி நன்றாக கலக்கவும். அத்துடன் 1 எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும். எலுமிச்சை பழதோலையும் அந்த கலவையில் போட்டு கலக்கவும். இவற்றை 15 நாட்கள் ஊற விடுங்கள். தினமும் இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.

தெளிப்புமுறை

15 நாட்கள் ஊற வைத்த கடுக்காய், எலுமிச்சை கலந்த கலவையை துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஒரு மாதம் ஆனா பழைய கோமியம் 7 லிட்டர் எடுத்து அதில் கலவையை சேர்த்து கலக்கவும்.(களைகள் முற்றி இருந்தால் 5 லிட்டர் சிறுநீர்) கைத்தெளிப்பானை எடுத்து கொண்டு அதில் இந்த கலவையை ஊற்றி களைகளின் அனைத்து பகுதியிலும் படும்படி நன்றாக தெளிக்க வேண்டும். தெளித்த ஒரு வாரத்தில் களைகள் கருக ஆரம்பிக்கும்.

குறிப்பு

கடுக்காய் கொட்டையை உடைக்கும் பொழுது மூக்கை துணியில் கட்டி கொள்ளுங்கள். அதன் துகள்கள் சுவாசகுழாயின் வழியே நமது உடலுக்குள் சென்றால் காய்ச்சல் வரும்.
தெளிப்பிர்க்கு கைத்தெளிப்பானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெளிக்கும் பொழுது பயிரின் மேல் படாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
தெளிப்பிர்க்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்சவேண்டும். தெளித்த பின்பு 5 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கூடாது.

காலை 7.00  மணி முதல் 1.00 மணி வரைதான் தெளிக்க வேண்டும்.

இயற்கை பூச்சி கொல்லிகள்-(Iyarkai poochi kolligal)


1. தாவரப் பூச்சிக் கொல்லிகள்:
தாவரப் பூச்சிக் கொல்லிகள் கிராமங்களில் கிடைக்கும் தாவரங்களான

ஆடாதோடா,
நொச்சி,எருக்கு,
வேம்பு,
சோற்றுக் கற்றாழை,
எட்டிக் கொட்டை
போன்றவற்றைக் கொண்டு, வேக வைக்கும் முறையிலும், ஊறல் முறையிலும் தயாரிக்கப்படுகின்றன.
ஊறல் முறை:

நொச்சி,
ஆடாதோடா,
வேம்பு,
எருக்கன்,
பீச்சங்கு (உண்ணி முள்),
போன்றவற்றின் இலைகள் 2 கிலோ, எட்டிக் கொட்டை 2 கிலோ ஆகியவற்றை இடித்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். அவை மூழ்கும் அளவுக்கு 12 லிட்டர் மாட்டு சிறுநீர், 3 லிட்டர்  சாணக்  கரைசல் ஆகியவற்றில் 7 முதல் 15 நாள்கள் வரை ஊறவிட வேண்டும். இலைகள் கரைந்து கூழ்  ஆகிவிடும். இதில் ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களில் தெளிக்கலாம்.

வேக வைக்கும் முறை:
மேற்கண்ட இலைகள், எட்டிக் கொட்டை தலா 2 கிலோ எடுத்து பாத்திரத்தில் இட்டு,15 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வேக வைக்க வேண்டும். வெந்தபின் சாற்றை வடித்து எடுக்கவேண்டும். ஆறியபின்  அதில்,  ஒரு படி மஞ்சள் தூள் கலந்து 12 மணி  நேரம் ஊற வைக்க வேண்டும்.  இதன்மூலம் கிடைக்கும் வடிசாற்றில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.

பூசண நோய் கட்டுப்பாட்டுக்கு:
மேற்கண்ட சாறில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் முதல் 1 கிலோ வரை கலந்து தெளிக்கலாம்.

2. நுண்ணுயிர் இலைக் கருகல் நோய்களுக்கு:

சோற்றுக் கற்றாழை 3.5 கிலோ,
இஞ்சி 200 கிராம்,
இவற்றுடன் புதினா அல்லது
சவுக்கு இலை
2 கிலோ சேர்த்து மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள் தூள் ஒரு படி கலந்து, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 500 கிராம் அல்லது ஒரு கிலோ கலந்து தெளிக்கலாம்.

3. இயற்கைத் தாவர பூச்சிக் கொல்லி மருந்து–வேப்பங்கொட்டை சாறு:
5 கிலோ வேப்பங் கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி,10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினை பிழிந்து எடுத்து வடிகட்டி, 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

4. இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் செய்வது எப்படி?
இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம்:
தேவையான பொருட்கள் :

பூண்டு – 300 கிராம்,
மண் எண்ணை 150 மிலி.
பூண்டை மண் எண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும் 60 லிட்டர் நீரில் சேர்த்து ஒரு ஏகர் நிலத்தில் பயன் படுத்தலாம்

5. இயற்கை பூச்சி கொல்லியான இஞ்சி- பூண்டு -மிளகாய் கரைசல்
 செய்வது எப்படி?

பூண்டு 1 kg எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரை கிலோ பச்சை மிளகாய் மற்றும் அரை கிலோ இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ள வேண்டும்).
இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6லிட்டர் கரைசல் தயார்.
இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும் தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.இதன் மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும்.
இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை.இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.

6. பெருங்காயம் பூச்சிகளை கட்டு படுத்தும்:
ஒரு ஏகர் நிலத்திற்கு, ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்கு பையில் போட்டு நீர் பாசனம் இருக்கும் கால்வாயில் விட்டு வைத்தால், நீரில் பெருங்காயம் கரைந்து செடிகளுக்கு செல்கிறது.

இந்த முறையால், பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது.

7. இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்

சிறியாநங்கை கஷhயம்3to5%,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல் அல்லது  5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தௌpத்து கட்டுப்படுத்தலாம்.
வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தளிக்க வேண்டும்.
வேப்பங்கொட்டைத் தூளை 300_to_500 கிராம், 300 மில்லி மண்ணென்ணையில் 24 மணி நேரத்திற்கு ஊறவைத்து அந்த வடிநீரை 150 கிராம் காதி சோப்புடன் கலந்து காலை வேளையில் தௌpக்க வேண்டும்.
10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க  வேண்டும்.
இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை உரசி,மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம். இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.
4 சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.
சோற்றுக் கற்றழை சாறை தெளிக்கலாம்.
சாம்பல் தூவலாம்.
300 மில்லி வேப்ப எண்ணெய்,300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்
விளக்கு பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.

8. பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்
வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன.

இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம்  மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி  ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக, ஆச்சரியமூட்டும் உண்மைகள்  கண்டறியப்பட்டுள்ளன.
இலை களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள்,தானியக் கிடங்கில்  உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை.
இப்பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும்  கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன்மைகளை கொண்டுள்ளது.
இதேபோல் கொசு விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
வில்வ விதைகளில் இருந்து பெட்ரோலியம் ஈதரைப் பயன்படுத்தி எண்ணெய் பிரித்து  எடுக்கப்பட்டது. இதனை ஆய்வகச் சூழலில் வனமர இலை உண்ணிகளுக்கு எதிராக  பயன்படுத்திப் பார்த்ததில், சாதகமான விளைவுகள் காணப்பட்டன.
இவற்றின் ஆய்வுமுடிவுகள் மூலம் வில்வ விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எண்ணெய், தேக்கு நாற்றுகளைத் தாக்கி அழிக்கும் இலையுண்ணிகளுக்கு எதிராக செயல்படும் திறன்மிகுந்த உயிர்ம பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த வல்லது என கண்டறியப்பட்டது.
குறிப்பாக தேக்கு செடிகள் மற்றும் இள மரங்களைத் தாக்கும் இலையுண்ணி பெருத்த  பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது.நாற்றங்கால்களிலும் இளவயதுஉடைய மரங்களிலும் முற்றிலுமாக இலைகளைத் தின்றுவிடும் அபாயம் உள்ளது. இவை மரங்களைக்  கொன்றுவிடுவதில்லை. மாறாக, மரத்தின் வளர்ச்சி விகிதத்தைக் கடுமையாக பாதிக்கிறது.  இந்தியாவின் அனைத்து தேக்கு தோப்புகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை இவை.  ஒரு ஆண்டில் எப்போது தாக்கும் என ஊகித்து அறிய இயலாதவை.  எனவே இந்த இலையுண்ணிகளை கட்டுப்படுத்துவது மர சாகுபடியாளர்களுக்கு இருந்துவரும் மிகப்பெரிய சவாலாகும்
.
9. அக்னி அஸ்திரம் – இயற்கை முறை பூச்சி கொல்லி:
தேவையான பொருட்கள் :

கோமியம் 20 கிலோ
புகையிலை 1 கிலோ
பச்சை மிளகாய் 2 கிலோ
வெள்ளைப்பூண்டு 1 கிலோ
வேப்பிலை 5 கிலோ
இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்)

வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும்.

அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.

10. நீம் அஸ்திரா:  பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :
1.     நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ
2.     நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்
3.     வேப்பங்குச்சிகள் மற்றும்
4.     வேப்ப இலை 10 கிலோ
இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.
இந்த கரைசலை எத்தனை நாட்கள் வைத்திருக்க முடியும்?
குறைந்த பட்சம் அறுபது நாட்கள் வைத்திருக்கலாம்

11. சுக்கு அஸ்திரா: பூஞ்சாணக் கொல்லி
தேவையான பொருட்கள் :
1.     சுக்குத்தூள் 200 கிராம்
2.     பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர்
சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கு ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

12. பிரம்மாஸ்திரம் :  அசுவனி   பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :
1.     நொச்சி இலை 10 கிலோ
2.     வேப்பம் இலை 3 கிலோ
3.     புளியம் இலை 2 கிலோ
4.     கோமியம்   10 லிட்டர்
 இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1ஏக்கருக்கு தெளிக்கலாம்.
மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவனி போன்ற பூச்சிகள் அண்டாது.

13.பீஜாமிர்தம்: வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்க
தேவையான பொருட்கள் :
1.     பசு மாட்டு சாணி 5  கிலோ
2.     கோமியம் 5 லிட்டர்
3.     சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்
4.     மண் ஒரு கைப்பிடி அளவு
5.     தண்ணீர் 20 லிட்டர்
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.
விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.
பயன்கள் :
வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்கப்படும்.

14. வேம்பு புங்கன் கரைசல்: பூச்சி விரட்டி
தேவையான பொருட்கள் :-
1.     வேப்பெண்ணை – ஒரு லிட்டர்
2.     புங்கன் எண்ணை – ஒரு லிட்டர்
3.     கோமியம் (பழையது) –  பத்து லிட்டர்
4.     காதி சோப்பு கரைசல் – அரை லிட்டர்
இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.

15. மாவுப்பூச்சி அழிப்பது எப்படி?

இயற்கை எதிரிப்பூச்சிகளாக பொறி வண்டு ஏக்கருக்கு 500 வண்டுகளை தோட்டத்தில் விடவேண்டும்.
வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவிகிதம் தெளிக்க வேண்டும்.
பச்சை மிளகாய் 250 கிராம், இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுத்து 300 மிலியை 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும்

வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி-(STRAW IN THE BANANA)


வறட்சியை சமாளிக்க, வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லியை சாகுபடி செய்வதில், புன்செய்புளியம்பட்டி பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தாசம்பாளையம், பனையம்பள்ளி, அண்ணாநகர், நால்ரோடு மற்றும் பவானிசாகர் பகுதிகளில், 3,000 ஏக்கரில் ஜி-9, நேந்திரன், கதிலி ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் ஒரே பயிரை நம்பி இருக்காமல், பல பயிர்களை சாகுபடி செய்வது தற்போது விவசாயத்தில் அதிகரித்து வருகிறது.

கோடை துவங்கியுள்ள நிலையில், சுற்றுவட்டார விவசாயிகள், வறட்சியை சமாளிக்க, வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர். தனியாக உரம் போடுவதும், பாசனம் செய்வதும் தவிர்க்கப்படுகிறது. இதனால், மண்வளம் அதிகரிப்பதுடன், களைகளும் கட்டுப்படுத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:

குளம், குட்டை உள்ளிட்ட நீராதாரங்கள் முற்றிலும் வற்றியுள்ளன. தற்போது, நிலத்தடி நீர் உபயோகித்தும், சொட்டு நீர் பாசனம் மூலமும், விவசாயம் செய்து வருகிறோம்.

கோடை காலத்தில் இந்த நீரும் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. பாசனத்தில் உபரி நீரை பயனுள்ளதாக மாற்ற, ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம்.

அந்த வகையில், வாழைக்கு நீர் தேவை அதிகம் என்பதால், ஊடுபயிராக செண்டுமல்லியை சாகுபடி செய்துள்ளோம்.

இதனால், வழக்கமாக வாழைக்கு விடும் பாசன நீரிலேயே, செண்டுமல்லிக்கும் நீர் பாய்ந்து விடும்.

வாழையின் அருகில், செண்டுமல்லி இருப்பதால், பூச்சிகளால் வாழைகளை நோய் தாக்காது.

வாழை சாகுபடி செய்வதால் ஏக்கர் ஒன்றுக்கு, ஆறு டன் முதல் எட்டு டன் வரை உற்பத்தி கிடைக்கிறது.

செண்டுமல்லி சாகுபடியில் கிடைக்கும், உபரி வருமானத்தில் ஆண்டுபயிரான வாழைக்கு உரமிடுதல், களை வெட்டுதல் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டமுடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.